
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்ய அதிபர் புதின் விரைவில் கொல்லப்படுவான் என்று பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரஷ்ய அதிபர் புதின் அவரது நெருங்கிய வட்டாரங்களால் கொல்லப்படுவார் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஓராண்டுக்கு மேலாக உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து உள்ளது. உக்ரைன் நாட்டின் பல பகுதிகளை தங்களது கட்டுப்பாட்டிற்குள் ரஷ்யா கொண்டு வந்துள்ளது. உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல நாடுகள் உதவி செய்த […]
Continue reading …
சென்னை மாநகராட்சி 139 அரசு பள்ளிகளை எடுத்து நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள சோழிங்கநல்லூர் மாதவரம் திருவெற்றியூர் மணலி அம்பத்தூர் வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 139 அரசு பள்ளிகளை எடுத்து நடத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இந்த பள்ளிகளில் 800 வகுப்பறைகள் கொண்ட நவீன வசதிகள் செய்து தரப்படும் என்றும் இதன் மூலம் 300 ஆசிரியர்களுக்கு புதிதாக வேலை கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு […]
Continue reading …
பணியாளர்களின் வருங்கால வைப்புநிதி மூலம் அதிக ஓய்வூதியம் பெற விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. வருங்கால வைப்புநிதி அமைப்பு(EPFO) ஊழியர்கள் பெறும் மாத சம்பளத்தில் இருந்து 12 சதவீதம் பிடித்தம் செய்து, அதற்கு நிகரான தொகையை பணியாற்றும் நிறுவனத்திடமிருந்தும் பெற்று வருங்கால வைப்புநிதி கணக்கில் வரவு செய்கிறது. இவ்வாறு வரவு செய்யப்படும் தொகையில் 8.33 சதவீதம் ஓய்வூதிய திட்டத்திற்கும், 3.7 சதவீதம் வைப்பு நிதியாகவும், 0.50 சதவீதம் காப்பீட்டிற்கும் செலுத்தப்படுகிறது. இந்த வருங்கால வைப்பு நிதி […]
Continue reading …
சென்னையில் சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 362 சாலைகளை சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிங்கார சென்னை 2.0 என்ற திட்டத்தின் கீழ் சென்னையில் உள்ள அனைத்து சாலைகளையும் சர்வதேச தரத்திற்கு மாற்ற வேண்டும் என சமீபத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் முதல் கட்டமாக சென்னையில் உள்ள 362 சாலைகளை சீரமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. குறிப்பாக திருவொற்றியூர், மணலி, ராயபுரம், வளசரவாக்கம், அடையார், பெருங்குடி போன்ற பகுதிகளில் உள்ள […]
Continue reading …
ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் இன்று டெல்டா மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என அறிவித்திருந்தது. அதன்படியே இன்று நாகை மாவட்டத்தில் மிதமான மழை பெய்தது. இந்த மிதமான மழைக்கே நாகை மாவட்டத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழை நீரில் நனைந்து பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இதையடுத்து விவசாயிகள் கண்ணீர் வடித்து வருகின்றனர். நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இன்று காலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. […]
Continue reading …
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரதமர் மோடியின் சகோதரர் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் பிரதமர் மோடியின் இளைய சகோதரர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரதமர் மோடியின் இளைய சகோதரர் தாமோதரதாஸ் மோடி. இவர் கடந்த சில மாதங்களாக இந்தியா முழுவதும் ஆன்மீக சுற்றுப்பயணம் செய்து வரும் நிலையில் தமிழகத்தில் கன்னியாகுமரி ராமேஸ்வரம் மதுரை உள்ளிட்ட கோவில்களுக்கும் குடும்பத்துடன் சென்றுள்ளார். தற்போது அவர் சென்னையில் ஓய்வு எடுத்து வரும் நிலையில் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. […]
Continue reading …
நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் தலைப்பு இன்னும் அறிவிக்கப்படவில்லை. சமீபத்தில் இத்திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கோவாவில் முடிவடைந்தது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் படத்துக்கு ‘வீர்’ என்று தலைப்பு வைக்க இயக்குனர் சிவா ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இத்திரைப்படம் 10 மொழிகளில் வெளியாவதால் எல்லா மொழிக்கும் பொறுத்தமான தலைப்பாக இருக்க இத்தலைப்பை வைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இத்திரைப்படத்தில் நடித்து […]
Continue reading …
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் ஓலா காரை முன்பதிவு செய்து கஞ்சா கடத்தியதாக அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே வாகன சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அவ்வழியாக சென்ற ஓலா காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் 18 கிலோ கஞ்சா பொட்டலங்கள் கடத்தி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. சென்னையில் இருந்து கும்பகோணத்திற்கு இந்த கஞ்சா பொட்டலங்கள் கடத்தி செல்லப்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து காரில் […]
Continue reading …
வடலூரில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் பங்கேற்ற இளைஞர் திடீர் மரணமடைந்துள்ளார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வடலூரில் ஆணழகன் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதில் தமிழகம் முழுவதிலும் உள்ள பல இளைஞர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் சேலம் மாவட்டம் பெரிய கொல்லம்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஹரிஹரன் என்ற 21 வயது இளைஞர் 70 கிலோ எடைப்பிரிவில் இந்த ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டார். நேற்று இரவு சுமார் 8 மணியளவில் அவர் பயிற்சியில் […]
Continue reading …