இந்தியாவிற்குள் அத்துமீறி நுழைய முயன்ற மூன்று பாகிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

Filed under: இந்தியா |

ஜம்மு-காஷ்மீர் ரஜோரி மாவட்டத்தில் உள்ள இந்திய கட்டுப்பாட்டு எல்லையில் அத்துமீறி நுழைவதற்கு முயன்ற மூன்று பாகிஸ்தான் தீவிரவாதிகள் பாதுகாப்பு படை வீரர்களால் சுட்டுக் வீழ்த்தப்பட்டனர்.

கடந்த 28 ஆம் தேதியில் முதல் நவுஷராவில் உள்ள கட்டுப்பாட்டு எல்லை வாயிலாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் அத்து மீறி இந்திய எல்லைக்குள் நுழைத்துள்ளதாக கிடைத்த தகவலை கொண்டு பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர்.

அந்த சமயத்தில் பயங்கர ஆயுதங்களுடன் தென்பட்ட மூன்று தீவிரவாதிகளை சுட்டு கொன்றுவிட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்தது.

இந்த கொரோனா வைரஸ் சமயத்தில் அதிகமான தீவிரவாதிகளை இந்தியாவிற்குள் அத்துமீறி நுழைய பாகிஸ்தான் செய்தாகவும் அவர்களை கண்டறிந்து அழிக்கும் பணி நடவடிக்கை எடுக்கப்படும் என ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தது.