Home » Posts tagged with » Netrikkan (Page 279)

தாமதமாகிறது வங்கக்கடல் புயல்!

Comments Off on தாமதமாகிறது வங்கக்கடல் புயல்!

இன்று மாலை வங்கக்கடலில் புயல் உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. ஆனால், தற்போது இந்த புயல் தாமதம் ஆகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மையம் தோன்றியதையடுத்து நேற்று அது காற்றழுத்த மண்டலமாக மாறியது. இன்று மாலை 5 மணியளவில் புயலாக உருமாறும். வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வங்கதேசம் மற்றும் மியான்மர் இடையே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் […]

Continue reading …

சௌந்தர்யா ரஜினிகாந்த் காவல் நிலையத்தில் புகார்!

Comments Off on சௌந்தர்யா ரஜினிகாந்த் காவல் நிலையத்தில் புகார்!

ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தனது நகைகள் காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இன்று அவரது இளைய மகள் சௌந்தர்யா காவல் நிலையத்தில் தனது கார் சாவியை காணவில்லை என புகாரளித்துள்ளார். கடந்த ஏப்ரல் 23ம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளும் கோச்சடையான் பட இயக்குனருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது கார் சாவியை காணவில்லை என தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். தேனாம்பேட்டையிலுள்ள கல்லூரி அருகே சென்று […]

Continue reading …

கர்நாடக தேர்தலில் பரபரப்பு!

Comments Off on கர்நாடக தேர்தலில் பரபரப்பு!

இன்று கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. தேர்தல் அதிகாரிகளுடனான வாக்குவாதத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று கர்நாடக சட்டமன்றத்தின் 224 தொகுதிகளில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. இத்தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இன்று காலை முதலாக வாக்குச்சாவடிகளில் மக்கள் தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் விஜயநகர் மாவட்டத்தின் மசபின்னலா கிராமத்தில் மக்களுக்கும், தேர்தல் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது. […]

Continue reading …

பிடிஆர் பற்றி சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்தி!

Comments Off on பிடிஆர் பற்றி சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்தி!

சமீபத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக இரண்டு ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அவரை நிதியமைச்சர் பதவி மாற்றப்படும் என்றும் கூறப்பட்டது. வருகிறது. தற்போது பிடிஆர் பேசியதாக கூறப்படும் மூன்றாவது ஆடியோ விரைவில் வெளியாகப் போவதாகவும், இந்த ஆடியோவில் முதலமைச்சர் குடும்பத்தின் முக்கிய நபர் குறித்த அதிர்ச்சி தகவல் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே வெளியான இரண்டு ஆடியோவுக்கே திமுகவினர் பதில் சொல்ல முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் நிலையில் மூன்றாவது ஆடியோ வெளியானால் என்னவாகும் என்பதை […]

Continue reading …

ரத்தம் கொண்டு செல்லும் டிரோன்கள்!

Comments Off on ரத்தம் கொண்டு செல்லும் டிரோன்கள்!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் டிரோன்கள் மூலம் ஒரு மருத்துவமனையிலிருந்து இன்னொரு மருத்துவமனைக்கு ரத்தம் கொண்டு செல்லும் பரிசோதனை வெற்றி பெற்றதையடுத்து இம்முயற்சி நாடும் முழுவதும் மேற்கொள்ளப்படும் என அறிவித்துள்ளது. ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அவசரமாக நோயாளிகளுக்கு ரத்தம் தேவைப்படும் நேரத்தில் துரிதமாக ரத்தத்தை டிரோன் மூலம் கொண்டு செல்ல முயற்சிகள் நடத்தப்பட்டது. இந்த டிரோன் மூலம் மருந்துகள் மற்றும் ரத்தம் கொண்டு செல்லப்படுவதால் ஏதேனும் சேதம் ஏற்படுமா என்பது குறித்த பரிசோதனை இந்திய மருத்துவ ஆராய்ச்சியை […]

Continue reading …

இம்ரான்கான் கைது!

Comments Off on இம்ரான்கான் கைது!

முன்னாள் பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான்கானை 8 நாட்கள் சிறையிலடைக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சில வழக்குகள் தொடர்பாக பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக அவர் லாகூரிலிருந்து வந்துள்ளார். நேற்று நீதிமன்றம் வெளியே பாகிஸ்தான் ரேஞ்சர் படையினர் இம்ரான்கானை கைது செய்தனர். அவரை தடுக்க முயன்ற அவரது வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டனர். பலத்த பாதுகாப்புடன் இம்ரான்கானை வாகனத்தில் அழைத்துச் சென்றனர். இம்ரான்கானின் கட்சியினர் அவரை போலீஸ் கைது செய்துள்ளதாகவும், துன்புறுத்தி வருவதாகவும் புகார் கூறியுள்ளனர். […]

Continue reading …

பிரதமர் மோடி ஜோ பைடனுடன் சந்திப்பு!

Comments Off on பிரதமர் மோடி ஜோ பைடனுடன் சந்திப்பு!

ஜூன் மாதம் பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு அரசு முறை பயணமாக செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இச்சந்திப்பின்போது அவர் வெள்ளை மாளிகையில் அமெரிக்கா அதிபர் ஜோபைடனை சந்தித்து பேச்சுவார்த்தை நடந்து போவதாக கூறப்படுகிறது. பிரதமர் மோடி அவ்வப்போது வெளிநாட்டு சுற்றுப்பயணம் செய்து பல நாட்டு அதிபர்களை சந்தித்து வருகிறார். இதன் மூலம் இந்தியாவுக்கு முன்னணி நாடுகளின் ஆதரவு பெருகி வருகிறது. வரும் ஜூன் மாதம் அரசு முறை பயணமாக அமெரிக்காவுக்கு பிரதமர் மோடி செல்ல இருப்பதாக […]

Continue reading …

இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே போர் மூளும் அபாயம்!

Comments Off on இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே போர் மூளும் அபாயம்!

நேற்று காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீன முக்கிய தலைவர்கள் உட்பட 15 பேர் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து இரு நாடுகளுக்குமிடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே நீண்டகாலமாக பகை நிலவி வருகிறது. கடன் அவ்வப்போது போரிட்டு வருகிறது. கடந்த வாரம் பாலஷ்தீன உண்ணாவிரத போராட்ட நடத்தி வந்த பிரபலம் காதர் அட்னன் மரணமடைந்தார். இதையடுத்து. அந்த நாட்டிலிருந்து, இஸ்ரேல் நாட்டை நோக்கி ராணுவம் ஏவுகணை […]

Continue reading …

கர்நாடகாவில் ஆட்சி செய்யப்போவது யார்?

Comments Off on கர்நாடகாவில் ஆட்சி செய்யப்போவது யார்?

இன்று கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு தற்போது வெளியாகி உள்ளது. காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்று தேர்தலுக்கு முந்தைய காலக்கட்டத்தில் கருத்து நிலவி வந்தது. தேர்தலுக்குப் பின் நடத்திய கருத்துக்கணிப்பில் பாஜக தான் அதிக இடத்தில் வெல்லும் என்று கூறப்பட்டுள்ளது. பாஜக 94 முதல் 117 இடங்கள் வரை வெல்லும் என்றும் காங்கிரஸ் 91 முதல் 106 இடங்களை கைப்பற்றும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் மதச்சார்பற்ற ஜனதா […]

Continue reading …

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலி!

Comments Off on அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலி!

பெண் இன்ஜினியர் உள்ளிட்ட 8 பேர் அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பலியாகி உள்ளனர். சமீப காலமாகவே அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு நடந்து வருவது அதிகரித்துள்ளது. சில நாட்களுக்கு முன், பள்ளிக்கூடம், கல்லூரி வளாகம், கேளிக்கை விடுதிகளில் துப்பாக்கிச் சூடு நடந்தது. டெக்சாஸ் மாகாணத்தில் டெல்லெஸ் நகரில் உள்ள வணிக வளாகத்தில் கடந்த சனிக்கிழமை மாலையில் துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில், மவுரிஹோ ஹர்சியா (33) என்ற நபர் நடத்திய, இந்த துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலியாகினர். இதுகுறித்து […]

Continue reading …