சீனாவில் இருந்து பரவிய கொரோன வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸால் அமெரிக்கா, இந்தியா, ரஷ்யா ஈரான் போன்ற நாடுகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது இங்கிலாந்தில் செப்டம்பர் மாதம் பள்ளிகள் திறக்க வேண்டும் என அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் வலியுறுத்தியுள்ளார்.
இதனைப்பற்றி போரிஸ் ஜான்சன் கூறியது: இந்த கொரோனா வைரஸ் காரணத்தினால் கடந்த மார்ச் மாதம் முதல் இங்கிலாந்து நாட்டில் பள்ளிகள் மூடப்பட்டு உள்ளது. தற்போது இங்கிலாந்தில் கொரோனா பரவுதல் குறைந்து வருகின்றது. இதனால் பள்ளிகளில் மூடி இருப்பது நல்லது கிடையாது. பள்ளிகள் திறக்கப்பட்டால் மாணவர்கள் முககவசம் மற்றும் சமூக இடைவெளி ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும். மாணவர்களின் படிப்பு மிகவும் முக்கியமானது.
இதற்கு மேல் ஊரடங்கு தொடர்ந்தாலும் பள்ளிகள் மூடப்படும் விஷயம் இறுதியாக பட்சமாக இருக்கும். மாணவர்கள் தங்களின் படிப்பை தவறவிட்டால் பெரும் பிரச்சினைகள் ஏற்ப்படும். இதனால் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் படிப்பை தொடர வேண்டுமென தெரிவித்துள்ளார்.