
ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் யோகி பாபு நடிப்பில் ‘அயலான்’ திரைப்படம் கடந்த 5 ஆண்டுகளாக உருவாக்கத்தில் இருந்து பல்வேறு பொருளாதார பிரச்சனைகளைத் தாண்டி ஜனவரி 12ம் தேதி ரிலீசானது. “கேப்டன் மில்லர்,” “அயலான்,” “மிஷன் 1” மற்றும் “மெரி கிறிஸ்துமஸ்” ஆகிய திரைப்படங்கள் ரிலீசானது. “அயலான்” படத்துக்கு பாசிட்டிவ்வான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. பொங்கல் ரிலீசில் இந்த படம் தான் வின்னர் என்று கூறப்படுகிறது. இத்திரைப்படம் நான்கு நாட்களில் 50 கோடி […]
Continue reading …
வரும் திங்கட்கிழமையன்று ராமர் கோவில் திறப்பு விழா நடைபெற உள்ளது. அன்றைய தினம் பங்குச்சந்தை நேரம் மாற்றப்பட்டுள்ளதாகவும் அதற்கு பதிலாக இன்றும் பங்குச்சந்தை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 22ம் தேதி ராமர் கோயில் திறக்கப்பட உள்ளதை அடுத்து மத்திய அரசு அலுவலகங்கள் வங்கிகளுக்கு அரைநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 22ம் தேதி பங்குச்சந்தை காலை 9 மணிக்கு பதிலாக மதியம் 2:30 மணிக்கு வர்த்தகம் தொடங்கி மாலை 5 மணி வரை செயல்படும் என்று இந்திய […]
Continue reading …
இயக்குனர் சேரன் தமிழ் சினிமாவில் “பாரதி கண்ணம்மா,” “பொற்காலம்” மற்றும் “ஆட்டோகிராப்” உள்ளிட்ட படங்கள் மூலமாக முத்திரைப் பதித்தவர் “ஆட்டொகிராப்” திரைப்படத்தின் மூலமாக நடிகராகவும் அறிமுகமாகி, பல வெற்றிப் படங்களைக் கொடுத்தார். ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கு படங்கள் இயக்க வாய்ப்புகள் அமையவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் இப்போது “ஜர்னி” என்ற வெப் தொடரை இயக்கி முடித்துள்ளார். சேரன் இயக்கும் இந்த தொடரில் ஆரி, சரத்குமார், பிரசன்னா, கலையரசன், திவ்யபாரதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சோனி […]
Continue reading …
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 19ம் தேதி அதிகாலை தமிழ் சினிமாவின் பெயர்பெற்ற நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான மயில்சாமி திடீர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் திரை உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சென்னை சாலிகிராமத்தில் அவருடைய உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்ட போது, பொதுமக்களும் திரையுலகினரும் பெருமளவில் வந்து அஞ்சலி செலுத்தினர். இப்போது மயில்சாமியின் மகன் யுவன் சின்னத்திரை தொடரில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். விஜய் தொலைக்காட்சியில் வரும் 22-ம் தேதி முதல் “தங்கமகள்” என்ற தொடர் ஒளிபரப்பாக உள்ளது. […]
Continue reading …
அமேசான் ஊழியர் ஒருவர் அமேசான் நிறுவனத்தில் அதிக எடை கொண்ட பொருட்களை வாங்காதீர்கள் என டிக் டாக் வீடியோ பதிவு செய்ததால் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். அமேசான் நிறுவனம் உலகின் முன்னணி இகாமர்ஸ் நிறுவனங்களில் ஒன்று. இந்நிறுவனத்தில் வேலை செய்யும் ஒருவர் அமேசான் நிறுவனத்தில் அதிக எடை கொண்ட பொருட்களை வாங்காதீர்கள், அவ்வாறு வாங்கினால் அந்த பொருள் பாதுகாப்பாக வந்தடையும் என்பதற்கு உத்திரவாதம் கிடையாது என்று டிக் டாக்கில் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ மிகப்பெரிய அளவில் வைரலானது. […]
Continue reading …
டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் முன்னாள் கணவர் மறுமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதையடுத்து சானியா மிர்சா தனது சமூக வலைத்தளத்தில் வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் மற்றும் சானியா மிர்சாவின் ஆகிய இருவரும் 2010ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்பட்டது. சானியா மிர்சா தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “திருமணம் என்பது கடினமானது. விவாகரத்தும் கடினமானது. இதில் உங்களுக்கான […]
Continue reading …
ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் செவ்வாய் கிரகத்தில் நீராதாரம் இருப்பதை உறுதி செய்துள்ளது. ஏற்கனவே செவ்வாய் கிரகத்தில் நீராதாரம் இருப்பதற்கான ஆதாரங்கள் இருந்தாலும், அவை தெளிவாக இல்லை. ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் “பிரிசெப்ட்” என்ற ரோவர், செவ்வாய் கிரகத்தில் நீர் இருப்பதை உறுதி செய்துள்ளது. பிரிசெப்ட் ரோவர், செவ்வாய் கிரகத்தில் உள்ள ஜெசெரோஸ் என்ற பள்ளத்தாக்கில் ஆய்வு நடத்தி வருகிறது. அப்பள்ளத்தாக்கில், நீர் ஆதாரங்கள் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. பிரிசெப்ட் ரோவர், ஜெசெரோஸ் பள்ளத்தாக்கில் உள்ள மண்ணில் உள்ள […]
Continue reading …
சமீபத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை “நியூஸ் 18 தமிழ்நாடு” தொலைக்காட்சியில் நெறியாளர் கார்த்திகை செல்வன் நேர்காணல் நடத்தினார். பாஜக தலைவர் அண்ணாமலை இந்நிகழ்ச்சி தொடர்பாக நெறியாளர் கார்த்திகை செல்வனை பற்றியும் அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் பற்றியும் கடுமையாக விமர்சித்தார். இதற்கு ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். செய்தியாளரின் கேள்விகளை கொச்சைப்படுத்தியதாக அண்ணாமலைக்கு நேற்று WJUT கடும் கண்டனம் தெரிவித்தது. இது குறித்து திமுக எம்பி கனிமொழி “அண்மையில் பாஜக தலைவர் அண்ணாமலை […]
Continue reading …
இந்திய அரசுக்கு எதிராக ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிராக அதிகரித்து வரும் தேசியவாத பிரிவினை கொள்கைகள் பற்றி கவலை தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், மணிப்பூர் உட்பட சமூக மோதல்களை தூண்டும் வகையில் இந்தியாவில் உள்ள தலைவர்கள் அறிக்கைகள் வெளியிடுவதை நிறுத்த வேண்டுமெனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேபோல், ஜம்மு-காஷ்மீரில் மனித உரிமைகள், அடிப்பட சுதந்திரங்கள் கவலைக்குருய சூழ்ல் நிலையை கண்காணிக்க வேண்டிய அவசியமிருப்பதாகவும் ஐரோப்பிய ஒன்றிய அமைப்பு தீர்மான […]
Continue reading …
சென்னை நேரு விளையாட்டு அரங்கில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடக்க விழாவில் தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டுகள், கலாச்சார நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்துள்ளார் பிரதமர் மோடி. விழாவின் தொடக்கத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை நிகழ்த்தினார். கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை […]
Continue reading …