இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் மற்றும் பிசிசிஐயின் தலைவர் சவுரவ் கங்குலி. இவருடைய மூத்த சகோதரர் சினேகாஷிஷ் கங்குலி. இவர் வங்காள கிரிக்கெட் கூட்டமைப்பின் செயலாளராக உள்ளார்.
இந்நிலையில் சவுரவ் கங்குலியின் மூத்த சகோதரர் சினேகாஷிஷ் கங்குலிக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பின்னர் அவரிடம் இருந்து அவருடைய மனைவிக்கும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது.
இந்த தகவலை மேற்குவங்காள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற பரிசோதனையில் சினேகாஷிஷ் மாமனாருக்கும் மற்றும் மாமியாருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சவுரவ்வின் குடும்பத்தில் இதுவரை நான்கு பேர் கொரோனா பாதிக்கப்ட்டுள்ளனர்.