Home » Posts tagged with » Netrikkan (Page 103)

விஜய் கட்சி குறித்து வேல்முருகன் கடுமையான விமர்சனம்!

Comments Off on விஜய் கட்சி குறித்து வேல்முருகன் கடுமையான விமர்சனம்!

தமிழர் வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் விஜய்யின் அரசியல் குறித்து கடுமையாக விமர்சனம் செய்ததோடு, விஜய் ரசிகர்கள் என்னை கல்லால் அடிக்க வாய்ப்பு உண்டு என்று தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் வேல்முருகன் “சில நாட்களுக்கு முன் ஆரம்பித்த கட்சியின் பெயர் கூட எனக்கு தெரியாது, ஆனால் அந்த கட்சிக்கு உறுப்பினராக சேர்க்க இணையதளமே பிளாக் ஆகிவிட்டதாக கூறுகிறார்கள், 50 லட்சம் என்று ஊடகத்தில் செய்தி வெளியிட்டு வருகிறார்கள். தமிழகத்தில் கூத்தாடிகளை கொண்டாடுகிற நிலையை உடைக்க வேண்டும், நான் […]

Continue reading …

கமலை பிரச்சாரத்திற்கு பயன்படுத்துகிறார்கள்; குஷ்பு பேட்டி!

Comments Off on கமலை பிரச்சாரத்திற்கு பயன்படுத்துகிறார்கள்; குஷ்பு பேட்டி!

நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு பேட்டி ஒன்றில், “தேர்தல் பிரச்சாரத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றால் கூட்டம் வராது. கூட்டத்தை வரவழைப்பதற்கு கமல்ஹாசனை பிரச்சாரத்திற்காக மட்டும் பயன்படுத்துகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சி மற்றும் திமுகவிற்கும் இடையே நடந்த உடன்பாட்டில் மக்களவைத் தேர்தலில் கமல் கட்சிக்கு சீட் இல்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் 2025ம் ஆண்டு நடைபெறும் மாநிலங்களவை தேர்தலில் கமல் கட்சிக்கு ஒரு சீட் உண்டு என்றும் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தம் […]

Continue reading …

இண்டி கூட்டணி குறித்து ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம் விமர்சனம்!

Comments Off on இண்டி கூட்டணி குறித்து ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம் விமர்சனம்!

ஆச்சாரியா பிரமோத் கிருஷ்ணம் என்பவர் அனைத்து திருடர்களும் ஒன்று கூடி உருவாக்கிய கூட்டணி தான் இண்டி கூட்டணி என தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இண்டி கூட்டணி பாஜகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும், மோடியை தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஆரம்பித்த நிலையில் அக்கூட்டணிக்குள் பெரும் சர்ச்சை ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக சமீபத்தில் மம்தா பானர்ஜி தன்னிச்சையாக மேற்கு வங்க மாநிலத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்தார். காங்கிரஸ் கட்சியை அவர் ஒரு பொருட்டாக கண்டு கொள்ளவில்லை. […]

Continue reading …

ஆஸ்கர் விருதுகளை அள்ளும் கிறிஸ்டோபர் நோலனின் ஓப்பன்ஹெய்மர்!

Comments Off on ஆஸ்கர் விருதுகளை அள்ளும் கிறிஸ்டோபர் நோலனின் ஓப்பன்ஹெய்மர்!

இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் சிலியன் மர்ஃபி, ராபர்ட் டௌனி ஜூனியர் உள்ளிட்ட பலர் நடித்து கடந்த ஆண்டு வெளியான படம் “ஓப்பன்ஹெய்மர்.” இரண்டாம் உலகப்போரின்போது ஜப்பான் மீது போடப்பட்ட அணுகுண்டுகளை கண்டுபிடிக்க காரணகர்த்தாவான விஞ்ஞானி அனுகுண்டின் தந்தை என அழைக்கப்படும் ராபர்ட் ஓப்பென்ஹெய்மரின் வாழ்க்கை வரலாற்றின் ஒரு பகுதியாக உருவாகி இருந்தது இத்திரைப்படம். இந்த படம் உலகம் முழுவதும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. கோல்டன் க்ளோப் மற்றும் பாஃப்டா உள்ளிட்ட பல விருது விழாக்களில் கலந்துகொண்டு […]

Continue reading …

‘ரத்னம்‘ திரைப்படத்தின் பாடல் வெளியீடு!

Comments Off on ‘ரத்னம்‘ திரைப்படத்தின் பாடல் வெளியீடு!

இயக்குனர் ஹரியும், நடிகர் விஷாலும் ‘தாமிரபரணி’ மற்றும் ‘பூஜை’ சூப்பர் ஹிட் படங்களுக்கு பிறகு ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் கார்த்திகேயன் சந்தானம் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் இணைந்து தயாரிக்கும் ‘ரத்னம்‘ திரைப்படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளனர். இன்வீனியோ ஆரிஜனின் அலங்கார் பாண்டியன் மற்றும் கல்யான் சுப்பிரமணியம் இப்படத்தின் இணைத் தயாரிப்பாளர்கள் ஆவர். ஏப்ரல் 26 அன்று ‘ரத்னம்‘ திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சென்னை விஐடி பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை மாலை 12,000 +மாணவர்கள் கலந்துகொண்ட வைப்ரன்ஸ்’24 நிகழ்ச்சியில் இத்திரைப்படத்தின் முதல் […]

Continue reading …

பாஜக கூட்டணியில் இணைகிறதா பாமக?

Comments Off on பாஜக கூட்டணியில் இணைகிறதா பாமக?

பாமக அதிமுக கூட்டணியில் கிட்டத்தட்ட இணைந்து விட்டதாக கூறப்படுகிறது. திடீரென பாஜக உடன் ரகசிய பேச்சுவார்த்தை நடந்ததாகவும், சென்னையில் உள்ள ராமதாஸ் மகள் வீட்டில் எல் முருகன் மற்றும் அன்புமணி ஆகிய இருவரும் ரகசியமாக பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாமக மற்றும் தேமுதிக எந்த கூட்டணியில் சேர இருக்கிறது என்பதை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால் அதே நேரத்தில் இரு கட்சிகளும் அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை கிட்டத்தட்ட முடித்து விட்டதாகவும் விரைவில் அறிவிப்பு […]

Continue reading …

இடத்தை மாற்றியதால் கடுப்பில் கனிமொழி?

Comments Off on இடத்தை மாற்றியதால் கடுப்பில் கனிமொழி?

மதுரையில் மார்ச் 10ம் தேதி கனிமொழி தலைமையில் மாபெரும் மகளிர் மாநாடு நடத்த அறிவிக்கப்பட்டிருந்தது. திடீரென அந்த மாநாட்டை திண்டுக்கல்லுக்கு மாற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருந்த கனிமொழிக்கு இது குறித்த தகவல் சொன்னபோது எதற்காக இடத்தை மாற்றினீர்கள் என்று கேட்டிருக்கிறார். ஆனால் மாவட்ட நிர்வாகிகள் சரியாக பதில் சொல்லாத நிலையில் கடைசியில் மேலிட உத்தரவு தான் காரணம் என்று கனிமொழிக்கு தெரிய வந்ததும் உச்சகட்ட கடுப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அந்த மேலிடம் உதயநிதி […]

Continue reading …

விஜய் கட்சியில் இத்தனை லட்சம் பேரா?

Comments Off on விஜய் கட்சியில் இத்தனை லட்சம் பேரா?

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் 50 லட்சம் பேர் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதற்கென புதிய செயலி அறிமுகம் செய்யப்படும் என்றும், அதன் மூலமே உறுப்பினர் சேர்க்கை நடைபெறும் என்று கூறப்பட்டிருந்தது. கடந்த 8ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை நடிகரும், அக்கட்சியின் தலைவருமான விஜய் அறிமுகப்படுத்தினார். மேலும், மே மாதத்திற்குள் அதிக […]

Continue reading …

அதிமுக தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தையில் திடீர் திருப்பம்?

Comments Off on அதிமுக தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தையில் திடீர் திருப்பம்?

அதிமுகவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்த தேமுதிக, தற்போது பாஜகவுடன் கூட்டணி குறித்து பேச வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. நெருங்கி வரும் மக்களவை தேர்தலுக்காக தேசிய கட்சிகள், மாநில கட்சிகள் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் மிகுந்த தீவிரம் காட்டி வருகின்றன. தேமுதிகவில் தலைவர் விஜயகாந்த் மறைந்த நிலையில் அவரது பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ள பிரேமலதா விஜயகாந்த் தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்த முறை மாநிலங்களவை சீட் கண்டிப்பாக வேண்டும் என்பதில் பிரேமலதா விஜயகாந்த் உறுதியாக உள்ளார். […]

Continue reading …

கருவில் இருக்கும் குழந்தை விவரத்தை கூறிய ஓய்வு பெற்ற நர்ஸ் கைது!

Comments Off on கருவில் இருக்கும் குழந்தை விவரத்தை கூறிய ஓய்வு பெற்ற நர்ஸ் கைது!

கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்று கண்டுபிடித்து சொல்வது சட்டவிரோதம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.20,000 பெற்று கருவில் இருக்கும் குழந்தை குறித்த தகவலை சட்டவிரோதமாக கூறிய ஓய்வு பெற்ற நர்ஸ் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளாக சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த காந்திமதி என்ற ஓய்வு பெற்ற நர்ஸ் கர்ப்பிணி பெண்கள் கருவில் இருப்பது ஆணா? பெண்ணா? என்று சட்டவிரோதமான முறையில் தெரிவித்து இதற்காக அவர் இருபதாயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டதாக தெரிகிறது. கடந்த ஐந்து […]

Continue reading …