இன்று விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகைக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மத்திய அரசின் வழிகாட்டுதல் படி மாநிலங்களில் கொரோனா காரணத்தினால் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைப்பது, ஊர்வலம் ஆகிய விஷயங்களுக்கு அனுமதி வழங்கவில்லை. இதனால் மக்கள் வீட்டிலேயே விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி வருகின்றனர்.
பிரதமர் மோடி அவரின் ட்விட்டர் பக்கத்தில் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அவரின் பதிவில்; கணேஷ் சதுர்த்தியின் புனித பண்டிகைக்கு வாழ்த்துக்கள். பகவான் ஸ்ரீ கணேஷின் ஆசீர்வாதம் எப்போதும் நம்மீது இருக்கட்டும். எல்லா இடங்களிலும் மகிழ்ச்சியும் செழிப்பும் இருக்கட்டும் என பதிவிட்டுள்ளார்.