Home » Posts tagged with » Netrikkan (Page 344)

ஆன்லைன் ரம்மியால் இளைஞர் பலி!

Comments Off on ஆன்லைன் ரம்மியால் இளைஞர் பலி!

ஆன்லைன் சூதாட்டத்திற்கு மேலும் ஒரு இளைஞர் பலியாகி உள்ளார். இந்த இளைஞர் காவிரியாற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. கவர்னருக்கு தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்ற மசோதா இயற்றப்பட்டு அந்த மசோதா அனுப்பப்பட்டுள்ளது. ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த பல இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அவ்வகையில் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியைச் சேர்ந்த ரியாஸ் கான் என்பவர் ஆன்லைன் ரம்மியில் செல்போன் கடையில் வேலை பார்த்து சம்பாதித்த […]

Continue reading …

பிரதமர் மோடியின் பரபரப்பு பேச்சு!

Comments Off on பிரதமர் மோடியின் பரபரப்பு பேச்சு!

பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் “நீங்கள் எவ்வளவு தான் சேற்றை வாரி இறைத்தாலும், சேற்றில் தான் தாமரை மலரும்” என்று பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்களின் அமளிக்கு இடையே பிரதமர் மோடி பேசியதாவது:& “எதிர்கட்சியினருக்கு ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நீங்கள் எவ்வளவுதான் சேற்றை வாரி இறைத்தாலும் சேற்றில் தான் தாமரை மலரும் என்பதை மறந்து விட வேண்டாம். பாஜக அரசு செயல்படக்கூடிய அரசு என மக்கள் நம்புகிறார்கள். மேலும் பாராளுமன்றத்தில் நடக்கும் விஷயங்களை […]

Continue reading …

காதலர் தினத்தில், ‘பொன்னியின் செல்வன் 2’ புரமோஷன்?

Comments Off on காதலர் தினத்தில், ‘பொன்னியின் செல்வன் 2’ புரமோஷன்?

கடந்த ஆண்டு “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகி ரூ. 500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. வரும் ஏப்ரல் 28ம் தேதி படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. படத்தின் போஸ்ட் புரொடக்க்ஷன் பணிகள் நிறைவு கட்டத்திற்கு வந்துள்ளது. புரமோஷன் பணிகளை தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். முதல் கட்டமாக வரும் 14ம் தேதி காதலர் தினத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் கம்போஸ் செய்த சிங்கிள் பாடல் வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. ராஜராஜ சோழன் மற்றும் வானதி ஆகிய […]

Continue reading …

மும்பையில் குடியேறிய சமந்தா!

Comments Off on மும்பையில் குடியேறிய சமந்தா!

தென்னிந்தியாவின் முன்னணி நடிகையான சமந்தா மும்பையில் வீடு வாங்கி குடியேறியுள்ளார். நடிகை சமந்தா விவாகரத்துக்கு பின்னர் பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். குறிப்பாக Citadel என்ற என்ற வெப் சீரிஸ் ஷூட்டிங்கில் பங்கேற்று வருகிறார். ஹாலிவுட் புகழ் ரஸோ ப்ரதர்ஸ் தயாரித்து வரும் அந்த சீரியல் அமேசான் பிரைம் தளத்திற்காக உருவாகி வருகிறது. மும்பையில் படமாட்டப்பட்டு வருவதாலும், இன்னும் பல இந்தி திரைப்படங்ககளில் நடிக்க எண்ணியும் பாலிவுட்டில் செட்டிலாக முடிவெடுத்துவிட்டாராம் சமந்தா. இதனால் அங்கு 15 கோடி […]

Continue reading …

பிரகாஷ்ராஜின் சர்ச்சையான பேச்சு!

Comments Off on பிரகாஷ்ராஜின் சர்ச்சையான பேச்சு!

நடிகர் பிரகாஷ்ராஜ் “காஷ்மீர் பைல்ஸு”க்கு ஆஸ்கர் இல்லை, பாஸ்கர் கூட கிடைக்காது” என்று பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்து அமைப்புகள் பலவும் “பதான்” திரைப்படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவித்ததையும் மீறி படம் வெற்றி பெற்றுள்ளது. ஷாரூக்கான், தீபிகா படுகோன் நடித்து சமீபத்தில் வெளியான படம் “பதான்.” ஆரம்பத்தில் இதன் பாடல்கள் வெளியானபோது தீபிகா படுகோன் காவி நிற கவர்ச்சி ஆடை அணிந்திருந்தது சர்ச்சைக்குள்ளானது. அதை தொடர்ந்து படத்தை தடை செய்ய வேண்டும் என பல […]

Continue reading …

வதந்திகளுக்கு பதிலடி கொடுத்த திரிஷா!

Comments Off on வதந்திகளுக்கு பதிலடி கொடுத்த திரிஷா!

காஷ்மீரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் “லியோ” திரைப்படத்தின் படப்பிடிப்பிலிருந்து நடிகை திரிஷா திரும்பிவிட்டதாகவும், அவர் “லியோ” திரைப்படத்தை விட்டு விலகியதாகவும், காஷ்மீர் குளிர் அவருக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்பது போன்ற பல வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வந்தன. நேற்று திரிஷாவின் அம்மா “லியோ” திரைப்பட படப்பிடிப்பில்தான் திரிஷா இருக்கிறார், அவர் இன்னும் சென்னை திரும்ப வில்லை” என்று விளக்கமளித்துள்ளார். காஷ்மீரில் இருக்கும் வீடியோவை வெளியிட்டு தான் “காஷ்மீரில் தான் இருக்கிறேன்” என்பதை திரிஷா உறுதி செய்துள்ளார். இதையடுத்து அவர் […]

Continue reading …

இந்தியாவில் நிலநடுக்கம் ஏற்படுமா?

Comments Off on இந்தியாவில் நிலநடுக்கம் ஏற்படுமா?

தற்போது வெளியாகி உள்ள ஆய்வு அறிக்கையில் இந்தியாவின் 8 மாநிலங்களில் நிலநடுக்கங்கள் ஏற்படும் ஆபத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த இரண்டு நாட்களில் துருக்கி மற்றும் சிரியாவில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து 9500க்கும் அதிகமானவர் பலியானதாக கூறப்படுகிறது. மேலும் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்பிருப்பதாக தவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது குஜராத் உள்ளிட்ட 8 இந்திய மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்படலாம் என ஆய்வுகள் தெரிவித்துள்ளன. குஜராத், பீகார், அசாம், […]

Continue reading …

கரூர் 4 வழிச்சாலைக்கு ரூ.137 கோடி!

Comments Off on கரூர் 4 வழிச்சாலைக்கு ரூ.137 கோடி!

தற்போது கரூரில் இருக்கும் இரண்டு வழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றம் செய்வதற்காக தமிழ்நாடு அரசு ரூ.137கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழ்நாடு அரசு வைரமடையிலிருந்து கரூர் வரை இருவழிச் சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற முடிவு செய்துள்ளது. இச்சாலை மூலப்பொருட்களை தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்வதற்கும், தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் உற்பத்தி பொருட்களை சந்தைகளுக்கு கொண்டு செல்வதற்கும் பயன்படும் என்று கூறப்பட்டுள்ளது. கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், சென்னை, கோவை, ஊட்டி ஆகிய மாவட்டங்களை இணைக்கும் இச்சாலையில் தினந்தோறும் போக்குவரத்து […]

Continue reading …

இடைத்தேர்தலுக்கான 41 மனுக்கள் நிராகரிப்பு!

Comments Off on இடைத்தேர்தலுக்கான 41 மனுக்கள் நிராகரிப்பு!

வரும் 27ம் தேதி நடைபெறவிருக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கலுக்கான தேதி முடிவடைந்துவிட்டது. இன்று வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்ட நிலையில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் தென்னரசு, தேமுதிக வேட்பாளர் ஆனந்த், நாம் தமிழர் வேட்பாளர் மேனகா ஆகியோர் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மொத்தம் தாக்கல் செய்யப்பட்ட 121 வேட்பாளர்களில் 80 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் 41 மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் தேர்தல் அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். […]

Continue reading …

பணிநீக்க பட்டியலில் இணைந்த நிறுவனம்!

Comments Off on பணிநீக்க பட்டியலில் இணைந்த நிறுவனம்!

பல முன்னணி நிறுவனங்கள் சமீபத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்களை வேலைநீக்கம் செய்துள்ளது. அந்த பட்டியலில் தற்போது ஜூம் நிறுவனமும் இணைந்தள்ளது. உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஜூம் 1300 ஊழியர்களை பணி நீக்கம் செய்யப் போவதாக அறிவித்துள்ளது. இந்நிறுவனத்தின் சி.இ.ஓ எரிக் யுவான் சற்று முன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு 16 வாரத்திற்கான சம்பளம் மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். உலகின் முன்னணி நிறுவனங்கள் ஒவ்வொன்றாக ஊழியர்களை வேலை […]

Continue reading …