
தன்னை பான் இந்திய நடிகர் என்று அழைக்க வேண்டாம் என்று நடிகர் விஜய்சேதுபதி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் சேதுபதி தமிழ் மட்டுமல்லாமல், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் நடித்து வருகிறார். ஹிந்தியில் மற்றும் அவர் மும்பைகார், மெர்ரி கிறிஸ்மஸ் மற்றும் ஜவான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் பேட்டி ஒன்றில், “என்னை ஒரு நடிகர் என்று மட்டும் கூறினால் போதும், பான் இந்திய நடிகர் என்று கூறுவது எனக்கு […]
Continue reading …
துருக்கி நாட்டு தூதர் இந்தியா செய்த உதவியை நாங்கள் மறக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளார். நேற்று அதிகாலை துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டு ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்ததோடு மட்டுமல்லாம் படுகாயமும் அடைந்துள்ளனர். இந்த செய்தி வெளியான ஒரு சில மணி நேரங்களில் இந்தியா உதவி கரம் நீட்டியது. இந்தியாவிலிருந்து இரண்டு குழுக்கள் புறப்பட்டு சென்றன. அவர்களுடன் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருத்துவ பொருட்களும் சென்றன. இந்நிலையில் பூகம்பம் ஏற்பட்ட சில மணி நேரங்களில் துருக்கிக்கு இந்தியா செய்த உதவியை நாங்கள் […]
Continue reading …
பூகம்பம் காரணமாக துருக்கியில் சுமார் 5000க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏராளமான பேர் காயம் அடைந்துள்ளதாகவும் அறிக்கைகள் வெளியாகி உள்ளன. துருக்கி நாட்டிற்கு ஏற்பட்ட துரதிஷ்டமான இந்நிலைக்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கவிப்பேரரசு வைரமுத்து தனது டுவிட்டரில் கவிதை வடிவில் இரங்கல் தெரிவித்துள்ளார். துருக்கியின் கீழே பூமி புரண்டு படுத்துவிட்டது ரிக்டர் கருவிகள் வெடித்துவிட்டன வான்தொட்ட கட்டடங்கள் தரைதட்டிவிட்டன மனித உடல்கள் மீது வீடுகள் குடியேறிவிட்டன மாண்டவன் மானுடன்; உயிர் பிழைத்தவன் உறவினன் […]
Continue reading …
துருக்கி அதிபர் 10 மாகாணங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார். துருக்கியில் அடுத்தடுத்து ஐந்து முறை பூகம்பம் ஏற்பட்டதை அடுத்து இந்த பூகம்பத்தால் ஏராளமான கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளன. கட்டிடத்தின் இடைபாடுகளில் சிக்கி சுமார் 5000 பேர் உயிரிழந்திருப்பதாகவும் ஆயிரக்கணக்கானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட 10 மாகாணங்களில் மூன்று மாதத்திற்கு அவசரநிலை பிரகடனம் செய்வதாக நாட்டின் அதிபர் தெரிவித்துள்ளார். மேலும் காணாமல் போனவர்களை தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் […]
Continue reading …
சென்னை மாநகராட்சி சென்னையில் அனுமதியில்லாத இடத்தில் சுவரொட்டி ஒட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. சென்னை மாநகராட்சியின் சாலை மற்றும் தெருப் பெயர்களில் சுவரொட்டிகளை ஒட்டி வருவதால் சாலையின் பெயர் கூட தெரியாமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். சாலை மற்றும் தெரு பெயர்கள் உள்ள பதாகைகள் மீது சுவரொட்டி ஒட்டினால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. சென்னை மாநகராட்சியின் சாலை, தெரு பெயர்களில் சுவரொட்டி ஓட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொது […]
Continue reading …
இன்னும் ஒரு சில நாட்களில் மத்திய அரசு ஊழியர்களுக்கு நான்கு சதவீத அகவிலைப்படி உயர்த்தப்படுவது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கு 34% என இருந்த அகவிலைப்படி 38 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில் 38 சதவீதத்திலிருந்து 4 சதவீதம் உயர்த்தப்பட்டு 42 சதவீதமாக அகவிலைப்படி வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 42 […]
Continue reading …
சீனாவின் நெடுஞ்சாலையில் 50 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 16 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சீனாவில் தெற்கு பகுதிலுள்ளஹூனான் மாகாணத்தின் தலைநகர் சாங்க்காவிலுள்ள நெடுஞ்சாலையில் நேற்று முன் தினம் மாலை, பல வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது, எதிர்பாராத வகையில், வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்தில் சிக்கின. இதில், 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் விபத்தில் சிக்கியதால் தீ விபத்து ஏற்பட்டதுடன், புகை மண்டலம் ஆகக் காட்சியளித்தது. இந்தக் கொடூர விபத்தில் 16 […]
Continue reading …
இரண்டு கிலோ மீட்டர் தூரம் வரையிலான ரயில் தண்டவாளங்களை மர்ம நபர்கள் திருடிய சம்பவம் பீகாரில் நடந்துள்ளது. பீகாரில் உள்ள பந்தோல் ரயில் நிலையத்திலிருந்து லோகத் வரையிலான தண்டவாளங்கள் திருடு போயிருப்பதாக தெரியவந்துள்ளது. திருடு போன ரயில் தண்டவாளங்களின் இரும்புகளின் மதிப்பு லட்சக்கணக்கில் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி பீகாரில் கடந்த 19ம் தேதி அதிகாரிகள் எனக் கூறிக்கொண்டு வந்த மர்ம நபர்கள் மொபைல் கோபுரம் ஒன்றையும் திருடி சென்றுள்ளதாகவும் தெரிகிறது. இந்த மொபைல் கோபுரம் திருடு […]
Continue reading …
தெலுங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், மத்திய அரசை “மேக் இன் இந்தியா அல்ல, ஜோக் இன் இந்தியா” என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். தெலுங்கானாவின் அண்டை மாநிலமான மகாராஷ்டிராவில் நடந்த பேரணியில் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டம் ஜோக் இன் இந்தியா திட்டம்தான். காங்கிரஸ் 54 ஆண்டுகளாக ஆட்சி செய்தது, பாஜக 16 ஆண்டுகள் ஆட்சி செய்தது மொத்தத்தில் இந்தியாவை […]
Continue reading …
மத்திய பிரதேசத்தில் உள்ள ரேவா மாவட்டம் கைலாசபுரி கிராமத்தில் 58 வயது பெண் ஒருவர் மர்மான முறையில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார். இதுகுறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் 16 வயது சிறுவனை கைது செய்துள்ளனர். இதில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு சிறுவன் (16) பக்கத்து வீட்டிற்கு டிவி பார்க்கச் சென்றுள்ளான். அப்போது, அந்த வீட்டின் இருந்த பெண்ணின் செல்போனை திருடியதாக குற்றம்சாட்டப்பட்டான். இதனால், இரு குடும்பத்தினரும் இடையே சண்டை ஏற்பட்டது. […]
Continue reading …