அமெரிக்கா ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார் நவோமி ஒசாகா!

Filed under: விளையாட்டு |

அமெரிக்கா ஓபன் டென்னிஸ் போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதி போட்டியில் ஜப்பானை நாட்டை சேர்ந்த நவோமி ஒசாகா, பெலாரஸின் விக்டோரியா அஸரென்காவை எதிரிகொண்டார்.

முதல் செட்டில் 6-1 என்கிற புள்ளி கணக்கில் அஸ்ரென்கா கைப்பற்றினார். இதனால் இவர் சாம்பியன் பட்டத்தை வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இரண்டாவது செட்டில் அதிரடியாக விளையாடிய நவோமி ஒசாகா 6-3 என்கிற புள்ளி கணக்கில் கைப்பற்றினார்.

அடுத்து மூன்றாவது செட்டில் மீண்டும் அதிரடியாக விளையாடி நவோமி ஒசாகா 6-3 என்கிற புள்ளி கணக்கில் கைப்பற்றினார். இதனால் 1-6, 6-3, 6-3 என்கிற புள்ளி கணக்கில் அஸ்ரென்காவை வீழ்த்தி நவொமி ஒசாகா அமெரிக்கா ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை வெற்றி பெற்றார்.

மேலும், இரண்டாவது முறையாக அமெரிக்கா ஓபன் டென்னிஸ் (2018, 2020) சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.