இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் மற்றும் விக்கெட் கீப்பர் மகேந்திரசிங் டோனி. இவர் ஐபில் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் விளையாடி வருகிறார். நேற்று டோனி அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இவரின் இந்த பதிவுக்கு உலக முழுவதும் உள்ள ரசிகர்கள் மிக வேதனையில் உறைந்தனர்.
இந்நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டோனியை புகழ்ந்துள்ளார். அவருடைய ட்விட்டர் பதிவில்:
சர்வதேச போட்டிகளில் இந்தியா அணியை சிறப்பாக வழிநடத்தி, மூன்று கோப்பையை வென்ற ஒரே ‘கூல் கேப்டன்’ டோனி தான். டோனியின் பெயர் வரலாற்றில் பொறிக்கப்படும். இவரின் புகழ் இந்தியர்களுக்கு பெருமை சேர்க்கும் என பதிவிட்டுள்ளார்.