Home » Posts tagged with » Netrikkan (Page 275)

மத்திய அமைச்சரின் பெருமிதம்!

Comments Off on மத்திய அமைச்சரின் பெருமிதம்!

மத்திய அமைச்சர் எல்.முருகன் “கேன்ஸ்’’ திரைப்பட விழாவில் சிவப்புக் கம்பள வரவேற்பில் கலந்து கொண்டதில், “ஒரு தமிழனாய் பெருமிதம் கொள்கிறேன்’’ என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். ஆண்டுதோறும் சர்வதேச திரைப்பட விழா பிரான்ஸ் நாட்டிலுள்ள கேன்ஸ் என்ற நகரில் நடைபெறும். இவ்வாண்டு 76வது கேன்ஸ் திரைப்பட விழா நேற்று தொடங்கியது. இவ்விழா வரும் 27ம் தேதி வரை என மொத்தம் 12 நாட்கள் இந்த திரைப்பட விழா நடைபெறவுள்ளது. விழாவில், இந்தியாவின் சார்பில், நடிகை ஈஷா குப்தா, சாரா […]

Continue reading …

கள்ளச்சாராய உயிரிழப்பு குறித்து எடப்பாடி பழனிசாமி கேள்வி?

Comments Off on கள்ளச்சாராய உயிரிழப்பு குறித்து எடப்பாடி பழனிசாமி கேள்வி?

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கள்ளச்சாராய உயிரிழப்பு குறித்து எந்த நடிகரும், சமூக நல ஆர்வலரும் குரல் கொடுக்கவில்லை என தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்த நான்கு பேர் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் அதில் 14 பேர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களின் வேட்டை தொடங்கிய நிலையில் 1600க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டது. கள்ளச்சாராயம் குறித்து எடப்பாடி பழனிச்சாமி கூறிய போது கள்ளச்சாராய உயிர் இழப்பு குறித்து எந்த நடிகரும் […]

Continue reading …

கக்கன் மகனுக்கு முதலமைச்சர் இரங்கல்!

Comments Off on கக்கன் மகனுக்கு முதலமைச்சர் இரங்கல்!

கக்கன் அவர்களின் 3வது மகன் சத்தியநாதனின் மறைவையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கலை தெரிவித்துள்ளார். 1957 முதல் 1967 வரை தமிழக முன்னாள் முதலமைச்சர் காமராஜர் தலைமையிலான அமைச்சரவையில் உள்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அமைச்சராகப் பதவிவகித்தவர் அமைச்சர் கக்கன். இவர் அரசியலிலும், பொதுவாழ்க்கையிலும் நேர்மையாக செயல்பட்டதற்காக இன்றளவும் எல்லோராலும் போற்றப்படுகிறார். இவரது 3வது மகன் சத்தியநாதன் அரசு மருத்துவராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். சென்னையில் காலனியில் வசித்து வந்த அவர்,  தன் வீட்டில் வழுக்கி விழந்து உயிரிழந்துள்ளார். […]

Continue reading …

நெல்சனுடன் தனுஷ் திடீரென சந்திப்பு!

Comments Off on நெல்சனுடன் தனுஷ் திடீரென சந்திப்பு!

இயக்குனர் நெல்சன் “கோலமாவு கோகிலா” மற்றும் “டாக்டர்” என அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுத்தவர். இவர் மூன்றாவது படத்திலேயே விஜய்யை இயக்கும் வாய்ப்பை பெற்றார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீசான அந்த படம் மோசமான விமர்சங்களைப் பெற்றது. வசூலும் பெரியளவில் இல்லை. அதோடு மட்டுமல்லாமல் படத்தின் தோல்வியால் நெல்சனை நெட்டிசன்கள் சமூகவலைதளங்களில் கொடூரமாக ட்ரோல் செய்யப்பட்டார். இப்போது அவர் இயக்கும் “ஜெயிலர்” திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்த படம் ஆகஸ்ட் 11ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. […]

Continue reading …

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ டிரெயிலர் ரிலீஸ்!

Comments Off on ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ டிரெயிலர் ரிலீஸ்!

விஜய் சேதுபதி தொடர்ந்து தோல்வி படங்களாக நடித்து வந்தார். ஆனால், “விடுதலை” வெற்றிப்படமாக அமைந்தது. இதையடுத்து அவருக்கு மீண்டும் ஏறுமுகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அவர் நடிப்பில் சில ஆண்டுகளாக ரிலீசாகாமல் முடங்கிக் கிடந்த ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ திரைப்படம் மே 12ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில், வெங்கட கிருஷ்ணா ரோகநாத் இயக்கத்தில் உருவாகிய படம் “யாதும் ஊரே யாவரும் கேளீர்.” இப்படத்தில் மேகா ஆகாஷ் ரகுஆதித்யா, […]

Continue reading …

லைகா நிறுவனத்தில் அமலாக்கத்துறை திடீர் சோதனை!

Comments Off on லைகா நிறுவனத்தில் அமலாக்கத்துறை திடீர் சோதனை!

அமலாக்கத்துறை அதிகாரிகள் தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைகா நிறுவனத்தின் சென்னை அலுவலகங்களில் சோதனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. லைகா நிறுவனம் ரஜினி, கமல், அஜீத், விஜய் உள்பட பல பிரபலங்களின் படங்களை தயாரித்து வரும் நிறுவனம். சமீபத்தில் இந்நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான “பொன்னின் செல்வன்” திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது. தற்போது “இந்தியன் 2”, “லால் சலாம்“, “விடாமுயற்சி” உள்பட ஒரு சில படங்களை இந்நிறுவனம் தயாரித்து வருகிறது. […]

Continue reading …

டி இமான் வெளியிட்ட பதிவு!

Comments Off on டி இமான் வெளியிட்ட பதிவு!

கடந்த 2008ம் ஆண்டு தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான டி இமான் மோனிகாரிச்சர்ட் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆனால் இருவருக்கும் கருத்து வேறுபாட்டின் காரணமாக விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர். கடந்த வருடம் டி.இமான், எமிலி என்பவரை மறுமணம் செய்து கொண்டார். இவர்கள் முதலாவது திருமண கொண்டாடுகிறார்கள். அதன் அழகான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி லைக்ஸ் குவிந்து வருகிறது. இமான் தமிழ்த் திரைப்படங்களுக்கு பின்னணியிசையும் பாடல்களும் அமைத்துள்ளார். இவருக்கு […]

Continue reading …

கேரளா ஸ்டோரி குறித்து தமிழக அரசு பதில்!

Comments Off on கேரளா ஸ்டோரி குறித்து தமிழக அரசு பதில்!

தமிழக அரசு “கேரளா ஸ்டோரி” திரைப்படம் தடை செய்யப்பட்டதாக தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளித்துள்ளது. “தி கேரளா ஸ்டோரி” பாலிவுட் படம் இஸ்லாமியர்களை தவறாக சித்தரிப்பதாக அந்த படத்தை தடை செய்ய கோரி பல அமைப்புகள் வழக்கு தொடர்ந்தன. ஆனால் தணிக்கை செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இப்படத்தை தடை செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் பதிலளித்தது. திரைப்படம் வெளியான நிலையில் சில மாநிலங்களில் படத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடையை எதிர்த்து தயாரிப்பு […]

Continue reading …

சாராய ஆறு தான் ஓடுகிறது: ஈபிஎஸ்!

Comments Off on சாராய ஆறு தான் ஓடுகிறது: ஈபிஎஸ்!

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தேர்தலின் போது தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் பாலாறும் தேனாறும் ஓடும் என்றார்கள். ஆனால் தற்போது சாராய ஆறு தான் ஓடுகிறது என தெரிவித்துள்ளார். கள்ளச்சாராய விற்பனை தமிழகத்தில் கடந்த இரண்டாண்டுகளில் அதிகரித்துள்ளது. தங்குதடையின்றி தமிழக முழுதும் கள்ளச்சாராயம் கிடைக்கிறது. தற்போது 1600 பேர் கள்ளச்சாராய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இந்த நடவடிக்கையை ஏன் எடுக்கவில்லை. கள்ளச்சாராய விற்பனையை தடுக்க போலீசும் அரசும் தவறிவிட்டது, இதனால் பல உயிர்களை […]

Continue reading …

போக்குவரத்து விதி மீறினால் தப்பிக்க முடியாது!

Comments Off on போக்குவரத்து விதி மீறினால் தப்பிக்க முடியாது!

கட்டுப்பாட்டு அறையிலிருந்தே போக்குவரத்து விதியை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் முறை அமல்படுத்தப்படவுள்ளதால் இனி போக்குவரத்து விதியை மீறுபவர்கள் தப்பிக்க முடியாது என்று கூறப்படுகிறது. அதிவேகமாக வாகனம் ஓட்டுவது, ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் பயணம் செய்வது, போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்துவது, சிக்னல்களை மீறி செல்வது, சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்வது போன்ற போக்குவரத்து விதிகளுக்கு மீறி வாகன ஓட்டிகள் செயல்பட்டால் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையிலிருந்து அபராதம் விதிக்க புதிய நடைமுறை […]

Continue reading …