கொரோனா வைரஸ் தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் பேசியது: சென்னையை பொருத்தவரை மக்களின் ஒத்துழைப்பு மிகவும் தேவையானது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை தொடுவதால் வாய், மூக்கு வழியாக வைரஸ் பரவுகிறது.
கோடம்பாக்கம், வளசரவாக்கம் மண்டலம் சவாலாக இருக்கிறது. இந்த மண்டலங்களில் வைட்டமின் மாத்திரைகள் மற்றும் கபசுர நீர் வழங்கி வருகிறோம். தேனாம்பேட்டை, தண்டையார்பேட்டை பகுதியில் கொரோனா கட்டுக்குள் வந்தது. மக்கள் முக கவசம் கை கழுவுவது மிகவும் அவசியமானது.
ராயபுரம் மண்டலத்தில் தான் வைரஸின் தாக்கம் அதிகமாக உள்ளது. அங்கு பத்து பகுதிகளைக் கண்டு பிடிக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மக்களின் ஒத்துழைப்பு மிகவும் கட்டாயமானது.
இவ்வாறு அவர் கூறினார்.