விவசாய பயிர்களை அழிக்கும் வெட்டுக்கிளிகள் ராஜஸ்தானிலிருந்து தற்போது மத்திய பிரதேசத்துக்கு சென்றுள்ளது. இதனிடையே மத்திய பிரதேசத்தில் கடந்த 27 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வெட்டுக்கிளிகளின் தாக்குதல் அதிகமாக உள்ளது என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் பல பகுதிகளில் வருட வருடம் வெட்டுக்கிளிகள் கூட்டம் வருவது வழக்கம். இந்த வெட்டுக்கிளிகள் விவசாய பயிர்களை உண்ணும் தன்மை உள்ளதால் அவற்றை அழித்து விடுகிறது. தற்போது ராஜஸ்தானில் உள்ள பல பகுதிகளிலிருக்கும் பயிர்களை அழித்துவிட்டு வெட்டுக்கிளிகள் தற்போது மத்திய பிரதேசத்தில் சென்றுள்ளது. அதில் முதல்வர் சிவ்ராஜ் சிங்கின் தொகுதி செஹூரில் உள்ள புத்னி பகுதியில் சென்று தற்போது போபால் அருகில் உள்ளன.
இதனால் கிராமப் பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு வெட்டுக்கிளிகளின் பற்றி தொடர்ந்து விழிப்புணர்வை மாநில வேளாண்துறை ஆலோசனை அளித்துள்ளது. மேலும் இரவு 7 மணிமுதல் 9 மணிவரை வெட்டுக்கிளிகள் எந்த பகுதியிலும் ஓய்வு எடுக்கலாம். அதனால் விவசாயிகள் அவற்றின் இயக்கத்தை கண்காணிக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் டிராக்டர்கள், தீயணைப்பு வாகனங்கள் மூலம் ரசாயன ஸ்ப்ரேஸ்ப்ரேக்களை கொண்டு வெட்டுக்கிளிகளை அழிக்கும் முயற்சியை செய்து வருகின்றன. பிறகு இதனை கட்டுப்படுத்தாவிட்டால் 800 கோடி ரூபாய் மதிப்புள்ள பயிர்களை அழித்து விடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.