Home » Posts tagged with » Netrikkan (Page 276)

கத்தியுடன் பயணித்த கல்லூரி மாணவர்கள் கைது!

Comments Off on கத்தியுடன் பயணித்த கல்லூரி மாணவர்கள் கைது!

கல்லூர் மாணவர்கள் இரண்டு பேர் சென்னையில் பட்டாக்கத்தியுடன் ரயில் நிலையத்தில் அச்சுறுத்தும் வகையில் இருந்ததால் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை, உள்ளிட்ட பகுதிகளில் கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள் ரூட்டு தல என்ற பெயரில் பேருந்துகளில் அடாவடி செயல்களில் ஈடுபடுவது, பேருந்துகளில் நடனம் ஆடி, சகப் பயணிகளுக்கு இடையூறு செய்வது, ரயில் மற்றும் பேருந்துகளின் படிக்கட்டில் தொங்கியபடி செல்வது, பஸ்டே என்ற பெயரில் பேருந்தின் மீது ஏறி மாணவர்கள் நடனமாடுவது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று போலீசார் எச்சரித்துள்ளனர். இதையும் […]

Continue reading …

கமல் வினோத் இணையும் படத்தின் அப்டேட் என்ன?

Comments Off on கமல் வினோத் இணையும் படத்தின் அப்டேட் என்ன?

ஹெச் வினோத் அஜீத்தின் கூட்டணியில் “துணிவு” திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வெற்றிப்படமாக அமைந்தது. படத்துக்குப் பிறகு அவர் கமல்ஹாசன் நடிப்பில் ஒரு படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதுமட்டுமல்லாமல் தனுஷ் நடிப்பிலும் ஒரு படத்தையும் இயக்கப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். கமல் “இந்தியன் 2” திரைப்படத்தை முடித்ததும் அடுத்து உடனடியாக வினோத் இயக்கத்தில் நடிக்க முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இத்திரைப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் நிலையில் மிகக்குறைந்த பட்ஜெட்டில் இந்த படத்தை உருவாக்குவதாக சொல்லப்படுகிறது. […]

Continue reading …

“அயலான்” படத்தின் டீசர்?

Comments Off on “அயலான்” படத்தின் டீசர்?

‘இன்று நேற்று நாளை’ இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் “அயலான்” படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. படத்தில் சிவகார்த்திகேயன் மூன்று வேடத்தில் நடித்து வருவதாகவும் அதில் ஒரு வேடம் வேற்றுகிரக மனிதர் என்றும் சொல்லப்படுகிறது. இந்த படம் தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. இந்த படம் பைனான்ஸ் பிரச்சனைகளில் சிக்கி ரிலீஸ் ஆகாமல் முடங்கிக் கிடக்கிறது. இப்போது 2023ம் ஆண்டு தீபாவளிக்கு இந்த படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. […]

Continue reading …

மீண்டும் இணையும் விக்ரம் – ஐஸ்வர்யா ராய்?

Comments Off on மீண்டும் இணையும் விக்ரம் – ஐஸ்வர்யா ராய்?

“பொன்னியின் செல்வன்” திரைப்படம் முதல் பாகம் கடந்தாண்டு செப்டம்பர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியானது. இத்திரைப்படம் சுமார் 500 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்து தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த படமானது. படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியானது. முதல் பாகம் அளவுக்கு வரவேற்பு இல்லையென்றாலும், இந்த படத்துக்கும் சுமாரான வரவேற்புக் கிடைத்துள்ளது. இந்நிலையில் மணிரத்னம் அடுத்து கமல்ஹாசனை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். அந்த படத்தை முடித்ததும், விக்ரம் மற்றும் […]

Continue reading …

உதவி சுற்றுலா அலுவலர் பணி வாய்ப்பு!

Comments Off on உதவி சுற்றுலா அலுவலர் பணி வாய்ப்பு!

பொறியியல் பட்டதாரிகள் உதவி சுற்றுலா அதிபர் பதவிக்கு தகுதி தேர்வுக்கு பொறியியல் பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா துறையில் உள்ள உதவி சுற்றுலா அலுவலர் மற்றும் சுற்றுலா அலுவலர் ஆகிய பதவிகளுக்கு டிஎன்பிஎஸ்சி மூலமாக தேர்வுகள் நடைபெற உள்ளன. அவ்வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் சுற்றுலா அலுவலர், உதவி சுற்றுலா அலுவலர் தேர்வு நடத்தப்பட்டு காலி இடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. உதவி சுற்றுலா அலுவலர் பதவியில் 23 காலியிடங்கள் நிரப்பப்படும் நிலையில் இதற்கான திருத்தப்பட்ட தகுதி […]

Continue reading …

காட்டுயானையின் கதை படமாகிறது!

Comments Off on காட்டுயானையின் கதை படமாகிறது!

கேரளாவில் கடந்த 5 ஆண்டுகளாக குலை நடுங்க செய்த காட்டு யானையான அரிக்கொம்பனின் கதையை மலையாளத்தில் திரைப்படமாக எடுக்க உள்ளனர். கடந்த 5 ஆண்டு காலமாக கேரளாவில் இடுக்கி மாவட்டத்தின் கேரள மற்றும் தமிழக எல்லை கிராமங்களை அச்சுறுத்தி வந்த ஒற்றை காட்டு யானை அரிக்கொம்பன் (அரிசி கொம்பன்). சின்னக்கனல், சந்தனபாறை உள்ளிட்ட பல பகுதிகளில் புகுந்து வீடுகளை, விளை நிலங்களை சூறையாடிய அரிக்கொம்பன் இதுவரை 20 பேரை கொன்றுள்ளது. சமீபத்தில் தேனி மாவட்ட வன எல்லைக்குள் […]

Continue reading …

கள்ளக்குறிச்சி மாணவி குறித்து குற்றப்பத்திரிகையில் தகவல்!

Comments Off on கள்ளக்குறிச்சி மாணவி குறித்து குற்றப்பத்திரிகையில் தகவல்!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி ஒன்றில் படித்து வந்த மாணவி ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்தார். அவரது மரணம் தற்கொலை தான் என குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதையடுத்து அப்பகுதி மக்கள் பள்ளியை சூறையாடினர். இதனால் பள்ளி சில மாதங்களுக்கு மூடப்பட்டது. சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில் கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மரணம் மற்றும் கலவர வழக்கில் போலீஸ் சிபிசிஐடி போலீஸ் […]

Continue reading …

நமீதா பேட்டி!

Comments Off on நமீதா பேட்டி!

நடிகை நமீதா, “கர்நாடக மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி தோல்வியடைந்தது ஒரு பெரிய பிரச்சினையே இல்லை, மீண்டும் அதே மாநிலத்தில் விரைவில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியிடம் பாஜக ஆட்சியை பறிகொடுத்தது. கோவையில் செய்தியாளர்களின் சந்திப்பில் நடிகை நமீதா, “பாரதிய ஜனதா கட்சியின் மட்டும்தான் ஒருங்கிணைந்த மக்களுக்கு தேவையான நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. தமிழகத்தில் அண்ணாமலை தலைவராக பொறுப்பேற்றது முதல் […]

Continue reading …

மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்த அன்புமணி வேண்டுகோள்!

Comments Off on மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்த அன்புமணி வேண்டுகோள்!

மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்தக் கோரி பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறும்போது, “சென்னையை அடுத்த ஊரப்பாக்கம் அருகே காரணைப் புதுச்சேரி என்ற இடத்தில் செயல்பட்டு வந்த மதுக்கடையையும், அதன் குடிப்பகத்தையும் அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் முற்றுகையிட்டு சூறையாடியுள்ளனர். காரணைப் புதுச்சேரி பகுதியில் உள்ள மதுக்கடை மது குடிக்கும் குடிமகன்கள் போதையில் அருகில் உள்ள வீடுகளின் வாசல்களில் மயங்கி விழுந்து கிடப்பதும், அப்பகுதி வழியாக […]

Continue reading …

முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்; ஈபிஎஸ்!

Comments Off on முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்; ஈபிஎஸ்!

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கள்ளச்சாராய மரணத்திற்கு பொறுப்பேற்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்த ஒன்பது பேர் மரணமடைந்துள்ளனர். இதுகுறித்து எடப்பாடி பழனிச்சாமி இது குறித்து செய்தியாளர்களிடம் “கள்ள சாராயம் குடித்தவர்கள் மரணமடைந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது என்று சொல்லி போய் வருவது தற்போது நிரூபணம் ஆகியுள்ளது. பொம்மை முதலமைச்சர் மற்றும் திறமையற்ற முதலமைச்சர் ஆளுகின்ற மாநிலத்தில் இப்படிப்பட்ட […]

Continue reading …