Home » Posts tagged with » Netrikkan (Page 303)

அதிமுக அரசியல் பற்றி பண்ருட்டி ராமச்சந்திரன் கருத்து!

Comments Off on அதிமுக அரசியல் பற்றி பண்ருட்டி ராமச்சந்திரன் கருத்து!

பண்ருட்டி ராமச்சந்திரன் அதிமுக கட்சி அரசியல் மாயையில் சிக்கி உள்ளதாக தெரிவித்துள்ளார். ஏப்ரல் 7ம் தேதியான இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டது. அதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் ஏப்ரல் 16ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவை தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் இந்த அவசர செயற்குழு கூட்டம் நடைபெறும் என்றும் இந்த கூட்டத்தில் அதிமுக செயற்குழு […]

Continue reading …

கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை தாண்டியது!

Comments Off on கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை தாண்டியது!

இந்தியாவில் 6 ஆயிரத்தை தாண்டிய ஒருநாள் கொரோனா பாதிப்பால் கடும் நடவடிக்கை தேவை என அறிவுறுத்தப்படுகிறது. நாளுக்கு நாள் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் 1500 ஆக இருந்த கொரோன பாதிப்பு நேற்று 5 ஆயிரத்தை தாண்டியது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 6,050 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தினமும் 1000 என்ற அளவில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு […]

Continue reading …

கைதான கலாஷேத்ரா பேராசிரியர் ஹரி பத்மன் மனைவி புகார்!

Comments Off on கைதான கலாஷேத்ரா பேராசிரியர் ஹரி பத்மன் மனைவி புகார்!

கலாஷேத்ரா விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஹரி பத்மன் மனைவி திவ்யா சென்னை போலீஸ் கமிஷனரிடம், எனது கணவரை பழிவாங்கவும் அவரது நல்ல பெயரை கெடுக்கவும் அவர் மீது பொய்யான புகார் கொடுக்கப்பட்டுள்ளதாக புகாரளித்துள்ளார். இப்புகாரில் அவர் தனது கணவருடன் பணியாற்றிய இரண்டு பெண் பேராசிரியர்களின் தூண்டுதலின் பெயரில்தான் முன்னாள் மாணவி இந்த குற்றச்சாட்டை அளித்துள்ளார். மூத்த பேராசிரியர்கள் தனது கணவரை பாராட்டியதால் ஏற்பட்ட பொறாமை காரணமாக அந்த இரண்டு பெண் ஆசிரியைகள் முன்னாள் மாணவியை தூண்டி விட்டு […]

Continue reading …

ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் அடுத்த படம்!

Comments Off on ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் அடுத்த படம்!

விக்ரம் மற்றும் மாளவிகா மோகனன் முக்கிய கதாபாத்திர நடிப்பில், இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவருகிறது ‘தங்கலான்’ திரைப்படம். இத்திரைப்படத்தின் கதைக்களம் கோலார் தங்க வயலை மையப்படுத்தி உருவாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் ஷூட்டிங் மதுரை மற்றும் ஆந்திராவின் சில பகுதிகளில் முதலில் நடந்தது. இப்போது கோலார் தங்கவயலில் ஷூட்டிங் நடந்து வருகிறது. திரைப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகரான டேனியல் கால்டகிரன் நடிப்பதை படத்தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் அறிவித்துள்ளது. இப்போது “கேஜிஎப்” உள்ளிட்ட இடங்களில் ஷூட்டிங் […]

Continue reading …

கலைப்புலி தாணுவின் அடுத்த படம் தொடக்கம்!

Comments Off on கலைப்புலி தாணுவின் அடுத்த படம் தொடக்கம்!

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்ற “விடுதலை” திரைப்படத்தின் வெற்றியை பக்காவாக பயன்படுத்திக் கொள்ளும் வகையில் கலைப்புலி தாணு மிஷ்கினுடன் படத்தை தொடங்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னணி இயக்குனரான மிஷ்கின் இப்போது “பிசாசு 2” திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். ஆண்ட்ரியா, பூஜா உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடிக்கின்றனர். முக்கியமான ஒரு வேடத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். அவரின் காட்சிகள் 20 நிமிடங்கள் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. படத்தின் போது விஜய் சேதுபதி மற்றும் […]

Continue reading …

அடுத்த படத்தை தமிழில் இயக்கும் அல்போன்ஸ்!

Comments Off on அடுத்த படத்தை தமிழில் இயக்கும் அல்போன்ஸ்!

7 ஆண்டுகளுக்கு பிறகு சமீபத்தில் அல்போன்ஸ் புத்ரன் இயக்கிய கோல்டு திரைப்படம் வெளியாகி மோசமான விமர்சனங்களை பெற்றது. இவர் “நேரம்“ மற்றும் “பிரேமம்“ ஆகிய திரைப்படங்களை இயக்கியவர். “கோல்டு” திரைப்படம் எவ்வித புரமோஷனும் இல்லாமல் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியானது. ஆனால் மிகவும் எதிர்பார்த்த இப்படம் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் அதிருப்தி அடையச் செய்துள்ளது. ரசிகர்கள் தங்களுக்கு படம் சுத்தமாக பிடிக்கவில்லை என சமூகவலைதளங்களில் கருத்துகளைப் பரப்பின. விமர்சனங்களைக் கடந்து செல்லாமல் அதற்கு பதிலளிக்கிறேன் […]

Continue reading …

ரெப்போ வட்டி குறித்து ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

Comments Off on ரெப்போ வட்டி குறித்து ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் கூட்டம் இன்று நடைபெற்றதையடுத்து இக்கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் உயர்த்தப்படலாம் என்று செய்திகள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே அமெரிக்காவில் ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டடை அடுத்து இங்கிலாந்து உள்பட ஒரு சில நாடுகளிலும் ரெப்போ வட்டிவிகிதம் உயர்த்தப்பட்டதால், இந்தியாவிலும் உயர்த்தப்படும் என்று பொருளாதார வல்லுனர்கள் கணித்திருந்தனர். ஆனால் சற்று முன் இந்திய ரிசர்வ் வங்கியின் தலைவர் […]

Continue reading …

டிரம்ப் மீதான அவதூறு வழக்கு தள்ளுபடி!

Comments Off on டிரம்ப் மீதான அவதூறு வழக்கு தள்ளுபடி!

ஆபாச நடிகை ஸ்டார்மி முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் டிரம்புக்கு ஒரு கோடி ரூபாய் வழங்க ஸ்டார்மிக்கு உத்தரவிட்டுள்ளது. அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது ஆபாச நடிகை ஸ்டார்மி என்பவர் குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு டிரம்ப் மறுப்பு தெரிவித்தார். நடிகை ஸ்டார்மி, டிரம்ப் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த அவதூறு வழக்கு இன்று முடிவுக்கு வந்தது. இவ்வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து […]

Continue reading …

பத்ரிநாத், கேதர்நாத் யாத்திரை தொடக்கம்!

Comments Off on பத்ரிநாத், கேதர்நாத் யாத்திரை தொடக்கம்!

ஆண்டுதோறும் சார் தாம் யாத்திரை எனப்படும் புனித யாத்திரை இம்மாதம் தொடங்கவுள்ளது. பக்தர்கள் இந்த யாத்திரைக்காக தயாராகி வருகின்றனர். புனித தலங்களான பத்ரிநாத், கேதர்நாத் கோவில்களுக்கு தல யாத்திரை செல்வது வழக்கம். நாட்டின் 4 புனித தலங்களான கங்கோத்ரி, யமுனோத்ரி, பத்ரிநாத், கேதர்நாத் ஆகிய கோவில்களுக்கு பக்தர்கள் பாத யாத்திரையாக சென்று வழிபடுகின்றனர். ஒரு ஆண்டில் 6 மாதங்கள் மட்டுமே இந்த புனித யாத்திரைக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. பனிக்காலங்களில் புனித தலங்களை பனி மூடிவிடுவதால் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. […]

Continue reading …

அதிமுக அவரச செயற்குழு கூட்டம்!

Comments Off on அதிமுக அவரச செயற்குழு கூட்டம்!

ஏற்கனவே அதிமுக செயற்குழு கூட்டம் ஏப்ரல் 7ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு பின்னர் அந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டது. தற்போது அவசர செயற்குழு கூட்டம் குறித்த தேதியை அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. ஏப்ரல் 7ம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்ற பின்னர் அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அக்கூட்டம் ரத்து செய்யப்பட்டது. அதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் ஏப்ரல் 16ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவை […]

Continue reading …