Home » Posts tagged with » Netrikkan (Page 180)

இளைஞர்களின் மாரடைப்புக்கு காரணம் என்ன?

Comments Off on இளைஞர்களின் மாரடைப்புக்கு காரணம் என்ன?

இந்திய இளைஞர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாகவே மாரடைப்பு உட்பட ஒரு சில காரணங்களால் மரணமடைந்து வருகின்றனர். குறிப்பாக ஜிம்மில் அதிக அளவு ஒர்க் அவுட் செய்பவர்கள் மாரடைப்பால் இறந்து வருவது வாடிக்கையாக உள்ளது. இது குறித்து ஐசிஎம்ஆர் ஆய்வு செய்து கொடுத்துள்ள விளக்கத்தில், “இந்தியாவில் இளைஞர்கள் திடீர் மரணம் அடைய கோவிட் தடுப்பூசி காரணம் என்று கூறுவது சரியல்ல. கொரோனா சிகிச்சை, குடும்பங்களில் உள்ள நோய், வாழ்க்கை முறை மாற்றங்களால் இளைஞர்களின் மரணத்திற்கு காரணமாக இருக்கலாம். கடந்த […]

Continue reading …

சென்னை ஐகோர்ட்டின் வாசல்கள் மூடப்பட்டது ஏன்?

Comments Off on சென்னை ஐகோர்ட்டின் வாசல்கள் மூடப்பட்டது ஏன்?

திடீரென சென்னை ஐகோர்ட்டில் அனைத்து வாசல்களையும் மூட உத்தரவிட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் சென்னை பூக்கடை அருகே ஐகோர்ட் கட்டப்பட்ட நிலையில் இந்த பகுதியில் வசித்த மக்கள் உயர்நீதிமன்றத்தை சுற்றிச் செல்ல வேண்டிய நிலை இருப்பதால் உயர்நீதிமன்ற வளாகத்தின் பாதையை பயன்படுத்த தொடங்கினர். நீதிமன்றமும் இதற்கு ஆட்சேபணை தெரிவிக்கவில்லை. ஆனால் அதே நேரத்தில் வருங்காலத்தில் நீதிமன்ற வளாக பாதைகளை உரிமை கோரி விடக்கூடாது என்பதற்காக வருடத்திற்கு இரண்டு நாட்கள் மட்டும் மூடப்படும் என்று […]

Continue reading …

அமைச்சர் உதயநிதி பெருமிதம்!

Comments Off on அமைச்சர் உதயநிதி பெருமிதம்!

அமைச்சர் உதயநிதி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உடனே கூட்டி, அந்த சட்ட முன்வடிவுகளை மீண்டும் ஒரு மனதாக நிறைவேற்றியுள்ளது ஜனநாயக பாதையில் மாபெரும் மைல்கல் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் இன்று பங்கேற்றோம். நியமனப்பதவியில் அமரும் பாசிசத்தின் நிழலிடம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திராவிட மாடல் அரசு ஒரு போதும் பின் வாங்காது என்பதற்கு உதாரணமே இந்த சிறப்புக்கூட்டம். சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 சட்ட முன்வடிவுகளை அரசியலமைப்பின் மாண்புக்கு […]

Continue reading …

சென்னையில் 94 மின்சார ரயில்கள் ரத்து!

Comments Off on சென்னையில் 94 மின்சார ரயில்கள் ரத்து!

இன்று சென்னையிலிருந்து அரக்கோணம் செல்லும் மார்க்கத்தில் உள்ள 94 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் பெரும் அவதியில் உள்ளனர். சென்ட்ரல் முதல் அரக்கோணம் வரை செல்லும் வழித்தடத்தில் பட்டாபிராமம், அம்பத்தூர் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் இந்த வழித்தடத்தில் இயங்கும் 94 ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை சென்ட்ரலிலிருந்து இன்று இரவு 9.25, 10, 10.20, 10.35, 11.15, 11.45 மணிக்கு புறப்படும் ரயில்கள், சென்னை கடற்கரையிலிருந்து இரவு 11.15 மணிக்கு […]

Continue reading …

இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..!

Comments Off on இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..!

இந்திய வானிலை ஆய்வு மையம் வங்க கடலில் தோன்றிய ‘மிதிலி’ புயல் வங்கதேசத்தில் கரையை கடந்ததாக தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தோன்றியது. இது படிப்படியாக வலுப்பெற்று புயலாக மாறியதை அடுத்து இந்த புயலுக்கு ‘மிதிலி’ என்று பெயர் வைக்கப்பட்டது. ‘மிதிலி’ புயல் வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் நகர்ந்து வங்கதேசத்தில் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அது போலவே வங்கக் கடலில் […]

Continue reading …

திமுக ஆட்சியின் லட்சணம்; சசிகலா!

Comments Off on திமுக ஆட்சியின் லட்சணம்; சசிகலா!

சசிகலா இன்றைய திமுக ஆட்சியில் காசு இருந்தால்தான் கடவுளையே பார்க்கமுடியும் என்ற அவல நிலை இருப்பது மிகவும் கவலை அளிக்கிறது. இது தான் திமுக தலைமையிலான ஆட்சியின் லட்சணம் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், திருச்செந்தூரில் உள்ள அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் தற்போது கந்தசஷ்டி விழா ஆறு நாட்கள் நடைபெறுவதால் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் வந்தவண்ணம் உள்ளனர். ஒவ்வொரு நாளும் மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் அலை மோதுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலில் இன்றைக்கு நடப்பதையெல்லாம் […]

Continue reading …

சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

Comments Off on சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ஆளுனர் பதவி என்பது அகற்றப்பட வேண்டிய பதவி என்றாலும், இருக்கும் வரை மக்களாட்சி தத்துவத்துக்கு உட்பட்டு செயல்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். கவர்னர் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சில மசோதாக்களை நிறுத்தி வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. 10 மசோதாக்களை திடீரென கவர்னர் ரவி திருப்பி அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது. இன்று காலை சிறப்பு சட்டமன்றம் கூடி, கவர்னர் திருப்பி அனுப்பிய 10 சட்ட மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். […]

Continue reading …

தளபதி விஜய் நூலகத்தில் என்னென்ன புத்தகங்கள்?

Comments Off on தளபதி விஜய் நூலகத்தில் என்னென்ன புத்தகங்கள்?

இன்று விஜய் மக்கள் இயக்கம் சார்பாக “தளபதி விஜய் நூலகம்” தமிழகத்தின் பல பகுதிகளில் திறக்கப்பட்டது. இன்று சென்னையில் இரண்டு இடங்களில் புஸ்ஸி ஆனந்த் நூலகத்தை திறந்து வைத்தார். இது குறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில், “தளபதி விஜய் அவர்களின் சொல்லுக்கிணங்க, தளபதி விஜய் நூலகம் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட தொண்டரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக, இன்று தமிழகத்தில் முதல் இடமாக தாம்பரம் தொகுதி பாலாஜி நகர் 3வது தெரு, சிஜிளி […]

Continue reading …

‘அன்னப்பூரணி’ பட முதல் சிங்கில் அப்டேட்!

Comments Off on ‘அன்னப்பூரணி’ பட முதல் சிங்கில் அப்டேட்!

‘அன்னப்பூரணி’ திரைப்படம் நயன்தாராவின் 75 வது படம். இத்திரைப்படத்தின் முதல் சிங்கில் பற்றிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. நடிகை நயன்தாரா நடித்துள்ள திரைப்படம் “அன்னப்பூரணி.” இப்படத்தில் ஹீரோவாக ஜெய் நடிக்கிறார். இவர்களுடன் சத்யராஜ் மற்றும் ரெட்டின்ஸ் கிங்ஸ்லீ ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க, நிலேஷ் கிருஷ்ணா என்ற அறிமுக இயக்குனர் படத்தை இயக்குகிறார். தமன் இசையமைக்கிறார். சமீபத்தில் ஜீ ஸ்டுடியோ நிறுவனம், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள “அன்னப்பூரணி” படம் வரும் டிசம்பர் 1ம் தேதி உலகம் முழுவதும் […]

Continue reading …

சூப்பர் ஸ்டாரிடம் வாழ்த்து பெற்ற கங்கனா!

Comments Off on சூப்பர் ஸ்டாரிடம் வாழ்த்து பெற்ற கங்கனா!

இன்று நடிகை கங்கனா ரனாவத் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றார். நடிகை கங்கனா ரனாவத் “பேஷன்,” “குயின்,” “தனு வெட்ஸ் மனு ரிட்டன்ஸ்,” “ஜான்சி ராணி,” தமிழில் “தலைவி” உட்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் ராகவா லாரன்ஸுடன் இணைந்து “சந்திரமுகி 2” படத்தில் நடித்திருந்தார். இப்படத்தை அடுத்து மாதவனுடன் இணைந்து நடிக்கும் புதிய படம் சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. அதே இடத்தில் ரஜினி பட ஷூட்டிங்கும் நடந்த நிலையில், கங்கனா ரனாவத், ஏ.எல்.விஜய் […]

Continue reading …