ரசிகர்களின் ஆதரவு தான் நாங்கள் போட்டியில் சாதிக்க உதவும் – ரோகித் சர்மா!

Filed under: விளையாட்டு |

மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடக்கும் போது ரசிகர்களின் சத்தம் தான் எங்களை போட்டியில் சாதிக்கத் தூண்டும் என இந்திய அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரோகித் சர்மா. கடந்த 2007 ஆம் ஆண்டு டர்பனில் நடைபெற்ற டி20 உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது.

அந்தப் போட்டியில் ரசிகர்கள் கொடுத்த ஆதரவு பற்றி ரோகித் சர்மா கூறியது: கடந்த 2007ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 உலக கோப்பை அரை இறுதிப் போட்டியின் போது நாங்கள் தங்கியிருந்த ஓட்டலுக்கு வெளியே நின்றிருந்த ரசிகர்களின் கூட்டத்தை கண்டு வியந்தேன்.

இந்த அளவு ஒரு கூட்டத்தை நான் பார்த்ததில்லை. அப்போது எனக்கு வெற்றியின் மகிழ்ச்சி கொடுத்தது. போட்டியின் போது ரசிகர்கள் கொடுக்கும் ஆதரவும், உற்சாகமும் அணியை வெற்றி பெற முக்கியமாக இருக்கும் என்பதை உணர்ந்தேன்.

இவ்வாறு ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.