ரேஷன் அட்டைகாரர்களுக்கு பிப்ரவரி மாதம் முதல் சிறு கடன் உதவியாக ரூபாய் 50 ஆயிரம் வழங்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
திருச்சியில் நடந்த ஆலோசனை கூட்டம் முடிந்த பின் நிருபர்களிடம் பேசிய என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர்; அதில் அவர் கூறியது: இந்த ஆண்டு 2,564 கோடி ரூபாய் பயிர் கடனாக ஒதுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு கூட்டுறவு வங்கியில் ரூபாய் 50,000 வரை கடன் உதவி பெறலாம் என்பதில் சிக்கல் உள்ளது என மக்கள் அளிக்கின்றனர் என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் செல்லூர் ராஜு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் துவங்கப்பட்ட திட்டத்தில் கொடுக்கப்பட்ட கடன் உதவியை அதிகரிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.