காந்தி மார்க்கெட்டில் பரிதாபம். 2வது மாடியில் இருந்து தவறி விழுந்து கொத்தனார் பலி. போலீசார் விசாரணை.
திருச்சியைஅடுத்த திருப்பராய்த்துறை கீழத் தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்இவர் திருச்சி தாராநல்லூர்ரை சேர்ந்த சதீஷ்குமார் என்ற என்ஜினியரிடம் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் திருச்சிதாராநல்லூர் தனரத்தனம் நகர் பகுதியில் புதிதாக ஒரு கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. அந்த கட்டிட பண்டல் பாலகிருஷ்ணன் வேலை பார்த்துக்கொண்டு இருந்தார். புதிய கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் பாதுகாப்பு இன்றி கான்கிரீட் வேலை செய்து கொண்டிருந்தார். அப்பொழுது துரதிஷ்டமாக தவறி இரண்டாவது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
இதில் அவர் தலையில் பலத்த காயம் அடைந்து ஆபத்தான நிலையில் திருச்சி அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு சிகிச்சை
பலனின்றி பாலகிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.