Home » Posts tagged with » Netrikkan (Page 283)

அஜீத்தின் புகைப்படம் வைரல்!

Comments Off on அஜீத்தின் புகைப்படம் வைரல்!

மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தின் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அஜீத்தின் வேர்ல்ட் டூர் டாகுமெண்ட்ரியாக எடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதை நிரூபிக்கும் வகையில் அஜீத்தின் பைக் டிரிப் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது. நேபாளத்திற்கு சுற்று பயணம் சென்றுள்ள அஜீத் அங்குள்ள மக்களுடன் எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில் அஜீத் மிகவும் வயதான தோற்றத்தில் தொந்தியும் தொப்பையுமாக இருப்பதை பார்த்து நெட்டிசன்ஸ் கிண்டலடித்ததோடு மட்டுமல்லாமல் […]

Continue reading …

கஸ்டடி படத்தின் டிரெயிலர்!

Comments Off on கஸ்டடி படத்தின் டிரெயிலர்!

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நாகசைதன்யா “கஸ்டடி” திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். இத்திரைப்படத்தில் நாயகியாக இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் வில்லனாக அரவிந்த்சாமி நடித்திருக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் சரத்குமார், வென்னேலா கிஷோர், பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி மற்றும் பிரேமி விஷ்வநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ள இப்படத்தின் […]

Continue reading …

திமுக ஆட்சியை கலைக்க வேண்டும்: ஜெயக்குமார்!

Comments Off on திமுக ஆட்சியை கலைக்க வேண்டும்: ஜெயக்குமார்!

ஆளுனரே தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என சொல்லிவிட்டார், அதனால் திமுக ஆட்சியை கலைக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநர் ரவி நேற்று அளித்த பேட்டி ஒன்றில்லை தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று தெரிவித்து இருந்தார். இக்குற்றச்சாட்டுக்கு திமுக அமைச்சர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். தமிழகத்தின் முதல் குடிமகனான ஆளுநர் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை […]

Continue reading …

அக்காவுக்கு பார்த்த மணமகனை அபகரித்த தங்கை…

Comments Off on அக்காவுக்கு பார்த்த மணமகனை அபகரித்த தங்கை…

திருமணம் நடைபெறப் போகும் பெண் ஒருவர் கட்டிட மாடியில் ஏறி குதித்து தற்கொலை செய்யப் போவதாக மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பீகார் மாநிலம் சப்ரா மாவட்டம் முராக்பூர் கிராமத்தைச் சேர்ந்த நிஷாவுக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. மணமேடையில், சக்ரா நகரின் பிண்டோலியின் வசிக்கும் ஜக்மோகன் மஹதொஅவின் மகன் ராஜேஸ்குமார் மணமகனாக நின்று கொண்டிருந்தார். மணமகன், மணமகள் இருவரும் மணமேடைக்கு வந்து மாலை அணிவித்துக் கொண்டனர். அங்கு உறவினர்கள், நண்பர்கள் எனப் பலரும் கூடியிருந்தனர். அப்போது, […]

Continue reading …

பத்மனுக்கு ஜாமின் இல்லை: சென்னை உயர்நீதிமன்றம்!

Comments Off on பத்மனுக்கு ஜாமின் இல்லை: சென்னை உயர்நீதிமன்றம்!

கலாஷேத்ரா கல்லூரி உதவி பேராசிரியர் ஹரி பத்மன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டார். ஹரிபத்மன் சார்பில் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இடைக்கால ஜாமின் மனு தாக்கல் செய்தார். இந்த ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் ஹரிபத்மனுக்கு இடைக்கால ஜாமின் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் இந்த மனு மீதான விசாரணை ஜூன் 16ம் தேதி […]

Continue reading …

ஆளுநர் குறித்து முத்தரசன் பேட்டி!

Comments Off on ஆளுநர் குறித்து முத்தரசன் பேட்டி!

சிபிஐ மாநில பொதுச் செயலாளர் முத்தரசன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை டிஸ்மிஸ் செய்து கைது செய்ய வேண்டும் என்று பேட்டி அளித்துள்ளார். கடந்த சில மாதங்களாக ஆளுநர் சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசி வருகிறார். குறிப்பாக நேற்று அவர் திராவிட மாடல் குறித்து பேசிய கருத்துக்கு பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. ஆளுநரின் கருத்துக்கு ஒரு சிலர் பெரும் ஆதரவு தந்து கொண்டிருக்கின்றனர். இன்னொரு பிரிவினர் பெரும் எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர். கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் இது […]

Continue reading …

ரஷிய பிரதிநிதியை தாக்கிய உக்ரைன் எம்.பி.,

Comments Off on ரஷிய பிரதிநிதியை தாக்கிய உக்ரைன் எம்.பி.,

உக்ரைன் எம்.பி. அலெக்சாண்டர் துருக்கி தலைநகர் அங்காராவில் நடைபெற்ற மாநாட்டில் ரஷ்ய பிரதிநிதியை, தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்ய நாடு கடந்த ஓராண்டுகள் நிறைவடைந்துள்ளது. இருதரப்பிலும் ஆயிரக்கணக்கான வீரர்கள் மரணமடைந்துள்ளனர். உக்ரைனுக்கு ஆதரவாக மேற்கத்திய நாடுகளும், அமெரிக்காவும் ஆயுதம் மற்றும் பொருளாதார உதவி செய்து வருகின்றன இதனால், உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது. சமீபத்தில் அதிபர் புதினை கொல்ல உக்ரைன் டிரோன் அனுப்பியது. இதற்கு ரஷ்யா பதிலடி கொடுத்து வருகிறது. துருக்கி தலைநகர் […]

Continue reading …

புதுவை அரசு வெளியிட்ட பெண் ஊழியர்களுக்கான அறிவிப்பு!

Comments Off on புதுவை அரசு வெளியிட்ட பெண் ஊழியர்களுக்கான அறிவிப்பு!

அரசு பெண் ஊழியர்களுக்கு 2 மணி நேரம் பணிச் சலுகை வழங்குவதாக புதுசை அரசு அறிவித்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் அரசுத் துறைகளில் பணியாற்ற்றும் பெண் ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை அன்று காலை நேரம் 2 மணி நேரம் பணி சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இப்பணிச்சலுகை அறிவிப்பை இன்று முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் கவர்னர் தமிழிசை கூட்டாக அறிவித்தனர். இதற்கான அரசாணை கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்டது. அதில், வெள்ளிக்கிழமை தோறும் பெண்களின் பாரம்பரிய வழிபாடுகள் மற்றும் பூஜை செய்ய வெள்ளிக்கிழமைகளில் காலை […]

Continue reading …

குப்பை கொட்டுவதில் ஏற்பட்ட தகராறில் 6 பேர் சுட்டுக்கொலை!

Comments Off on குப்பை கொட்டுவதில் ஏற்பட்ட தகராறில் 6 பேர் சுட்டுக்கொலை!

குப்பை கொட்டுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் மத்திய பிரதேசத்தில் மொரீனா மாவட்டம் லேபா கிராமத்தில் 6 பேர் துப்பாக்கியால் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் மொரீனா மாவட்டம், லேபா கிராமத்தைச் சேர்ந்த கஜேந்திர சிங் மற்றும் தீர் சிங் ஆகிய இரு குடும்பத்தினரிடையே கடந்த 2013ம் ஆண்டு முதல் குப்பை கொட்டுவது தொடர்பாக தகராறு இருந்து வருகிறது. இரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே இன்று காலையில் தகரராறு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த கஜேந்திர […]

Continue reading …

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் 5 வீரர்கள் மரணம்!

Comments Off on காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் 5 வீரர்கள் மரணம்!

காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் ஏற்பட்ட தாக்குதலில் 5 வீரர்கள் வீரமரணமடைந்தனர். இன்று காலையில் ஜம்மு காஷ்மீரில் ரஜோரி மாவட்டம் கண்டி வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பயங்கரவாதிகள் பதுக்கிவைத்திருந்த வெடிகுண்டு வெடித்ததாகக் கூறப்படுகிறது. இதில், 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் ஒரு அதிகாரி உள்ளிட்ட 4 பேர் படுகாயமடைந்ததாகவும், அவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் உள்ள பயங்கரவாதிகளை தொடர்ந்து தேடும் பணி நடைபெற்று வருகிறது. பாதுகாப்பிற்காக ரஜோரி மாவட்டத்தில், இணைய […]

Continue reading …