Home » Posts tagged with » medicine

கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்கவிளைவு; உண்மையை கூறிய நிறுவனம்?

ஆஸ்டிராஜெனிகா நிறுவனம் இந்தியாவில் கொரோனாவுக்காக செலுத்தப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்கவிளைவுகள் ஏற்படும் வாய்ப்புள்ளதை இறுதியாக ஒப்புக் கொண்டுள்ளது. உலகம் முழுவதும் கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனாவால் அடுத்த 2 ஆண்டுகளுக்கு உலகமே முடங்கியது. இந்தியாவில் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் மக்களுக்கு முன்னெச்சரிக்கையாக கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. இதில் கோவிஷீல்டு தடுப்பூசியை பிரிட்டனை சேர்ந்த ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனம் தயாரித்திருந்தது. இந்தியாவில் அதன் தயாரிப்பு பணிகள் புனேவில் உள்ள சீரம் நிறுவனத்தால் […]

மருந்துகள் கையிருப்பு பற்றி அமைச்சர் தகவல்!

Comments Off on மருந்துகள் கையிருப்பு பற்றி அமைச்சர் தகவல்!

அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழகத்தில் தனி நபர்கள் தான் கொரொனாவால் பாதிப்புக்கு ஆளாகி வருவதாகவும், குழுவாக யாருக்கும் பாதிப்பில்லை என்று தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் இந்தியாவில் கொரொனா தொற்று குறைந்திருந்தது. ஆனால், தற்போது மீண்டும் கொரொனா தொற்றுப் பரவி வருகிறது. இதையடுத்து, கொரோனா தொற்றைக் குறைக்கவும், மக்களைப் பாதுகாக்கவும் வேண்டி, மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. நேற்று, தமிழகத்தில் ஒரே நாளில் 273 பேருக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது. […]

Continue reading …

மார்பக புற்றுநோயின் மருந்து விலைக்குறைப்பு!

Comments Off on மார்பக புற்றுநோயின் மருந்து விலைக்குறைப்பு!

புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்தின் விலைகளை குறைக்க வேண்டும் என்று அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்து வந்தநிலையில் மார்பக புற்றுநோய் மருந்து ரூ.80,000லிருந்து ரூ.3800ஆக குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மார்பகப் புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்தின் விலை குறைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுவரை மார்பக புற்றுநோய் சிகிச்சைக்காக ஒவ்வொரு மாதமும் 80 ஆயிரம் ரூபாய் செலவு செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது அது 3800 […]

Continue reading …

இந்திய தயாரிப்பு மருந்தால் 18 குழந்தைகள் பலி!!

Comments Off on இந்திய தயாரிப்பு மருந்தால் 18 குழந்தைகள் பலி!!

உஸ்பெகிஸ்தான் நாட்டில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை உட்கொண்ட 18 குழந்தைகள் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உஸ்பெகிஸ்தானின் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நொய்டாவைச் சேர்ந்த மரியான் பயோடெக் நிறுவனம் தயாரித்த டாக்-1 மேக்ஸ் என்ற இருமல் மருந்தை குழந்தைகள் உட்கொண்டதால் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது. அதோடு சிரப்களின் ஆய்வக சோதனைகளில் எத்திலீன் கிளைகோல் தயாரிப்பில் நச்சுப் பொருள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மருத்துவர் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு உள்ளூர் மருந்தாளுனர்களின் ஆலோசனையின் […]

Continue reading …

மூக்கு வலி செலுத்தும் மருந்து அறிமுகம்!

Comments Off on மூக்கு வலி செலுத்தும் மருந்து அறிமுகம்!

இந்தியாவில் கொரோனாவுக்கு மூக்கு வழியாக செலுத்தும் மருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலை தடுக்க இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் உட்பட தடுப்பூசிகளுக்கு அவசர கால அனுமதி வழங்கப்பட்டது. கடந்தாண்டு தொடங்கப்பட்ட இந்த தடுப்பூசி திட்டம் மூலமாக நாடு முழுவதும் 150 கோடி டோஸுக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி போல் அல்லாமல் மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா […]

Continue reading …

கொரோனாவை அழிக்கும் தடுப்பூசி 2021ஆம் ஆண்டு பாதிவரை கிடைக்க வாய்ப்பில்லை – WHO!

Comments Off on கொரோனாவை அழிக்கும் தடுப்பூசி 2021ஆம் ஆண்டு பாதிவரை கிடைக்க வாய்ப்பில்லை – WHO!

கொரோனாவை அழிக்கும் தடுப்பூசி 2021ஆம் ஆண்டு பாதிவரை கிடைக்க வாய்ப்பில்லை என உலக சுகாதார நிறுவனம் கருத்து தெரிவித்துள்ளது. கொரோன வைரஸ் உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரசால் அதிக அளவில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா ஆகிய நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸை அழிக்கும் தடுப்பூசி மருந்தை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் உலக நாடுகள் தீவிரமான இறங்கியுள்ளது. ஆனால், இதுவரை தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி மருந்துகள் எதுவும் 50 சதவீதம் கூட நல்ல பலன் கொடுக்கவில்லை […]

Continue reading …

கொரோனாவை அழிக்கும் தடுப்பூசி தயார்: எனது மகளும் தடுப்பூசி மருந்தை போட்டுக் கொண்டார் – அதிபர் புதின் நெகிழ்ச்சி!

Comments Off on கொரோனாவை அழிக்கும் தடுப்பூசி தயார்: எனது மகளும் தடுப்பூசி மருந்தை போட்டுக் கொண்டார் – அதிபர் புதின் நெகிழ்ச்சி!

கொரோனாவை எதிர்க்கும் தடுப்பூசி மருந்தை உலகில் முதலில் ரஷ்யா கண்டுபிடித்துள்ளது. இதை அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்துள்ளார். முதலில் தடுப்பூசியை தயாரித்து ரஷ்யா சாதனை படைத்துள்ளது என அதிபர் புதின் அறிவித்துள்ளார். இதை அவருடைய மகளில் ஒருவர் போட்டுகொண்டார் என தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மின்னல் வேகத்தில் பரவிவருகிறது. இந்த வைரசால் இரண்டு கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இதை ஒழிக்க […]

Continue reading …

கொரோனா தடுப்பு மருந்து பற்றி விரைவில் நல்ல செய்தி வெளிவரும் – அதிபர் டிரம்ப்!

Comments Off on கொரோனா தடுப்பு மருந்து பற்றி விரைவில் நல்ல செய்தி வெளிவரும் – அதிபர் டிரம்ப்!

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸால் அமெரிக்கா பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை அமெரிக்காவில் 34 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் ஒரு லட்சத்து 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். கடந்த வாரத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைப்பற்றி அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியது: ரஷ்யா, சீனா, இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளை விட அமெரிக்காவில் பெரிய அளவில் கொரோனா பரிசோதனை திட்டம் இருக்கிறது. அமெரிக்காவில் […]

Continue reading …

கொரோனா தடுப்பூசி மருந்தை மனிதர்களுக்கு கொடுத்து பரிசோதிக்க சீனா நிறுவனத்துக்கு அனுமதி!

Comments Off on கொரோனா தடுப்பூசி மருந்தை மனிதர்களுக்கு கொடுத்து பரிசோதிக்க சீனா நிறுவனத்துக்கு அனுமதி!

சோங்கிங் ஜிபெய் பயாலஜிகல் புரோடக்ட்ஸ் என்கிற நிறுவனம் கண்டு அறிந்த கொரோனா தடுப்பூசி மருந்தை மனிதர்களுக்கு கொடுத்து பரிசோதித்து பார்க்க சீனா அரசு அனுமதி கொடுத்துள்ளது. அன்ஹுய் ஜீஃபி லாங்க்காம் பயோஃபார்மா சூட்டிகல் மற்றும் சீன அறிவியல் அகாடமியின் நுண்ணுயிரியல் துறையும் இந்த கண்டுபிடிப்பில் ஒன்றிணைத்து செய்யபட்டுள்ளது. தடுப்பூசி மருந்தை மனிதர்களிடம் கொடுக்கப்பதற்கு கிளினிகல் பரிசோதனைக்கு சீனா தேசிய தேசிய மருத்துவ தயாரிப்பு நிர்வாகத்திடம் சான்றிதழைப் பெற்றுள்ளது. இதனை மனிதர்களுக்கு கொடுத்து பரிசோதித்து பார்ப்பதற்கு ஆறு சோதனை […]

Continue reading …