பிரதான் மந்திரி ஜன தன் யோஜனா திட்டம் துவங்கி ஆறு வருடங்கள் முடிந்ததற்கு பிரதமர் மோடி அவருடைய ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
பிரதான் மந்திரி ஜன தன் யோஜனா திட்டத்தால் பல குடும்பங்கள் பாதுகாப்பாக இருப்பதாக பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். அடித்தளமான பயனாளிகள் கிராமங்களில் இருப்பதாகவும் தெரிவித்தார். அனைவருக்கும் வங்கிக்கணக்கு தொடங்கப்பட்டதன் மூலம் பெண்களுக்கு பயன் அளிப்பதாகும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த திட்டத்திற்கு சிறப்பாக உழைத்தவர்களுக்கு நன்றி எனவும் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.