தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது.
தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் நேற்று முன்தினம் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் உடன் ஆலோசனை மேற்கொண்டார். அந்த ஆலோசனையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், டி ஆர் பாலு, கே என் நேரு, தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி ஆகியோர் உடன் இருந்தனர்.
தற்போது தினேஷ் குண்டுராவிற்கு கொரோனா வைரஸ் அவரைச் இருப்பது உறுதியாகியுள்ளது.
இதைப்பற்றி தினேஷ் குண்டுராவ் வரின் ட்விட்டர் பதிவில்; கொரோனா பரிசோதனையில் செய்ததில் எனக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. என்னுடன் முதன்மை தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு பதிவிட்டுள்ளார். மேலும், மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
மேலும், தினேஷ் குண்டுராவிற்கு உறுதியான நிலையில், ஆலோசனையில் திமுக தலைவர் ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன், டி ஆர் பாலு, கே என் நேரு, தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி ஆகிய அனைவருக்கும் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.