
கிருத்திகா உதயநிதி ஜெயம் ரவி நடிக்கும் 33வது திரைப்படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படத்துக்கு பழைய ஹிட் படத்தின் டைட்டிலான ‘காதலிக்க நேரமில்லை’ என்ற தலைப்பை வைத்துள்ளனர். ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனன் முக்கிய கேரக்டரில் நடிக்கும் இந்த படத்தில் யோகி பாபு, மனோ, லட்சுமி ராமகிருஷ்ணன், ஜான் கொக்கன், வினோதினி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைக்கிறார். படத்தின் பெரும்பாலான […]
Continue reading …
“அனிமல்” திரைப்பட இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா ரன்பீர் கபூரைக் கதாநாயகனாக வைத்து இயக்கிய திரைப்படம். இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். முக்கியக் கதாபாத்திரங்களில் பாலிவுட் நடிகர்களான அனில் கபூர் மற்றும் பாபி தியோல் ஆகியோர் நடித்துள்ளனர். “அனிமல்” திரைப்படம் பெண்ணடிமைத் தனத்தை விதந்தோதுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனாலும் இந்த படம் 900 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்தது. படத்தை விட இயக்குனர் சந்தீப் ரெட்டி தரும் பேட்டிகள் மிகவும் ஆணாதிக்கத் தன்மை கொண்டதாக உள்ளதாக […]
Continue reading …
மலேசிய தமிழ் இலக்கிய காப்பகமும் தமிழ் பேராயமும் கவிப்பேரரசு வைரமுத்து எழுதி சாதனை படைத்த ‘மகாகவிதை’ நூலுக்கு ‘பெருந்தமிழ் விருது’ இந்த விருதை இணைந்து வழங்குகிறது. மலேசியாவில் இந்த விருது வழங்கும் விழா டாக்டர் எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தலைமையில் டத்தோ எம்.சரவணன் முன்னிலையில் வழங்கப்படுகிறது. இவ்விருதினைப் பெற்றுக் கொள்ள மலேசியா வந்தடைந்தார் கவிப்பேரரசு வைரமுத்து மலேசியா வந்த கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு ‘டத்தோ’ எம்.சரவணன் தலைமையில் விமான நிலையம் முதல் தங்கி இருக்கும் விடுதி வரை சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
Continue reading …
மதுரை கோச்சடைப் பகுதியைச் சேர்ந்த முத்துக் கார்த்திக் பால் வியாபாரம் செய்து வருகிறார். இவர் தனது மனைவி முருக பூபதி (வயது 30). மற்றும் 2 வயது பெண் குழந்தை முத்து மீனாவுடன் அந்தப் பகுதியில் வசித்து வந்தார். கணவர் முத்துக் கார்த்திக், பால் வியாபாரத்திற்கு சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்த முருக பூபதி, தனது 2 வயது மகள் முத்து மீனா மீது மண்ணெண்ணைய் ஊற்றி தீ வைத்துக் கொன்று, தன் மீதும் கொடூரமாக […]
Continue reading …
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அஜீத்துக்கு நேற்று மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக செய்தி வெளியானது. இது முழுக்க முழுக்க பொய் என்று அவருடைய மேனேஜர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். நேற்று காலை நடிகர் அஜீத் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சாதாரண மருத்துவ பரிசோதனைக்காகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியானது. ஆனால் நேற்றிரவு திடீரென அஜீத்தின் மூளையில் சிறிய அளவில் கட்டி இருந்ததாகவும் அதை அகற்றுவதற்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் இன்னும் இரண்டு நாட்களில் அவர் […]
Continue reading …
காங்கிரஸ் எம்பி ஜோதிமணி அரசியலில் பெண்களின் உழைப்பு மற்றும் திறமை அங்கீகரிக்கப்படுவதில்லை என தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்பி ஜோதிமணி பேட்டி ஒன்றில், “பெண்கள் ஏராளமான தடைகள் பிரச்சனைகளை தாண்டி சமூகத்தில் தனக்கான இடத்தை உறுதி செய்கின்றனர். ஆனால் அரசியல் கட்சிகள் பெண்களின் உழைப்பு மற்றும் திறமைக்கு உரிய முறையில் அங்கீகரிக்கவில்லை. அரசியல் கட்சிகள் பெண்களின் பங்களிப்பை பெயர் அளவில் தான் இருக்க விரும்புகின்றனர். எல்லா அரசியல் கட்சிகளிலும் இதே நிலைதான். முன்னாள் பிரதமர் ராஜீவ் […]
Continue reading …
இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை செயலி மூலம் துவங்கவுள்ளது. நடிகர் விஜய் தன்னை முதல் உறுப்பினராக இணைத்து கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கி, பல்வேறு மக்கள் பணிகளை மேற்கொண்டு வருகிறார். மக்களவை தேர்தலில் போட்டியில்லை என அறிவித்த அவர், 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடும் எனவும் தெரிவித்திருந்தார். இதையடுத்து தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர்களை சேர்க்கும் பணி […]
Continue reading …
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி திமுக ஆட்சியில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வரும் ஜாபர் சாதிக், முதலமைச்சர் குடும்பத்தோடு நெருக்கமாக இருந்துள்ளார். ஜாபர் சாதிக் விவகாரத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் விளக்கமளிக்க வேண்டும். போதை பொருள் தொடர்புடைய 2138 வழக்குகளில் 148 பேர் தான் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், மற்ற வழக்குகளின் நிலை என்னவானது என்று தெரியவில்லை. திமுக ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு […]
Continue reading …
திமுக மதிமுகவுக்கு ஒரு மக்களவைத் தொகுதியும், ஒரு மாநில உறுப்பினர் பதவியும் வழங்க முன்வந்துள்ளது. இரு கட்சிகளிடையே தொகுதி பங்கீடு தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. மதிமுக நாடாளுமன்ற தேர்தலில் ஒரு மக்களவைத் தொகுதியுடன் மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க வேண்டும் எனவும், தனிச்சின்னத் தில்தான் போட்டியிடுவோம் என்றும் திமுக பேச்சுவார்த்தைக் குழுவிடம் தெரிவித்திருந்தது. ஆனால் திமுக தரப்பிலோ உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும், மாநிலங்களவை உறுப்பினர் பதவியை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என கூறி வந்தனர். இதனால் […]
Continue reading …
திமுக விசிக இடையே மக்களவைத் தேர்தலுக்காக தொகுதி பங்கீடு தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. திமுக கூட்டணியில் விசிகவுக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அனைத்து கட்சிகளும் நெருங்கி வரும் மக்களவை தேர்தலுக்கான பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. கொமதேக, ஐயூஎம்எல், சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இன்று மதிமுகவுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. மக்களவை தேர்தலில் மூன்று தொகுதிகளை ஒதுக்க வேண்டும் […]
Continue reading …