Home » Posts tagged with » Netrikkan (Page 360)

எம்பிக்கு 10 ஆண்டுகள் சிறை!

Comments Off on எம்பிக்கு 10 ஆண்டுகள் சிறை!

முகமது பைசல் உள்ளிட்ட 4 பேருக்கு கொலை முயற்சி செய்த வழக்கில் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. லட்சத்தீவில் எம்பியாக உள்ள முகமது பைசல், அங்கு நடந்த மக்களவைத் தேர்தலில், முன்னாள் அமைச்சர் பிஎம் சையீதியின் மருமகனும், காங்கிரஸ் நிர்வாகியுமான முகமது சாலி என்பவரை அடித்ததாகக் கூறப்படுகிறது. எம்பி முகமது பைசல் உள்ளிட்ட 4 பேர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை முடிந்து, இவ்வழக்கின் தீர்ப்பில், முகமது பைசல் உள்ளிட்ட […]

Continue reading …

உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு!

Comments Off on உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு!

உலக சுகாதார அமைப்பு நீண்டதூரம் பயணம் செய்வோருக்கு கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவித்துள்ளது. சீனாவிலிருந்து கடந்த 2020ம் ஆண்டு கொரொனா தொற்று உலக நாடுகளுக்குப் பரவியது. பல கோடிக்கணக்கான மக்கள் இதனால் பாதிக்கப்பட்டு, லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். கடந்த ஆண்டில் கொரொனா தொற்று நோய் ஓரளவுவுக்கு குறைந்தது. ஆண்டிறுதியில் மீண்டும் பரவத் தொடங்கியது. குறிப்பாக சீனாவில் இ பிஎஃப்-7 என்ற உருமாறிய கொரோனா, இந்தியா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளுக்குப் பரவி வருகிறது. அமெரிக்காவில் […]

Continue reading …

அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி!

Comments Off on அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி!

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இன்று சென்னை கிரீன் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் திமுக பொதுச்செயலாளர் மற்றும் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அனுமதிக்கப்பட்டுள்ளார். 84 வயதான துரைமுருகன் காய்ச்சல் என்றும் அதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது உடல்நிலை தற்போது தேறி வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் காய்ச்சல் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் தற்போது மீண்டும் அவர் […]

Continue reading …

ஆன்லைன் சூது! இளைஞர் விஷம் குடித்து தற்கொலை!

Comments Off on ஆன்லைன் சூது! இளைஞர் விஷம் குடித்து தற்கொலை!

ஆன்லைன் சூதாட்டத்தில் தனது மொத்த சொத்தையும் விற்று விளையாடிதில் மொத்த பணத்தையும் இழந்த விரக்தியில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருநெல்வேலி மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளில் பலரும் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளது. இதனால் இந்த ஆன்லைன் சூதாட்ட செயலிகளை தடை செய்ய வேண்டுமென தமிழ்நாடு அரசு தீர்மானம் நிறைவேற்றியும் ஆளுனரின் ஒப்புதல் வழங்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் தற்போது ஆன்லைன் ரம்மியால் மற்றுமொரு இளைஞர் […]

Continue reading …

அமைச்சர் பாலாஜியின் அறிவிப்பு!

Comments Off on அமைச்சர் பாலாஜியின் அறிவிப்பு!

விரைவில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சோலார் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இன்று சட்டப்பேரவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி திருவாரூர் மாவட்டத்தில் விரைவில் சோலார் திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக பதிலளித்தார். அதுமட்டுமின்றி அனைத்து மாவட்டங்களிலும் சோலார் மூலம் மின் உற்பத்தி செய்யும் வகையில் புதிய திட்டம் கொண்டுவரப்படும் என்றும் இதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சோலார் […]

Continue reading …

டாடாவின் புதிய ஐபோன் தொழிற்சாலை!

Comments Off on டாடாவின் புதிய ஐபோன் தொழிற்சாலை!

டாடா குழுமம் பெங்களூரு அருகே உள்ள ஐபோன் தயாரிக்கும் தொழிற்சாலையை வாங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. டாடா நிறுவனம் கடந்து சில மாதங்களாக பல்வேறு துறைகளில் முதலீடு செய்து வருகிறது. அவ்வகையில் பெங்களூரு அருகே தைவான் நாட்டிற்கு சொந்தமான ஐபோன் தயாரிப்பு நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. அந்த ஆலையை வாங்குவதற்கான பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தில் உள்ளதாகவும் இந்திய மதிப்பில் சுமார் 4950 கோடிக்கு டாடா வாங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மார்ச் 31ம் தேதி இறுதி […]

Continue reading …

எலான் மஸ்க்கின் கின்னஸ் சாதனை!

Comments Off on எலான் மஸ்க்கின் கின்னஸ் சாதனை!

உலக பணக்காரர்களில் முதலிடத்தில் இருந்த எலான் மஸ்க் தற்போது அதிக சொத்துக்களை இழப்பதில் கின்னஸ் சாதனையை பெற்றுள்ளார். எலான் மஸ்க் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி உலகம் முழுவதும் பிரபலமானவர். சமீபத்தில் கூட சமூக வலைதளமான டுவிட்டரை மஸ்க் வாங்கியது முதலாக அவரது செயல்பாடுகள் உலகளவில் பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது. டுவிட்டரை வாங்கியதும் அதன் முக்கிய பொறுப்பு அதிகாரிகளை பணியை விட்டு தூக்கிய எலான் மஸ்க், இனி டுவிட்டரில் ப்ளூடிக் பெறுவதற்கு மாதம் 8 டாலர் (இந்திய […]

Continue reading …

“ராவண கோட்டம்” டிரையிலர்!

Comments Off on “ராவண கோட்டம்” டிரையிலர்!

நடிகர் சாந்தணுவின் “ராவண கோட்டம்” டிரையிலர் தற்போது வெளியாகி உள்ளது. 8 ஆண்டுகளுக்கு முன்பு இயக்குனர் விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் “மதயானைக் கூட்டம்” திரைப்படம் வெளியானது. தற்போது அவர் தனது அடுத்த படத்தை முடித்துள்ளார். படத்திற்கு “இராவண கோட்டம்” என்ற வித்தியாசமான டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் நாயகனாக இயக்குனர் கே.பாக்யராஜின் மகன் சாந்தணு நடிக்கவுள்ளார். சினிமாவில் 15 ஆண்டுகளுக்கும் மேல் சாந்தணுவால் ஒரு வெற்றியைப் பெற முடியவில்லை. இப்படத்தை பெரிதும் நம்பி அவர் கடின உழைப்பை […]

Continue reading …

“ஆர்ஆர்ஆர்” படக்குழுவுக்கு வாழ்த்து கூறிய இசைஞானி!

Comments Off on “ஆர்ஆர்ஆர்” படக்குழுவுக்கு வாழ்த்து கூறிய இசைஞானி!

இசைஞானி இளையராஜா “கோல்டன் குளோப் விருது’’ வென்ற ஆர்.ஆர்.ஆர் படக்குழுவுக்கு வாழ்த்துக் கூறியுள்ளார். முன்னணி இயக்குனர் ராஜமௌலி. இவர் இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆல்யா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்டோர் நடித்து கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் “ஆர்.ஆர்.ஆர்.” விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் உலகம் முழுதும் பெரும் ஹிட்டானது. இந்த படத்தை ஆஸ்கர் விருது விழாவின் அனைத்து பிரிவுகளிலும் இப்படம் கலந்து கொண்டது. இப்படம் ஆஸ்கருக்கு தேர்வாகாத நிலையில், ஒரிஜினியல் பாடல் பிரிவில் இப்படத்தில் […]

Continue reading …

சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை!

Comments Off on சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை!

சென்னை உயர்நீதிமன்றம் ஆவின் ஊழியர்கள் 25 பேர் பணி நீக்கத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. சென்னை திருப்பூர் உள்ளிட்ட பால் உற்பத்தியாளர் சங்கங்களில் ஆவின் லஞ்ச ஒழிப்பு பிரிவு சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனைகளின் அடிப்படையில் 26 அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. 25 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது எந்தவித நோட்டீஸும் கொடுக்காமல் […]

Continue reading …