
ரயிலுக்கு தீ வைத்து தப்பியோடிய நபரை போலீசார் கைது செய்தனர். அந்த நபர் அளித்த வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் ஆலப்புழா மற்றும் கண்ணூர் இடையே சென்ற எக்ஸ்கியூட்டிவ் ரயிலில் திடீரென நபர் ஒருவர் பயணிகள் மீது பெட்ரோலை ஊற்றி ரயிலுக்கு தீ வைத்து விட்டு தப்பி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கோர சம்பவத்தில் ஒரு பெண், ஒரு குழந்தை உட்பட 3 பேர் பலியானார்கள். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தனிப்படை […]
Continue reading …
தீர்த்தவாரி குளத்தில் 5 அர்ச்சகர்கள் மூழ்கி இறந்த சம்பவம் குறித்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தகவல் அளித்துள்ளார். நேற்று சென்னை அருகே மூவரசம்பட்டியிலுள்ள குளம் ஒன்றில் 5 அர்ச்சகர்கள் குளத்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து சட்டப்பேரவையில் இன்று கொண்டுவரப்பட்ட கவனஈர்ப்பு தீர்மானத்திற்கு அமைச்சர் சேகர்பாபு விளக்கமளித்தார். சென்னையை அடுத்த மூவரசம்பட்டியிலுள்ள குளம் பஞ்சாயத்து நிர்வாகிகளால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளாக தான் தீர்த்தவாரி வைபவம் நடைபெற்று வருகிறது. […]
Continue reading …
துணை முதல்வராக மு.க.ஸ்டாலின் இருந்த போது அவர் தங்கியிருந்த பங்களாவுக்கு தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், குடியேற போவதாக தகவல் வெளியாகி உள்ளன. உதயநிதி ஸ்டாலின் கடந்த சில மாதங்களுக்கு முன் திமுக எம்எல்ஏவாக இருந்தவர் இளைஞர் நலன் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். சென்னை ஆழ்வார்பேட்டை வீட்டிற்கு முதலமைச்சர் மற்றும் அமைச்சர் உதயநிதியை சந்திக்க துறை சார்ந்த அதிகாரிகள் முக்கிய பிரமுகர்கள் தினமும் வருவதால் அமைச்சர்களுக்கான அரசு பங்களாவில் குடியேற உதயநிதி முடிவு செய்துள்ளார். துணை […]
Continue reading …
வங்கி ஊழியர் ஒருவரை காங்கிரஸ் எம்.எல்.ஏ. நடுத்தெருவில் பொதுமக்கள் மத்தியில் அடித்த சம்பவம் சத்தீஸ்கர் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ பிரிஹஸ்பத் சிங் வங்கி ஒன்றில் சென்று அங்குள்ள ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். விவசாயிகளின் பணத்தை வங்கி ஊழியர்கள் கையாடல் செய்துவிட்டதாகவும் இதையடுத்து கணக்கு புத்தகத்தை மறைத்துக் கொண்டு தான் கணக்கு கேட்டால் தவறான அணுகுமுறையை கையாண்டதாகவும் அவர் வங்கி ஊழியர்கள் மீது குற்றம் சாட்டினார். இதையடுத்து வங்கி […]
Continue reading …
நாக சைதன்யாவை நடிகை சமந்தா விவாகரத்து செய்ததையடுத்து அச்சம்பவம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. விவாகரத்துக்குப் பிறகு அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் “காத்து வாக்குல ரெண்டு காதல்” திரைப்படம் ரிலீசானது. அடுத்து “குஷி” மற்றும் “சகுந்தலம்” ஆகிய படங்கள் வரிசையாக ரிலீஸுக்குக் காத்திருக்கின்றன. அதே போல நாக சைதன்யாவும் அடுத்தடுத்து தனது படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். விவாகரத்து குறித்து பேசிய சைதன்யா “நாங்கள் இருவருமே அந்த கட்டத்தில் இருந்து அடுத்ததை நோக்கி […]
Continue reading …
நடிகை ஸ்ரேயா சரன் பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றின் மீது புகாரளித்துள்ளார். நடிகை ஸ்ரேயா “எனக்கு 20 உனக்கு 18” திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின், ஜெயம் ரவி நடித்த “மழை,” ரஜினியுடன் “சிவாஜி,” “அழகிய தமிழ் மகன்” ஆகிய படங்களில் நடித்து முன்னணி நடிகையானார். சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்ட அவர் குழந்தை பெற்றெடுத்த பின், மீண்டும் நடிகையாக வலம் வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில், வெளியான “ஆர்.ஆர்.ஆர்,” “கப்சா” ஆகிய […]
Continue reading …
ஆப்பிள் நிறுவனம் இந்தியாவின் முதல் ஆப்பிள் ரிடெய்ல் ஸ்டோரை மும்பையில் தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளது. இது குறித்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது. உலகளவில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் மற்றும் இதர எலக்ட்ரானிக் பொருட்கள் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. உலகின் பல நாடுகளில் ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு என பிரத்யேக ஷோரூம் உள்ளது. இந்தியாவில் முதல் முறையாக மும்பையில் ஆப்பிள் ரீடைல் ஸ்டோர் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் இந்தியாவில் தனது முதல் நேரடி விற்பனை நிலையத்தை திறக்கப் […]
Continue reading …
பத்தாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு தெலுங்கான மாவட்டத்தில் நடைபெற்ற வருகிறது. இத்தேர்வில் இந்தி பாடத்தேர்வின் வினாத்தாள் வெளியான விவகாரத்தில் பாஜக பிரமுகர் ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. தெலுங்கானா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக 10ம் வகுப்பு பொது தேர்வு நடைபெற்று வருகிறது. இதில் இந்தி தேர்வு வினாத்தாள் வெளியானதால் மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து உடனடியாக விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் தெலுங்கானாவில் பத்தாம் வகுப்பு இந்தி பாடத் தேர்வு […]
Continue reading …
வரும் 5 நாட்களுக்கு மழை தொடரும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கோடை வெயில் கடுமையாக உள்ளது. ஒரு சில இடங்களில் மட்டும் மிதமான மழை முதல் லேசான மழை பெய்து வருகிறது. இன்று ஏற்கனவே மூன்று மாவட்டங்களில் தமிழகத்தில் மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் காலை அறிவித்திருந்தது.தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மழை தொடரும் என்று […]
Continue reading …
ஒப்பந்த அடிப்படையில் போக்குவரத்து துறையில் ஊழியர்களை நியமனம் செய்ய போவதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. இந்த அறிவிப்பிற்கு தொழிற்சங்க பிரதிநிதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். தற்போது தமிழக அரசின் போக்குவரத்து துறையில் ஒப்பந்த அடிப்படையில் சென்னை கும்பகோணம் உட்பட பல்வேறு வழித்தடத்தில் ஓட்டுநர்களை நியமனம் செய்வதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. ஒப்பந்த ஓட்டுநர்கள் 400 பேர்களை நியமனம் செய்வதற்கான டெண்டரில் 4 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்களுக்கு போக்குவரத்து சார்பில் பயிற்சி […]
Continue reading …