பிரதமர் ஏழை மக்களின் நல வாழ்வு திட்டத்தின் மூலம் இதுவரை 42 கோடி ஏழை மக்களுக்கு 53,248 கோடி வழங்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.
நேற்று வரையில் இந்த திட்டத்தின் மூலம் பல பிரிவினருக்கு கொடுக்கப்பட்டுள்ள நிதிகளை பட்டியலிட்ட நிதியமைச்சகம் 8.19 கோடி விவசாயிகளுக்கு முதல் கட்டமாக 16,394 கோடி கொடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
ஏழைப்பெண்களின் வங்கி கணக்கில் ஜன்தன் திட்டத்தின் மூலம் இரண்டாவது கட்டமாக ரூபாய். 20,344 கோடி செலுத்தப்பட்டுள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் முதியவர்கள், கணவனை இழந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 2.81 கோடி பேருக்கு 2,814.5 கோடி மற்றும் 2.3 கோடி பேரான கட்டுமான தொழிலாளர்களுக்கு 4,312.82 வழங்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.