தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் அமேசானில் வெளியாகிறதா?

Filed under: சினிமா |

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள படம் மாஸ்டர். இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இதில் வில்லன் கதாபாத்திரத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து உள்ளார். மேலும், கதாநாயகியாக மாளவிகா மோகனும், முக்கிய கதாபாத்திரங்களில் சாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்பட பலர் நடித்து உள்ளனர்.

மாஸ்டர் படம் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீசாக இருந்தது. ஆனால், இந்த கொரோனா வைரஸ் காரணத்தினால் திரையரங்குகள் மூடப்பட்டதால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தற்போது மாஸ்டர் திரைப்படம் அமேசான் ப்ரைமில் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இந்த தகவலை படக்குழு மறுத்துள்ளது.

மேலும், மாஸ்டர் படம் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்து தியேட்டர்கள் திறக்கப்பட்ட பிறகு தான் ரிலீஸாகும் என கூறப்படுகிறது.