Home » Posts tagged with » Netrikkan (Page 280)

நந்தினியின் உயர்கல்வி குறித்து முதலமைச்சரின் அறிவிப்பு!

Comments Off on நந்தினியின் உயர்கல்வி குறித்து முதலமைச்சரின் அறிவிப்பு!

நேற்று பிளஸ் டூ தேர்வின் முடிவுகள் வெளியானது. அதில், 600க்கு 600 மதிப்பெண் வாங்கிய நந்தினியின் உயர்கல்வி செலவை தமிழக அரசே ஏற்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த நந்தினி மாணவி தமிழ் உள்பட அனைத்து பாடங்களிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று 600க்கு 600 என்ற மதிப்பெண்ணை பெற்றுள்ளார். இதனையடுத்து அந்த மாணவிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இன்று அவர் முதலமைச்சரை சந்தித்து ஆசி பெற்றார். இச்சந்திப்பைப் பற்றி நந்தினி கூறும் […]

Continue reading …

ஓபிஎஸ்ஸின் அதிரடி அறிவிப்பு!

Comments Off on ஓபிஎஸ்ஸின் அதிரடி அறிவிப்பு!

முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் நேற்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்து வரும் காலத்தில் இருவரும் இணைந்து செயல்படுவோம் என தெரிவித்தார். அடுத்த கட்டமாக சசிகலாவையும் விரைவில் சந்திப்பேன் என ஓபிஎஸ் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவின் ஓபிஎஸ், இபிஎஸ் என இரு அணிகளாக பிரிந்திருக்கும் சூழ்நிலையில் திடீரென நேற்று டிடிவி தினகரனுடன் ஓபிஎஸ் சந்தித்து இருவரும் இணைந்து அதிமுகவின் மீட்போம் என தெரிவித்தார். “சசிகலாவையும் விரைவில் சந்திக்க உள்ளேன். […]

Continue reading …

விழா மேடையில் பேசிய எஸ்.ஏ.சி!

Comments Off on விழா மேடையில் பேசிய எஸ்.ஏ.சி!

சமீபத்தில் நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தனது மகன் விஜய் பெயரில் கட்சி ஒன்றை தொடங்கினார். ஆனால் அந்த கட்சிக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறிய விஜய் தனது ரசிகர்கள் அந்த கட்சியில் இணைய வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார். இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு எழுந்தது. இதற்கு அவரது மனையும் விஜய்யின் அம்மா ஷோபாவுக்கு விரும்பமின்றி அக்கட்சியிலிருந்து விலகி விஜய்க்கு ஆதவளித்தார். இதனால் விஜய் குடும்பத்தில் அவரது பெற்றோர்களுக்கும் அவருக்கும் இடையே […]

Continue reading …

பயோபிக் இரண்டாம் பாகத்தில் விஷால்?

Comments Off on பயோபிக் இரண்டாம் பாகத்தில் விஷால்?

நடிகர் ஜீவாவிடம் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் பயோபிக் திரைப்படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இத்திரைப்படம் அடுத்த ஆண்டு ஆந்திரா சட்டசபை தேர்தலுக்குள் வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே ஜெகன் மோகன் ரெட்டியின் தந்தையும் முன்னாள் முதலமைச்சருமான ராஜசேகர ரெட்டியின் பயோபிக், ‘யாத்ரா’ என்ற பெயரில் எடுக்கப்பட்டு அதில் மம்மூட்டி நடித்தார். இப்போது “யாத்ரா” படத்தின் இரண்டாம் பாகமும் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் பாகத்தில் மம்மூட்டி நடித்து, அந்த படம் […]

Continue reading …

அஜீத்தை பற்றி சுரேஷ் சந்திரா டுவீட்!

Comments Off on அஜீத்தை பற்றி சுரேஷ் சந்திரா டுவீட்!

கடந்த சில மாதங்களாக நடிகர் அஜீத் பைக்கில் உலகம் முழுவதும் சுற்றி வருகிறார். சமீபத்தில் கூட அவர் நேபாளம் மற்றும் பூடான் ஆகிய நாடுகளுக்கு சென்றார். அடுத்த வாரம் சென்னை திரும்பும் அஜீத் அதன் பிறகு மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகும் “விடாமுயற்சி” திரைப்படத்தில் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். அஜீத்தின் அடுத்த கட்ட உலக பைக் சுற்றுப்பயணம் குறித்த அறிவிப்பை அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். அஜீத் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்துவிட்டார் […]

Continue reading …

மனைவிக்கு புகழாரம் சூட்டிய விராட்!

Comments Off on மனைவிக்கு புகழாரம் சூட்டிய விராட்!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி “அனுஷ்கா சர்மா என்னை சிறந்த நபராக மாற்றினார்” என்று தெரிவித்துள்ளார். விராட் கோலி இந்திய கிரிக்கெட் அணியின் தோனிக்குப் பிறகு சிறந்த கேப்டன் என்று பெயரெடுத்தவர். ஆனால், ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் ஒரு சில தொடர்களில் தொடர் தோல்விகளால் தன் கேப்டன் பொறுப்பை ராஜினாமா செய்தார். தற்போது, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரராகவும், ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியின் வீரரராகவும் செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் ஒரு […]

Continue reading …

பா ரஞ்சித் உதவியாளர் மீது வழக்கு..!

Comments Off on பா ரஞ்சித் உதவியாளர் மீது வழக்கு..!

பா.ரஞ்சித்தின் உதவியாளரான விடுதலை சிகப்பி இந்து கடவுள்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதால் ஐந்து பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். விடுதலை சிகப்பி, சமீபத்தில் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இந்து கடவுள்களான ராமர் சீதை லட்சுமணன் அனுமன் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து அமைப்பினர் புகாரளித்தனர். இப்புகாரின் அடிப்படையில் விடுதலை சிகப்பு மீது கலகத்தை தூண்டுதல், குறிப்பிட்ட […]

Continue reading …

ஆதிபுருஷ் டிரெயிலர்!

Comments Off on ஆதிபுருஷ் டிரெயிலர்!

நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த பிரபாஸ் நடிப்பில் தயாராகிய “ஆதிபுருஷ்” திரைப்படத்தின் டிரெயிலர் தற்போது வெளியாகி உள்ளது. இதிகாச திரைப்படமான “ஆதிபுருஷ்”ல் பிரபாஸ் ராமனாக நடித்துள்ளார். இந்தி நடிகர் சயிப் அலிகான் ராவணனாக நடித்துள்ளார். இந்த படத்தை தன்ஹாஜி உள்ளிட்ட படங்களை இயக்கிய ஓம் ராவத் இயக்கியுள்ளார். படத்தின் டீசர் அனைத்து இந்திய மொழிகளிலும் கடந்த ஆண்டில் வெளியானது. ஆனால் அனிமேஷன் படமான இதன் கிராபிக்ஸ் காட்சிகள் சுமாராக இருப்பதாக பலரும் அதிருப்தி தெரிவித்தனர். இதனால் படத்தின் […]

Continue reading …

பிரியங்கா காந்தியின் வாக்குறுதி!

Comments Off on பிரியங்கா காந்தியின் வாக்குறுதி!

நாளை நடைபெறவிருக்கும் கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது பாஜக மற்றும் காங்கிரஸ் இரு கட்சிகளும் இலவச அறிவிப்புகளை வெளியிட்டன. பாஜக அரை லிட்டர் பால் இலவசம், ஆண்டுக்கு மூன்று சிலிண்டர் இலவசம் போன்ற வாக்குறுதிகளை அளித்தது. பெண்களுக்கு இலவச பஸ் பயணம், இலவச அரிசி, இலவச மின்சாரம் போன்ற வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சியும் கொடுத்தது. கர்நாடகாவை அடுத்து தற்போது தெலுங்கானா மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் செய்த பிரியங்கா காந்தி அங்கும் சில இலவச வாக்குறுதிகளை அளித்துள்ளார். […]

Continue reading …

வானதி சீனிவாசனின் கோரிக்கை!

Comments Off on வானதி சீனிவாசனின் கோரிக்கை!

கோவை தெற்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் துணை முதல்வர் மற்றும் முக்கிய அமைச்சர்களின் பதவிகள், பட்டியல் இனத்தவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும் போது, “திமுக அமைச்சரவையில் பெரும் மாற்றங்கள் செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தயாராகி வருவதாக செய்திகள் வருகின்றன. பட்டியலினத்தவர்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்குவது தான் உண்மையான சமூக நீதி ஆகும். இந்த அமைச்சரவை மாற்றத்தில் பட்டியலினத்தவர்களுக்கு துணை முதலமைச்சர் மற்றும் முக்கிய துறைகளின் அமைச்சர் பதவி வழங்க […]

Continue reading …