Home » Posts tagged with » Netrikkan (Page 156)

அமோனியா வாயு என உறுதி செய்த மாசு கட்டுப்பாடு வாரியம்!

Comments Off on அமோனியா வாயு என உறுதி செய்த மாசு கட்டுப்பாடு வாரியம்!

மாசு கட்டுப்பாட்டு வாரியம் சென்னை எண்ணூர் தொழிற்சாலையிலிருந்து கசிந்தது அமோனியா வாயு தான் என உறுதி செய்துள்ளது. சென்னை எண்ணூர் கடல் பகுதியில் அமைந்துள்ள கோரமண்டல் தொழிற்சாலையின் திரவ அமோனியா எடுத்துவரும் குழாயிலிருந்து அமோனியா வாயு கசிந்ததை மாசு கட்டுப்பாடு வாரியம் உறுதி செய்துள்ளது. ஆலை வாசலில் காற்றில் 400 மைக்ரோ கிராமாக இருக்க வேண்டிய அமோனியா அளவு தற்போது 2090 மைக்ரோ கிராம் இருப்பதாகவும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் கடலில் 5 மில்லிகிராமாக […]

Continue reading …

மீண்டும் கொரோனா பாதிப்பு!

Comments Off on மீண்டும் கொரோனா பாதிப்பு!

தற்போது மீண்டும் இந்தியாவில் கொரானா வைரஸ் நோயின் பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் கர்நாடக மாநிலத்தில் கொரோனா பாதித்த 3 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா பாதித்தவர்கள் ஒரு வாரம் தனிமைப்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 412 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது. நாடு முழுதும் தற்போது 454 பேர் கொரோனாவால் […]

Continue reading …

தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கும் காங்கிரஸ்!

Comments Off on தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கும் காங்கிரஸ்!

நாளை காங்கிரஸ் கட்சி வருகிற 2024ம் ஆண்டில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை பிரம்மாண்டமாக தொடங்க உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் 2024ம் ஆண்டு மே மாதத்தில் நடைபெற உள்ளதால், அதற்கான முன்னேற்பாடுகளில் அரசியல் கட்சிகள் இப்போதே தொடங்க ஆரம்பித்துள்ளன. கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து பாஜக மத்தியில் ஆட்சியில் இருந்து வருகிறது. மத்தியில் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்பட்ட சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில […]

Continue reading …

இஸ்ரேல் பயணிகளுக்கு எச்சரிக்கை!

Comments Off on இஸ்ரேல் பயணிகளுக்கு எச்சரிக்கை!

டில்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகத்திற்கு அருகில் மர்ம வெடிச்சத்தம் கேட்டதால், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இஸ்ரேல் தூதரகத்தின் அதிகாரிகள் தெரிவித்த தகவலின்பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் மோப்ப நாய்கள் சகிதம் அப்பகுதியை முழுமையாக சோதனை செய்தனர். அப்போது அப்பகுதியில் கொடியில் சுற்றப்பட்ட கடிதம் ஒன்றை கண்டெடுத்துள்ளனர். அதில் என்ன எழுதியிருந்தது என்ற தகவல் தெரியவில்லை. ஆனால் போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இஸ்ரேல் தூதரகம் இந்தியா செல்லும் இஸ்ரேல் மக்களை எச்சரித்துள்ளது. புத்தாண்டிற்காக […]

Continue reading …

உதயநிதி குறித்து அண்ணாமலை சாடல்!

Comments Off on உதயநிதி குறித்து அண்ணாமலை சாடல்!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “தமிழக திமுக அரசியல் எப்படியாவது சண்டை போட வேண்டும். இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்பட வேண்டும். மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற திட்டத்தில் ஓட்டைகள் போட வேண்டும் என்று முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. சென்னை வெள்ளம் மற்றும் தென் தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளம் ஆகியவற்றை மிக மோசமாக கையாளப்பட்டது என அனைவருமே பேச ஆரம்பித்துள்ளனர். மழையால் […]

Continue reading …

சிவகார்த்திகேயனுக்கு மட்டும் ஏ.ஆர்.ரஹ்மான் சலுகையா?

Comments Off on சிவகார்த்திகேயனுக்கு மட்டும் ஏ.ஆர்.ரஹ்மான் சலுகையா?

சில தினங்களுக்கு முன் நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகம் ஒன்றை செய்ததாக இசையமைப்பாளர் டி. இமான் பேட்டி ஒன்றில் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். அந்த நேர்காணலில் டி.இமான் “இந்த ஜென்மத்தில் சிவகார்த்திகேயனும் நானும் இணைந்து பணியாற்றும் வாய்ப்பில்லை. அடுத்த ஜென்மத்தில் அவர் ஹீரோவாக இருந்து நான் இசையமைப்பாளராக இருந்தால் பார்க்கலாம். அவர் எனக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்துவிட்டார். இது பற்றி நான் கேட்ட போது அவர் சொன்ன பதிலை இங்கு சொல்லவே முடியாது. அவர் […]

Continue reading …

பேஸ்புக் நிறுவனத்திற்கு சோதனை!

Comments Off on பேஸ்புக் நிறுவனத்திற்கு சோதனை!

அதிகமாக அன்-இன்ஸ்டால் செய்யப்பட்ட இரண்டு செயலிகள் 2023ம் ஆண்டுக்கான தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த இரண்டு செயலிகளும் பேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமானது. இன்ஸ்டாகிராம் மற்றும் த்ரெட்ஸ் ஆகிய இரண்டு செயலிகள் பேஸ்புக் அலுவலகத்திற்கு சொந்தமாக உள்ளன. கடந்த ஜூலை மாதம் பேஸ்புக் நிறுவனம் த்ரெட்ஸ் என்ற செயலியை அறிமுகம் செய்தது. இச்செயலியை ஐந்து நாட்களில் 10 கோடி பேர் இன்ஸ்டால் செய்தனர். ஆனால் ஒரு சில மாதங்களில் இச்செயலியை பலர் அன்இன்ஸ்டால் செய்தனர். 2023ம் ஆண்டில் அதிகமாக […]

Continue reading …

திமுகவில் இன்னொரு வாரிசா?

Comments Off on திமுகவில் இன்னொரு வாரிசா?

நாடாளுமன்ற தேர்தலில் திமுகவில் உள்ள ஒரு சில வாரிசுகள் ஏற்கனவே வெற்றி பெற்று எம்பி ஆகியுள்ளனர். தற்போது கே.என்.நேருவின் மகனும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தலைமை அனுமதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. அமைச்சர் துரைமுருகன் மகன் மற்றும் பொன்முடி மகன் ஆகியோர் ஏற்கனவே எம்பிகளாக இருக்கின்றனர். தற்போது கே.என்.நேருவின் மகன் அருண் நேருவுக்கு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட திமுக தலைமை ஒப்புதல் அளித்து விட்டதாக கூறப்படுகிறது. அவர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடுவார் என்று […]

Continue reading …

அங்கித் திவாரி மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு!

Comments Off on அங்கித் திவாரி மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு!

அமலாக்கத்துறை லஞ்சம் வாங்கி கைதான அங்கித் திவாரி மீது வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும் துறை ரீதியான வழக்கு தனியாக பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மீது திண்டுக்கல் மருத்துவ கல்லூரியில் பணியாற்றும் அரசு மருத்துவரை மிரட்டி 20 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இன்னும் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்காமல் இருக்க லஞ்சம் […]

Continue reading …

குற்றவியல் தடுப்பு சட்டங்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல்?

Comments Off on குற்றவியல் தடுப்பு சட்டங்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல்?

மூன்று புதிய குற்றவியல் தடுப்பு சட்டங்கள் சமீபத்தில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன. அச்சட்டங்களுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதையடுத்து இந்த சட்டங்கள் உடனே நடைமுறைக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது. 150-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் சமீபத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் எம்பிக்கள் மட்டுமே நாடாளுமன்றத்தில் இருந்தபோது மூன்று புதிய குற்றவியல் தடுப்புச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. இச்சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. ஜனாதிபதி திரௌபதி முர்மு இச்சட்டங்களுக்கு […]

Continue reading …