மத்திய அமைச்சர் கைலாஷ் சவுத்ரி கொரோனா தொற்றால் பாதிப்பு!

Filed under: இந்தியா |

மத்திய வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் கைலாஷ் சவுத்ரிக்கு கொரோனா வைரவ இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைப்பற்றி அவருடைய ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டது: எனக்கு சிறிய காய்ச்சல் இருக்கிறது. சுவாசிப்பதிலும் சிக்கல் உள்ளது. இந்த அறிகுறிகளை அடுத்து கொரோனா பரிசோதனை செய்ததில் எனக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது.

இதை தொடர்ந்து நான் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுளேன். மக்கள் யாரும் கவலை கொள்ள வேண்டாம். முக்கியமாக ஏதாவது இருந்தால் என்னை அழைக்கலாம்.

மேலும், கடந்த சில நாட்களில் என்னுடன் தொடர்பு கொண்ட அனைத்து நண்பர்களும் தயவுசெய்து தனிமைப்படுத்தி கொண்டு கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். எனது உடல்நிலை பற்றி நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.