அமைச்சர்கள் பெரிய கருப்பன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்பு:

Filed under: தமிழகம் |

அமைச்சர்கள் பெரிய கருப்பன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்பு: திருச்சியில் இன்று திமுக பொதுக்கூட்டம்.

மாநகர செயலாளர் மு.மதிவாணன் அறிக்கை.

இதுகுறித்து திருச்சி கிழக்கு மாநகர திமுக செயலாளர் மு.மதிவாணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருச்சி தெற்கு மாவட்டம், திருச்சி கிழக்கு மாநகர மலைக்கோட்டை பகுதி திமுக சார்பாக இன்று சின்னக் கடை வீதியில் இந்தியன் வங்கி அருகில் நடைபெறும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மலைக்கோட்டை பகுதிசெயலாளர் மருந்துக்கடை ஆர். மோகன் தலைமையில் நடக்கிறது. கூட்டத்துக்கு சிறப்பு அழைப்பாளராக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், மாவட்ட கழக செயலாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளார்கள். இந்த கூட்டத்தில் மாவட்ட மாநகர,பகுதி,வட்ட கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பெரும் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன் அறிக்கையில் தெரிவித்து உள்ளார் .