இந்தியா உலகையே வழிநடத்த வேண்டும்; நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை!

Filed under: இந்தியா |

கொரோனா வைரஸ்க்கு எதிரான போராட்டத்தில் நாம் கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றி நாட்டு மக்களிடம் உரையை துவங்கினர்.

நம் நாட்டின் 74 வது சுதந்திர தினம் இந்தியா முழுவதும் இன்று சனிக்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சுதந்திர தினத்தையொட்டி டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதை அடுத்து 7.30 மணி அளவில் தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களிடம் சுதந்திர தின உரையை தொடங்கினார்.

அந்த உரையாடலில், நம் நாட்டு மக்கள் அனைவருக்கும் என்னுடைய சுகாதார தின வாழ்த்துக்கள். பல பேரின் உயிர் தியாகத்தினால் சுதந்திரம் கிடைத்தது. நம் நாட்டின் விடுதலைக்காக தியாகம் செய்தவர்களுக்கு இன்று மரியாதை செலுத்திகிறோம்.

கொரோனாவை எதிர்த்து போராடும் அனைவருக்கும் பாராட்டுக்கள். 130 கோடி மக்களின் உறுதியை கொண்டு கொரோனாவை வெல்வோம் என நம்பிக்கை உள்ளது. இந்தியாவில் பல இடங்களில் மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாடு என்கிற உறுதியை கொண்டு சவால்களை வெல்வோம். அடுத்தாண்டு வரும் 75ஆவது சுதந்திரத்தை சிறப்பாக கொண்டாட வேண்டும்.

நம் நாட்டின் இளைஞர்கள் 20 வயதிலேயே சொந்த காலில் நிற்க வேண்டும். உலக பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கு அதிகமாக இருக்க வேண்டும். உலகை வழி நடத்துவதற்கு இந்தியா வர வேண்டும். நம்முடைய விவசாயத்தை தரம் உயர்த்த வேண்டும். அடுத்து இரண்டு ஆண்டுகளில் எப்படி முன்னேற வேண்டும் முடிவு செய்ய வேண்டும். நம்புடைய கலாச்சாரத்திலும் மற்றும் பாரம்பரியத்திலும் மிகப் பெரிய வரலாறு இருக்கிறது. இந்தக் கொரோனா சமயத்தில் 80 கோடி இந்தியர்களுக்கு இலவச உணவுகள் வழங்கப்பட்டுள்ளது.