துரை தயாநிதி உடல் நலக்குறைவு வேலூரில் உள்ள பிரபல தனியார் ஆஸ்பத்திரியில் இன்று அனுமதி.

Filed under: சென்னை |

தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி. இவர் முன்னாள் மத்திய அமைச்சராக இருந்தார். இவரது மகன் துரை தயாநிதி. இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து துரை தயாநிதி சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக துரை தயாநிதியை வேலூரில் உள்ள பிரபல தனியார் ஆஸ்பத்திரியில் இன்று சேர்த்தனர். அவர் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.