Home » Posts tagged with » Netrikkan (Page 284)

கூகுள் அக்கவுண்ட்களுக்கு பாஸ்வேர்டு தேவையில்லை!

Comments Off on கூகுள் அக்கவுண்ட்களுக்கு பாஸ்வேர்டு தேவையில்லை!

இனிமேல் கூகுள் அக்கவுண்ட்க்கு பாஸ்வேர்ட் தேவையில்லை என்று கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. கூகுள் அக்கவுண்ட், ஜிமெயில் உள்பட்டவைகளுக்கு பாஸ்வேர்ட் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இனிமேல் கூகுள் அக்கவுண்டுகளுக்கு பாஸ்வேர்டுகளை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. பிங்கர் பிரிண்ட், பேஸ் அன்லாக், ஸ்கிரீன் லாக் போன்ற வசதிகளைக் கொண்டே கூகுள் அக்கவுண்ட்களை இயக்க முடியும் என கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால் அதே சமயம் பாஸ்வேர்ட், டூ ஸ்டெப் வெரிபிகேஷன் போன்ற முந்தைய வழிகளிலும் கூகுள் […]

Continue reading …

கவர்னருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!

Comments Off on கவர்னருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!

தமிழக ஆளுநர் ரவி, “திராவிட மாடல் ஒன்று இல்லை என்றும் திராவிட மாடல் காலாவதி ஆகிவிட்டது. காலாவதி ஆன கொள்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. திராவிட மாடல் என்பது ஒரே நாடு ஒரே பாரதம் என்று கொள்கைக்கு எதிரானது” என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார். கவர்னரின் இப்பேட்டிக்கு ஏற்கனவே பலரும் கண்டனம் தெரிவித்தனர். தற்போது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: “தமிழ்நாட்டின் திராவிட மாடலே இனி இந்தியாவின் அனைத்து […]

Continue reading …

விஜயபாஸ்கரின் காளை உயிரிழப்பு!

Comments Off on விஜயபாஸ்கரின் காளை உயிரிழப்பு!

புதுக்கோட்டை அருகே கடந்த சில நாட்களுக்கு முன்னாள் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் முன்னாள் அதிமுக அமைச்சர் விஜய் பாஸ்கரின் காளை கலந்து கொண்டது. வாடிவாசலிலிருந்து வெளியான சில நிமிடங்களிலேயே காளை மயங்கி விழுந்தது. மயங்கி விழுந்த காளையை கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக சிகிச்சை பெற்று வந்தது. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் காளை உயிரிழந்துவிட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. கருப்பு கொம்பன் என்று அழைக்கப்படும் இந்த காளை புதுக்கோட்டை வடசேரி பட்டி நடந்த […]

Continue reading …

உக்ரைன் மக்களை கொன்று குவித்த ரஷ்யா!

Comments Off on உக்ரைன் மக்களை கொன்று குவித்த ரஷ்யா!

ரஷ்ய அதிபர் மாளிகையின் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக உக்ரைனின் கீவ் நகர் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் தொடங்கி ஓராண்டுக்கும் மேலாகி விட்டது. போரில் உக்ரைனுக்கு நேட்டோ நாடுகள் உதவி வரும் நிலையில் உக்ரைன் தொடர்ந்து ரஷ்யாவை எதிர்த்து வருகிறது. நேற்று ரஷ்ய அதிபர் மாளிகை மீது தாக்குதல் நடத்த டிரோன்கள் பறந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக ரஷ்ய ராணுவம் டிரோன்களை சுட்டு வீழ்த்தியது. […]

Continue reading …

ஆசிரியரால் சிறுவனுக்கு பாலியல் தொல்லை!

Comments Off on ஆசிரியரால் சிறுவனுக்கு பாலியல் தொல்லை!

ஆசிரியர் ஒருவர் 12 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால், 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அரபு ஆசிரியராக பணியாற்றிய சாகுல் அமீது மீது குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த வழக்கிற்கு இன்று […]

Continue reading …

சூப்பர்ஸ்டார் திரைப்பட அப்டேட்!

Comments Off on சூப்பர்ஸ்டார் திரைப்பட அப்டேட்!

சன் பிக்சர்ஸ் நிறுவனம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தின் முக்கிய அப்டேட் குறித்து இன்று மாலை 6 மணிக்கு வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜெயிலர்’. கடந்த சில மாதங்களாக திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. சமீபத்தில் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. படம் விரைவில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இன்று மாலை 6 […]

Continue reading …

ராகுலுக்கு சிறைத்தண்டனை வழங்கிய நீதிபதிக்கு பதவி உயர்வு!

Comments Off on ராகுலுக்கு சிறைத்தண்டனை வழங்கிய நீதிபதிக்கு பதவி உயர்வு!

இரண்டு ஆண்டுகள் ராகுல் காந்திக்கு சிறை தண்டனை வழங்கிய நீதிபதிக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சூரத் நீதிமன்றத்தில் நடந்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி வர்மா என்பவர் தீர்ப்பளித்தார். அவருடைய தீர்ப்பால் ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டது. சூரத் நீதிமன்ற நீதிபதியாக இருந்த வர்மா, தற்போது ராஜ்கோட் மாவட்ட நீதிபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டு […]

Continue reading …

’தி கேரளா ஸ்டோரி’ தடையில்லை!

Comments Off on ’தி கேரளா ஸ்டோரி’ தடையில்லை!

நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கும் “தி கேரளா ஸ்டோரி” திரைப்படம் தமிழகத்தில் திரையிடப்பட்டால் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் என உளவுத்துறை எச்சரித்து இருந்தது. இதையடுத்து தமிழகத்தில் இத்திரைப்படம் திரையிடப்படுமா என்ற கேள்வி எழுந்தது. “தி கேரளா ஸ்டோரி” திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் தியேட்டர்களுக்கு போலீசார் தீவிர பாதுகாப்பு அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. திரைப்படம் திரையிடப்பட்டால் சட்டம் ஒழுங்கு பாதிக்குமே என உளவுத்துறை எச்சரித்த நிலையில் போலீசார் தியேட்டர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க […]

Continue reading …

கோவில் நிதி விதி மீறல் குறித்து அண்ணாமலை கருத்து!

Comments Off on கோவில் நிதி விதி மீறல் குறித்து அண்ணாமலை கருத்து!

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவில் நிதியை எடுத்து, வாகனங்கள் வாங்குவது விதி மீறல் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில், “இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகச் செலவுகளுக்காக, இந்து சமய அறநிலையத்துறை சட்டப்படி, கோவில்கள் வருமானத்திலிருந்து, 12% ஒதுக்கப்படுகிறது. அதற்கு மேல், கோவில் நிதியை எடுத்து, வாகனங்கள் வாங்குவது என்பது விதி மீறலாகும். கோவில் நிதியை அறநிலையத் துறையின் இதர செலவுகளுக்குப் பயன்படுத்தக் கூடாது என்று மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றமே […]

Continue reading …

மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்த விஜய்!

Comments Off on மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்த விஜய்!

இன்று மாலை விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் நடிகர் விஜய் சந்தித்த வீடியோ வெளியாகும் என்று புஷ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் “வாரிசு” திரைப்பட வெற்றியைத் தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், “லியோ” படத்தில் நடித்து வருகிறார். விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் விலையில்லா விருந்தகத்தைச் சிறப்பாக செயல்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் விலையில்லா விருந்தகத்தை சிறப்பாகச் செயல்படுத்தி வரும் மக்கள் இயக்க நிர்வாகிகள விஜய் சந்தித்தார். இந்த வீடியோ எப்போது வெளியாகும் என்று விஜய் […]

Continue reading …