உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் டெல்லி மாநிலத்தில் 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 1,214 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அடுத்த ஆறு நாளில் பரிசோதனையை மூன்று மடங்கு அதிகரிக்கப்படும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் கொரோனா நிலவரத்தை பற்றி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், டெல்லி ஆளுநர் அனில் பைஜால், முதலமைச்சர் கெஜ்ரிவால் ஆகியரோடு அமித்ஷா ஆலோசனை மேற்கொண்டார்.
இதையடுத்து முதல் கட்டமாக அடுத்து வரும் இரண்டு நாட்களில் கொரோனா பரிசோதனையை இரண்டு மடங்காக அதிகரிக்கப்படும் என அமித்ஷா கூறியுள்ளார். மேலும், சில நாளில் டெல்லியில் இருக்கும் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில் கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
டெல்லி மாநிலத்தில் கொரோனா நோயாளிக்கு படுக்கை வசதி குறைபாட்டை சமாளிக்க 500 ரயில் பெட்டிகளை கொடுக்க மத்திய அரசு முடிவு எடுத்துள்ளதாகவும் மற்றும் 8000 படுக்கை வசதிகள் அதிகமாக கிடைக்கும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.