இரண்டாம் கட்ட பரிசோதனையில் அமைச்சர் கே.பி அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி!

Filed under: தமிழகம் |

உயர்கல்வித்துறை அமைச்சர் கே பி அன்பழகனுக்கு நடத்தப்பட்ட இரண்டாம் கட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகி உள்ளது. இந்த தகவலை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனை அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

இதனைப்பற்றி மியாட் மருத்துவமனை கூறியது: முதலில் அமைச்சருக்கு அறிகுறி இல்லை. சிடி ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்ததில் அவர் நன்றாக இருந்தார். பின்னர் இரண்டாம் கட்ட பரிசோதனை நடப்பட்டத்தில் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. தற்போது அவருக்கு இரும்பல் உள்ளதால் அதற்கான சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது என மருத்துவமனை தெரிவித்துள்ளது.

மேலும், இதற்கு முன்பு அமைச்சர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை என்பதை அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.