திருச்சி சுப்பிரமணியபுரத்தில், திமுக அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்.

Filed under: தமிழகம் |

திருச்சி சுப்பிரமணியபுரத்தில், திமுக அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்.

மாநகர செயலாளர் மதிவாணன் பங்கேற்பு.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டம் கிழக்கு மாநகரம் பொன்மலை பகுதி திமுக சார்பில் திமுக அரசின் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம்
47 மற்றும் 47 ஏ வட்டக் கழகத்தின் சார்பில் 47 வது வட்டச் செயலாளர்
நாகவேணி வே. மாரிமுத்து , 47ஏ வட்டாச் செயலாளர் மனோகர் ஆகியோர் தலைமையில் சுப்பிரமணியபுரத்தில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

இந்த பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநகர செயலாளரும், மண்டல தலைவருமான மதிவாணன் , தலைமைக் கழக பேச்சாளர் பசும்பொன் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்
கூட்டத்தில் பொன்மலை பகுதி செயலாளர் இ.எம் தர்மராஜ் வரவேற்புரை ஆற்றினார்.  47,47 ஏ தலைவர் வட்டக் கழக துனை செயலாளர்கள் வெர்ஜினியா பிரான்சிஸ் உஷாபாரதி ஆகியோர் நன்றி கூறினர் . இந்த பொதுக்கூட்டத்தில்
மாவட்ட துணை செயலாளர் அ.த.த.செங்குட்டுவன் மாநகர கழக நிர்வாகிகள் நூர்கான் பொன்செல்லையா சரோஜினி வழக்கறிஞர் பன்னீர்செல்வம் வட்டகழகச் செயலாளர்கள் வரதராஜன் தமிழ்மணி சுப்பிரமணி முருகன் பரமசிவம் தலைமைக்கழக பேச்சாளர்கள் ஏர்போர்ட் பொன்னுச்சாமி கோவிந்தராஜ் உட்பட கழக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.