Home » Posts tagged with » Netrikkan (Page 305)

ஆன்லைன் லாட்டரிக்கு ரூ.44 கோடி பரிசு

Comments Off on ஆன்லைன் லாட்டரிக்கு ரூ.44 கோடி பரிசு

பெங்களூரைச் சேர்ந்த ஒருவருக்கு ஆன்லைனில் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு 44 கோடி பரிசு விழுந்துள்ளது. பரிசு பெற்ற நபர் மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளார். பெங்களூரை சேர்ந்த அருண்குமார் ஆன்லைன் மூலம் வளைகுடா நாடான அபுதாபியில் விற்பனை செய்யப்படும் லாட்டரி சீட்டை ஆன்லைன் மூலம் வாங்கியுள்ளார். கடந்த 3ம் தேதி குலுக்கல் நடைபெற்ற போது அதில் முதல் பரிசான 20 மில்லியன் திர்ஹாம் அதாவது இந்திய மதிப்பில் 44 கோடி ரூபாய் பரிசு அருண்குமாருக்கு கிடைத்தது. இதனிடம் அவரிடம் […]

Continue reading …

நீரில் மூழ்கியவர்களுக்கு நிதியுதவி அறிவிப்பு!

Comments Off on நீரில் மூழ்கியவர்களுக்கு நிதியுதவி அறிவிப்பு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்ததுடன் நிதியுதவி அறிவித்துள்ளார். இதுகுறித்து, முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டம், மூவரசம்பட்டு கிராமத்தில் உள்ள தர்மலிங்கேசுவரர் கோயில் தெப்பக்குளத்தில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, தீர்த்தவாரி நிகழ்ச்சிக்காக இன்று காலை 9.30 மணியளவில், கோயில் அர்ச்சகர்களும், அப்பகுதி மக்களும் நீரில் இறங்கியபோது, எதிர்பாராதவிதமாக குளத்தில் மூழ்கி, சூர்யா (வயது- 22), பானேஷ் (வயது- 22), ராகவன் (வயது -22) யோகேஸ்வரன் (வயது- 21) […]

Continue reading …

பிளஸ் 2 மாணவிக்கு அரிவாள் வெட்டு!

Comments Off on பிளஸ் 2 மாணவிக்கு அரிவாள் வெட்டு!

+2 மாணவி தேர்வு எழுதி முடித்து வீடு திரும்பும் வழியில் இளைஞர் ஒருவர் அவரை அரிவாளால் வெட்டிய சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி பகுதியிலுள்ள செக்காரக்குடி கிராமத்தில் +2 மாணவி தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அவரை ஒருதலையாக காதலித்த சோலையப்பன் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியதாகவும் ஆனால் அந்த மாணவி அந்த வாலிபரை கண்டு கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மாணவி மீது சரமாரியாக […]

Continue reading …

பாஜக அலுவலகத்தின் மீது ரவுடிகள் கல்வீச்சு!

Comments Off on பாஜக அலுவலகத்தின் மீது ரவுடிகள் கல்வீச்சு!

இன்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தோர் நாகர்கோவிலில் உள்ள பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், 2 பேருக்கு மண்டை உடைந்தது. மேலும், சாலைகளில் திரண்ட இரு கட்சியினரும் கற்களை வீசித்தாக்கிக் கொண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதால் அப்பகுதியில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளானர். இதுகுறித்து, பாஜக தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில், “நாகர்கோவில் பாஜக அலுவலகத்தின் மீதும் தொண்டர்கள் மீதும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சேர்ந்த ரவுடிகள் […]

Continue reading …

ரயிலுக்கு தீ வைத்த மர்ம நபர்!

Comments Off on ரயிலுக்கு தீ வைத்த மர்ம நபர்!

ஓடும் ரயிலுக்கு திடீரென மர்ம நபர் ஒருவர் தீ வைத்துள்ள சம்பவத்தில் 3 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் ஆலப்புழாவிலிருந்து கண்ணூருக்கு விரைவு ரயில் ஒன்று சென்றுக் கொண்டிருந்துள்ளது. இந்த ரயில் கோழிக்கோடு அருகே சென்றுக் கொண்டிருந்தபோது அதில் பயணித்த மர்ம நபர் ஒருவர் திடீரென தான் வைத்திருந்த பெட்ரோலை ரயிலில் ஊற்றி தீ வைத்துள்ளார். இதை கண்டு அலறிய பயணிகள் சிலர் ஓடும் ரயிலில் இருந்து குதித்துள்ளனர். சிலர் செயினை […]

Continue reading …

தென்னிந்திய சினிமாக்களை விமர்சித்த நடிகர்!

Comments Off on தென்னிந்திய சினிமாக்களை விமர்சித்த நடிகர்!

பாலிவுட் நடிகர் ராகுல் தேவ் பழைய டெம்ப்ளேட்டுகளையே தென்னிந்திய சினிமாக்களில் பயன்படுத்துகின்றனர். சினிமாவில் நடிகர் ராகுல் தேவ்வுக்கு பெரும்பாலும் கொடூரமான வில்லன் வேடங்களே கொடுக்கப்பட்டுள்ளன. இவர் தமிழில் நடித்த “நரசிம்மா,” “ஆதவன்,” “வேதாளம்” மற்றும் “லெஜண்ட்” என அனைத்து படங்களிலும் வில்லன்தான். அவர் தென்னிந்தியா சினிமாக்களின் கதை சொல்லும் பாணி குறித்த தன்னுடைய விமர்சனத்தை வைத்துள்ளார். அதில் “தென்னிந்திய சினிமாவில் 70 மற்றும் 80களின் டெம்ப்ளேட்டையே படமாக எடுக்கிறார்கள். நிஜ வாழ்க்கைக்கு சம்மந்தமே இல்லாத ஆக்‌ஷன் காட்சிகளையே […]

Continue reading …

ஷாருக்கானுடன் ஷூட்டிங்கில் நயன்தாரா!

Comments Off on ஷாருக்கானுடன் ஷூட்டிங்கில் நயன்தாரா!

அட்லி இயக்கும் “ஜவான்” திரைப்படத்தின் பாடல் ஷூட்டிங்கில் நயன்தாரா கலந்து கொண்டுள்ளார். “ஜவான்” திரைப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் புனேவில் தொடங்கி நடந்தது. படப்பிடிப்பில் நயன்தாரா, ஷாருக்கான் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்த படத்துக்காக மும்பையில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் வசித்து வருகிறார் அட்லி. தற்போது ஷாருக் கானின் “பதான்” படத்தின் புரமோஷன்களை முடித்துவிட்டு மீண்டும் “ஜவான்” படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார் ஷாருக் கான். ஜூன் 2ம் தேதி படம் […]

Continue reading …

நடிகர் அஜீத் பற்றி முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் தகவல்!

Comments Off on நடிகர் அஜீத் பற்றி முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் தகவல்!

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டர் பக்கத்தில், “அஜீத்திடம் ஒரு மணி நேரம் பேசினோம்” என்று பதிவிட்டுள்ளார். சமீபத்தில் அஜீத்தின் தந்தை காலமானதால், அவருக்கு ஆறுதல் கூற முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோர் அஜீத்தின் இல்லத்திற்கு சென்றனர். இந்த சந்திப்பு குறித்து சி விஜயபாஸ்கர் தனது டுவிட்டர் பக்கத்தில், “தமிழ்த்திரையுலகின் மிக முக்கியமான முன்னணி நடிகர் அஜீத்குமாரின் தந்தை மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அண்ணன் எடப்பாடி பழனிசாமியின் சார்பாக […]

Continue reading …

நயன்தாரா – விக்னேஷ் சிவனின் குழந்தைகள் பெயர் அறிவிப்பு!

Comments Off on நயன்தாரா – விக்னேஷ் சிவனின் குழந்தைகள் பெயர் அறிவிப்பு!

கடந்த ஆண்டு ஜூன் மாதம் இயக்குனர் விக்னேஷ் சிவனை நயன்தாரா திருமணம் செய்து கொண்டார். ஒரு சில மாதங்களில் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றுக் கொண்டார். விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகிய இருவரின் இரட்டை ஆண் குழந்தைகள் குறித்த புகைப்படங்கள் அவ்வப்போது இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் வைரலானது. விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில் அவர்களது இரட்டை குழந்தைகளுக்கு பெயர் வைத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பில், “இனிய நண்பர்களே நாங்கள் எங்களுடைய […]

Continue reading …

ஏப்ரல் 18ம் தேதி உள்ளூர் விடுமுறை!

Comments Off on ஏப்ரல் 18ம் தேதி உள்ளூர் விடுமுறை!

ஏப்ரல் 18ம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் திருவிழாக்கள் மற்றும் விசேஷங்கள் நடைபெறும் போது மாவட்ட ஆட்சியர் உள்ளூர் விடுமுறை விடுவது வழக்கம். ஏப்ரல் 18ம் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழாவையொட்டி அம்மாவட்டத்தில் தேதி உள்ளூர் விடுமுறை என்றும் அன்றைய தினம் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பள்ளி கல்லூரிகள் தேர்வுகள் வழக்கம்போல் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் திருச்சி […]

Continue reading …