ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டை தெரிவித்தார்.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் பயன் அடைந்த பயனாளிகளின் எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டியது. இது அனைத்து இந்தியர்களுக்கு பெருமையை அளிக்கும். இரண்டு ஆண்டுகளுக்குள், இந்த முயற்சி பல உயிர்களுக்கு சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து பயனாளிகளையும் அவர்களது குடும்பத்தினரையும் வாழ்த்துகிறேன். அவர்களின் நல்ல ஆரோக்கியத்துக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன்.
மேலும், நான் ஆயுஷ்மான் பாரத் பயனாளிகளுடன் உரையாடுவேன். துரதிர்ஷ்டவசமாக, இந்த கொரோனா சமயத்தில் என்னால் முடியவில்லை. ஆனால் 1 கோடி பயனாளியான மேகாலயாவைச் சேர்ந்த பூஜா தாபாவுடன் நான் தொலைபேசி தொடர்பு இதனை பற்றி உரையாடினோம்.