ஐ.ஏ.எஃப் தினத்தை முன்னிட்டு போர் வீரர்களுக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து!

Filed under: இந்தியா |

இன்று இந்திய விமான படையின் 88வது ஆண்டு தினம் இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதற்கு இந்திய விமான படையின் போர் வீரர்களுக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார்.

அவருடைய ட்விட்டரில் பதிவில்; இன்று விமானப்படையின் 88ஆம் ஆண்டு தினத்தையொட்டி விமான வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது வாழ்த்துக்கள். 88 ஆண்டுகள் விமானப்படை வீரர்களின் அர்ப்பணிப்பு, தியாகம் ஆகியவை சிறப்பானது. இது அணைத்து ஐ.ஏ.எஃப் வீரர்களின் பயணத்தையும் மற்றும் வலிமையும் குறிக்கிறது.

இந்திய விமான படை நமது தேசத்தின் வானத்தை பாதுகாக்கும் எனவும் எப்போதும் நீல வானத்தை காக்கும் வேலையை செய்வார்கள் எனவும் நம்புகிறேன்.