மதுரையில் நாளை முதலில் வரும் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கில் அத்தியாவசியப் பொருட்கள் விற்கும் கடைகள், பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை இயங்கும். உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பார்சல்கள் மட்டும் தருவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.