நியூசிலாந்து நாட்டின் பொது தேர்தலில் ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சி 49.2 சதவீத வாக்குகளை பெற்றது. பின்பு நாடாளுமன்றத்தில் 120 இடத்துக்கு 64 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. இதனால் ஜெசிந்தா ஆர்டன் இரண்டாவது முறையாக பிரதமரானார்.
இதை பற்றி கூறிய ஜெசிந்தா ஆர்டன்; அடுத்து வரும் மூன்று வருடத்திற்கு அதிகமான வேலைகள் உள்ளது. கொரோனா வைரஸை சிறப்பாக கட்டுக்குள் கொண்டுவருவோம் என தெரிவித்துள்ளார்.
மேலும், ஜெசிந்தாவுக்கு பல தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.