அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கொரோனா தொற்றால் பாதிப்பு!

Filed under: தமிழகம் |

அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டதுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருவதை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைவருக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

முதல்வர் உடன் விழாவில் கலந்து கொள்ளவிருந்த அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது.

இதனை தொடர்ந்து, சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வருகிறார்.

இதற்கு முன்பே அமைச்சர்கள் செல்லூர் ராஜு, தங்கமணி, கே.பி.அன்பழகன், நிலோபர் கபில் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.