ஒருநாள் போட்டியில் அதிக ஸ்டம்பிங் செய்து விக்கெட்டுகள் எடுத்து ஐந்து சிறப்பான விக்கெட் கீப்பர்கள்!

Filed under: விளையாட்டு |

கிரிக்கெட் போட்டிகளில் விக்கெட் கீப்பராக பணிபுரிவது மிகவும் கடினமானது. எந்த சமயத்தில் பந்து வரும் என்று பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும். பேட்ஸ்மேன் பந்து ஒரு நொடி தவறிவிடும் சமயத்தில் விக்கெட் கீப்பர் பந்தை ஸ்டம்பிங் செய்ய வேண்டும்.

இந்நிலையில் கிரிக்கெட்டில் ஒருநாள் போட்டிகளில் அதிக ஸ்டம்பிங்கை எடுத்த ஐந்து முக்கிய விக்கெட்டு
கீப்பர்கள்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், மிஸ்டர் கூல் என்று அழைக்கப்படுபவர் எம்எஸ் டோனி. இவர் 13 ஆண்டுகளாக இந்திய அணிக்கு விக்கெட் கீப்பராக பணியாற்றியுள்ளார். அதில் 350 போட்டிகளில் 123 ஸ்டம்பிங்கை செய்துள்ளார். இவர் தான் முதல் இடத்தில் உள்ளார்.

இலங்கை அணியின் அதிரடி பேட்ஸ்மேன் சிறப்பான விக்கெட் கீப்பர் குமார் சங்ககாரா. இவர் இடதுகை பேட்ஸ்மேன் ஆவார். 404 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 99 ஸ்டம்பிங்கை செய்துள்ளார்.

1990களில் இலங்கை அணியின் விக்கெட் கீப்பர் கழுவிரதனா. இவர் 189 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 75 ஸ்டம்ப்ங்கை செய்துள்ளார்.

பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பராக இருந்தவர் மொயின் கான். 1990 முதல் 2004ஆம் ஆண்டு வரை பாகிஸ்தான் அணிக்காக விக்கெட் கீப்பராக இருந்தவர். இவர் 219 போட்டிகளில் விளையாடி 73 ஸ்டம்பிங்கை செய்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் அதிரடி பேட்ஸ்மேனும், விக்கெட் கீப்பராக இருந்தவர் ஆடம் கில்கிறிஸ்ட். இவர் 287 போட்டிகளில் விளையாடி 55 ஸ்டம்ப்ங்கை செய்துள்ளார்.

இவர்கள் ஐந்து நபர் தான் விக்கெட் கீப்பராக இருந்து பல ஸ்டம்ப்ங்கை செய்துள்ளனர்.