
தமிழ்நாடு அரசு விவேகானந்தர் மண்டபத்திலிருந்து திருவள்ளுவர் சிலைக்கு இடையே கண்ணாடிப் பாலம் அமைப்பது குறித்து அறிவித்துள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமாரிக்கு தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தந்து கொண்டிருக்கின்றனர். விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை இடையே கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கப்பட இருப்பதாகவும் இதற்காக 37 கோடி ஒதுக்கி இருப்பதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான டெண்டரை சென்னையை சேர்ந்த பிரபல நிறுவனம் ஒன்று எடுத்துள்ளதாகவும் இந்த […]
Continue reading …
ஈரோடு மாவட்டத்தின் கிழக்கு தொகுதி திருமகன் ஈவேரா மறைவையொட்டி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 4ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்எல்ஏ வாக இருந்த திருமகன் ஈவேரா மாரடைப்பால் காலமானார். அவரது மறைவு ஆளுங்கட்சி திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது என்பது குறித்து சமீபத்தில் தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு விளக்கமளித்திருந்தார். அதில், ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையத்தால் முறைப்படி அறிவிக்கப்பட்டதிலிருந்து ஆறு […]
Continue reading …
பள்ளியில் வழங்கப்பட்ட சத்துணவில் பாம்பு இருந்ததால் 30 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் மேற்கு வங்க மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிர்மூம் மாவட்டத்திலுள்ள ஒரு பள்ளியில், மாணவர்கள் மதிய உணவை சாப்பிடும் போது, அந்த உணவில் பாம்பு கிடந்துள்ளது. இந்த உணவைச் சாப்பிட்ட 30 மாணவர்கள் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தொடக்க பள்ளி ஆய்வாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உடனடியாக பள்ளியில் விசாரணை நடத்தப்படும் என மயூரேஸ்வர் வட்டார வளர்ச்சி அலுவலர் தகவல் […]
Continue reading …
உத்தரபிரதேச மாநிலத்தில் நிலவிவரும் கடுங்குளிர் காரணமாக இருதயநோயால் பாதிக்கப்பட்டவர்கள் 98 பேர் மரணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான உத்தரபிரதேசத்தில் உள்ள பல பகுதிகளில் தற்போது கடும் குளிர் நிலவி வருகிறது. இக்குளிரால் 25 பேர் இதய நோயால் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது. உத்திர பிரதேச மாநிலம் கான்பூரில் தற்போது நிலவும் கடும் குளிரா கடந்த 5 நாட்களில் மட்டும் 98 பேர் உயிரிழந்துள்ளதாகத் கடந்த ஒரு வாரத்தில் சுமார் 723 […]
Continue reading …
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கட்சியினரை ஆளுனரை யாரும் விமர்சிக்க வேண்டாம் என்று அறிவிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நேற்று சட்டமன்ற கூட்டத்தில் ஆளுனர் உரையை முழுமையாக வாசிக்காதது குறித்து விவாதம் எழுந்த நிலையில் ஆளுனர் சட்டமன்றத்தை விட்டு வெளியேறினார். அதை தொடர்ந்து சமூக வலைதளங்களிலும், அரசியல் பிரமுகர்கள் பலரும் ஆளுனரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதுபோல ஆளுனரை திமுகவினர் அவமானப்படுத்திவிட்டதாக அதிமுக, பாஜக கட்சி பிரமுகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இன்று குடிமைப்பணி தேர்வர்களுடன் கலந்துரையாடலில் […]
Continue reading …
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திமுக ஆட்சியின் அவலங்களை மறைக்க ஆளுநர் விவகாரம் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது என்று கூறியுள்ளார். இன்று சென்னை ராயப்பேட்டையிலுள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர், “தமிழ்நாடு சட்டசபையில் நேற்று நடந்தது கருப்பு நாளாக பார்க்கப்படுகிறது என்றும் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக யார் செயல்பட்டாலும் அது தவறுதான் என்று ஆளுநர் இந்த நடவடிக்கை வருத்தமளிக்கும் செயலாக உள்ளது. […]
Continue reading …
கேரளா வீரர் ஒருவர் ஓமன் நாட்டில் பேட்மிண்டன் விளையாடிகொண்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் சுருண்டு விழுந்து மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஓமன் நாட்டில் கேரளாவை சேர்ந்த பேட்மிட்டன் வீரர் ஒருவர் தனது நண்பர்களுடன் ஆடிக் கொண்டிருந்தபோது திடீரென கீழே விழுந்தார். சாதாரணமாகத்தான் விழுந்தார் என அவரது நண்பர்கள் இணைத்த போது அவருக்கு மாரடைப்பு வந்ததால் தான் மயங்கி விழுந்தார் என்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் […]
Continue reading …
சென்னை மாவட்ட ஆட்சியர் தமிழ்நாடு வஃக்பு வாரியத்தில் பதிவு செய்துள்ள, சென்னையில், வஃக்பு நிறுவனங்களில் வேலை செய்யும் உலமாக்களுக்கு புதிய இருசக்கர வாகனம் வழங்கப்படுகிறது. அதன்படி, ஒரு வாகனத்தின் மொத்த விலையில் ரூ.25 ஆயிரம் அல்லது வாகனத்தில் 50% இதில், எது குறைவோ அது மானியமாக வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் விண்ணப்பிப்பவர்கள் பதிவு செய்துள்ள வஃக்பு வாரிய நிறுவனத்தில் 5 ஆண்டுகள் பணியாற்றியவர்களாக இருக்க வேண்டும், மேலும் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்களாகவும், அவர்களின் வயது 18-லிருந்து 45க்குள் இருக்க […]
Continue reading …
நேற்று இவ்வாண்டின் முதல் சட்டசபைக் கூட்டத்தொடர் தொடங்கியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு கொடுத்த உரையை ஆளுனர் முழுமையாக வாசிக்கவில்லை. அவர் உரையை வாசிக்கும்போது, தமிழ்நாடு, பெரியார், அம்பேத்கர் உள்ளிட்ட பெயர்களை வாசிக்கவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து விவாதம் எழுந்த நிலையில் ஆளுனர் திடீரென்று சட்டமன்றத்தை விட்டு வெளியேறினார். அதை தொடர்ந்து சமூக வலைதளங்களிலும், அமமுக பொதுச்செயலாளர் தினகரன், ஓபிஎஸ், பாமக தலைவர் அன்புமணி, காங்கிரஸ் எம்பி ஜோதிமணி உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பலரும் ஆளுனரின் […]
Continue reading …
இசையமைப்பாளர் தமன் “வாரிசு” திரைப்படம் பார்த்து இதயத்தால் அழுதேன்-’’ டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “வாரிசு.” இவருடன் இணைந்து ராஷ்மிகா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், என நடிகர்கள் பட்டாளமே நடித்துள்ளனர். இப்படத்தை வம்சி இயக்கியுள்ளார், தில் ராஜு தயாரித்துள்ளார். தமன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இத்திரைப்படத்தின் டிரெயிலரும் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றது. பொங்கல் பண்டிகை முன்னிட்டு இப்படம் நாளை ரிலீஸாகவுள்ளது. இப்படத்தின் புக்கிங் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. […]
Continue reading …