Home » Posts tagged with » Netrikkan (Page 348)

முதலமைச்சரை அவதூறாக பேசிய போலீஸ் கைது!

Comments Off on முதலமைச்சரை அவதூறாக பேசிய போலீஸ் கைது!

போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி குறித்து அவதூறாக பேசியதால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆந்திரா முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியை என்.டி.ஆர் மாவட்டத்தில் கவுராவரம் அருகே பெட்ரோல் பங்க் ஒன்றில் கிராமவாசி ஒருவருடன் போலீஸ் கான்ஸ்டபிள் தென்னேரு வெங்கடேஷ்வரலு என்பவர் அவதுறாக பேசியுள்ளார். முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து அவதூறாக பேசிய அந்த போலீஸ் கான்ஸ்டபிள் அரசுக்கு எதிரான கருத்துகளை பேசியிருந்துள்ளார். அதை வீடியோ எடுத்த நபர் அதுகுறித்து சிலாகல்லு போலீஸ் […]

Continue reading …

சீனாவுக்கு அமெரிக்கா கண்டனம்!

Comments Off on சீனாவுக்கு அமெரிக்கா கண்டனம்!

சீனாவை “நீங்க பலூன் விட்டு விளையாட எங்க அணுசக்தி ஏவுதளம்தான் கிடைச்சுதா?” என்று அமெரிக்கா கேள்வியெழுப்பி உள்ளது. சீனாவின் உளவு பலூன் அமெரிக்காவின் ராணுவ பாதுகாப்பு பகுதிக்குள் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் மொண்டானா பகுதியில் ராணுவ பாதுகாப்புடன் கூடிய அணுசக்தி ஏவுதளம் ஒன்று அமைந்துள்ளது. சமீபத்தில் பாதுகாக்கப்பட்ட ஏவுதளம் பகுதியில் வானில் பறக்கும் பலூன் ஒன்று தென்பட்டது. அதை சுட்டு வீழ்த்தலாம் என நினைத்த ராணுவம் அதனால் ஏவுதளம் மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என […]

Continue reading …

பாட்ஷா பட பாணியில் மாபியா தலைவன்!

Comments Off on பாட்ஷா பட பாணியில் மாபியா தலைவன்!

பாட்ஷா திரைப்பட பாணியில் ஒரு பக்கம் சமையல்காரராகவும், மறுபக்கம் மாபியா கும்பலின் தலைவனாகவும் வாழ்ந்து வந்தவரை பிரான்சில் போலீசார் கைது செய்துள்ளனர். பாட்ஷா திரைப்படத்தில் மும்பையில் பாட்ஷாவாக வாழ்ந்த ரஜினிகாந்த் பின்னர் அங்கிருந்து தலைமறைவாகி சென்னையில் சாதாரண ஆட்டோக்காரனாக வாழ்வார். அதுபோன்ற உண்மை சம்பவம் ஒன்று பிரான்சில் நடந்துள்ளது. இத்தாலியில் கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், போதை மருந்து கடத்தல் உள்ளிட்ட குற்ற பின்னணிகளில் செயல்படும் மாபியா கும்பல்கள் அதிகமாக உள்ளது. அப்படி பல குற்ற சம்பவங்களில் […]

Continue reading …

கலெக்டர் அலுவலகத்தில் தீவிபத்து!

Comments Off on கலெக்டர் அலுவலகத்தில் தீவிபத்து!

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் முக்கிய ஆவணங்கள் எரிந்து சாம்பலாகி உளள் சம்பவம் நாமக்கல்லில் நடந்துள்ளது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட தோட்டக்கலை தொழில்நுட்ப ஆதார் மையம் கட்டிடம் ஒன்றில் செயல்பட்டு வந்துள்ளது. இன்று காலை திடீரென அந்த கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரம் போராடி கடைசியாக […]

Continue reading …

விக்கிப்பீடியாவை முடக்கிய பாகிஸ்தான்!

Comments Off on விக்கிப்பீடியாவை முடக்கிய பாகிஸ்தான்!

பிரபல விக்கிப்பீடியா தளம் இஸ்லாமிய மதம் குறித்த கருத்துகளை நீக்காததால் அந்த தளத்தையே பாகிஸ்தான் முடக்கியுள்ளது. விக்கிப்பீடியா இணையத்தில் அதிகமான வரலாற்று சம்பவங்கள், நபர்கள், அறிவியல் விளக்கங்கள் என பல தலைப்புகளிலும் தகவல்களை வழங்கும் தளம். உலகம் முழுதும் பலரால் இந்த தளம் பயன்படுத்தப்பட்டு வருவதுடன், அதிலுள்ள தகவல்களை பார்வையாளர்களே எடிட் செய்யவும் முடியும். இந்நிலையில் சமீபத்தில் விக்கிப்பீடியாவில் இஸ்லாமிய மதம், கடவுள் குறித்து சர்ச்சை மற்றும் அவதூறு கருத்துகள் இடம்பெற்றுள்ளதாகவும், அந்த கருத்துகளை 48 மணி […]

Continue reading …

பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் காலமானார்!

Comments Off on பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் காலமானார்!

மூத்த பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் இன்று காலமானார். வாணி ஜெயராம் வேலூரில் ஒரு இசைக் குடும்பத்தில் பிறந்தவர். கடந்த 1971ம் ஆண்டு “குட்டி” என்ற இந்திப்படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமானார். தொடர்ந்து, ஐம்பது ஆண்டுகளாக பாடகியாக இருந்தவர். இவர் 19 மொழிகளில் சினிமா, தனிப்பாடல்கள், பக்தி பாடல்கள் என பல்லாயிரம் பாடல்கள் பாடியுள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் வசித்து வாந்த வாணி ஜெயராம் (78) இன்று அவரது இல்லத்தின் நெற்றியில் காயங்களுடன் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். இவர், […]

Continue reading …

அதிமுகவின் வேட்பாளர் குறித்து அண்ணாமலை பதில்!

Comments Off on அதிமுகவின் வேட்பாளர் குறித்து அண்ணாமலை பதில்!
அதிமுகவின் வேட்பாளர் குறித்து அண்ணாமலை பதில்!

பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை அதிமுக கட்சியின் வேட்பாளர் குறித்து பதிலளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிமுக கட்சியின் வேட்பாளர் குறித்து இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடையே முரண்பாடுகள் நிலவி வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் பணிகள் தொடங்கியுள்ளன. பல்வேறு கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து வரும் நிலையில் இரண்டாக பிரிந்துள்ள அதிமுகவும் இரண்டு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் முன்னாள் […]

Continue reading …

மும்பைக்கு குண்டு மிரட்டல்!

Comments Off on மும்பைக்கு குண்டு மிரட்டல்!

தாலிபான் பெயரில் என்.ஐ.ஏவுக்கு மும்பையில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்போவதாக இமெயில் வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மஹாராட்ஷ்டிர மாநிலத்தில் முதல்வர் ஏக் நாத் ஷிண்டே தலைமையிலான ஷிவசேனா உட்கட்சி எதிர்ப்பு அணி மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் மாநில தலைநகர் மும்பையில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப் போவதாக தாலிபான்கள் பெயரில் ஒரு இமெயில் என்.ஐ.ஏவுக்கு வந்துள்ளது. இந்த இமெயில் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Continue reading …

இன்னொரு பொதுக்குழுவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

Comments Off on இன்னொரு பொதுக்குழுவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

உச்சநீதிமன்றம் ஓபிஎஸ்ஐ வரவழைத்து இன்னொரு பொது குழு கூட்டி, அந்த பொதுக்குழு கூட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளரை தேர்வு செய்யலாம் என அதிமுக பொது குழு வழக்கில் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இன்று நீதிமன்றத்தில் அதிமுக பொது குழு விசாரணை நடைபெற்றது. எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மற்றும் ஓபிஎஸ் தரப்பினர் வாதாடி வருகின்றனர். இந்த வாதத்திற்கு பின்னர் ஓபிஎஸ் தரப்பினர் உள்ளடக்கிய பொதுக்குழு கூட்டத்தை கூட்டி அதில் வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட முக்கிய முடிவுகளை […]

Continue reading …

மற்றொரு நடிகருக்கு கிடைத்த கோல்டன் விசா!

Comments Off on மற்றொரு நடிகருக்கு கிடைத்த கோல்டன் விசா!

மற்றொரு தமிழ் நடிகருக்கு கோல்டன் விசா கிடைத்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் கடந்த 2019-ம் ஆண்டு முதல் விசா வழங்கும் நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இதையடுத்து இப்போது இந்தியாவைச் சேர்ந்த நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோர்களுக்கு கோல்டன் விசா எனும் சிறப்பு விசாவை வழங்கி வருகிறது. இந்த விசாவைப் பெறுபவர்கள் 10 ஆண்டுகள் எப்போது வேண்டுமானாலும் துபாய்க்கு சென்று வரலாம். வேறு எந்த விசாவும் எடுக்க தேவையில்லை. இந்த விசா இப்போது தென்னிந்தியாவைச் சேர்ந்த […]

Continue reading …