Home » Posts tagged with » Netrikkan (Page 430)

நெரிசலில் சிக்கித்தவிக்கும் திருப்பதி!

Comments Off on நெரிசலில் சிக்கித்தவிக்கும் திருப்பதி!

இது புரட்டாசி மாதம் என்பதாலும், குழந்தைகளுக்கு பள்ளி விடுமுறை என்பதாலும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்காக லட்சக்கணக்கான மக்கள் கூடியுள்ளதால் தரிசன ஏற்பாடுகளை தேவஸ்தானம் விரைவுபடுத்தி உள்ளது. புரட்டாசி மாதம் என்பதால் பக்தர்கள் தரிசனத்திற்காக திருப்பதிக்கு அதிகளவில் வருகை தருகின்றனர். தற்போது புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை என்பதால் திருப்பதியில் தரிசனத்திற்காக ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். கடந்த 12 மணி நேரமாக தரிசனத்திற்கு மக்கள் அனுமதிக்கப்படாததால் சுமார் 8 கி.மீ நீளத்திற்கு பக்தர்கள் கூட்டம் தரிசனத்திற்காக காத்துள்ளனர். லட்சக்கணக்கான […]

Continue reading …

சீமானின் வலியுறுத்தல்!

Comments Off on சீமானின் வலியுறுத்தல்!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அரசு கல்லூரி மாணவர் சேர்க்கையில் ஆளுங்கட்சியினரின் தலையீடுவதாக கூறியுள்ளார். மேலும் இவ்வாறு நடைபெறும் முறைகேடுகளை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதுபற்றி, அவர் சமூக வலைதளத்தில், “தமிழ்நாடு முழுவதுமுள்ள அரசு கலைக்கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கையில் பெருமளவு முறைகேடுகள் நடைபெறுவதாக மாணவர்கள் குற்றம் சாட்டுவது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. திமுகவினரின் தலையீட்டின் பேரில் நடைபெறும் இத்தகைய முறைகேடுகளுக்கு தமிழ்நாடு அரசு துணைபோவது வன்மையான கண்டனத்திற்குரியது. திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியில் […]

Continue reading …

பொறியியல் கல்லூரிகள் புதிதாக தொடங்க தடை!

Comments Off on பொறியியல் கல்லூரிகள் புதிதாக தொடங்க தடை!

2024ம் ஆண்டு வரை நாடு முழுதும் புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்க தடை நீடிக்கப்பட்டுள்ளதாக ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் தொழில்நுட்பம் சார்ந்த புதிய பாடப் பிரிவுகளை மட்டும் தொடங்க அனுமதியளித்து இந்திய தொழில்நுட்ப கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இருந்தாலும் தற்போது 443 கல்லூரிகள் மட்டுமே இயங்கி வருகின்றன. கடந்த 2018ம் ஆண்டு அமைக்கப்பட்ட குழு, நாடு முழுவதிலும் உள்ள பொறியியல் கல்லூரி குறித்து ஆய்வு செய்தது. இந்த ஆய்வுக்கு […]

Continue reading …

ராக்கெட்ராஜா கோவை சிறையில் அடைப்பு!

Comments Off on ராக்கெட்ராஜா கோவை சிறையில் அடைப்பு!

ராக்கெட்ராஜா கோவை சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மஞ்சங்குளம் கிராமத்தைச் சார்ந்த சாமிதுரை என்பவரை வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், நடுநந்தன்குளம் விக்டர் வயது 21, கோதைசேரி முருகேசன் வயது 23, தச்சநல்லூர் தாராபுரம் சஞ்சீவிராஜ் வயது 25, ஸ்ரீராம்குமார் வயது 21, ஆனந்த் வயது 21 உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இரு சமூக ரீதியாக நடந்த இந்த கொலை வழக்கில் பனங்காட்டு […]

Continue reading …

சசிதரூரை வரவேற்காததற்கு என்ன காரணம்?

Comments Off on சசிதரூரை வரவேற்காததற்கு என்ன காரணம்?

அக்டோபர் 17ம் தேதி காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் சசிதரூர் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகிய இருவரது ஆதரவும் யாருக்குமில்லை என வெளிப்படையாகக் கூறியுள்ளனர். ஆனால், சோனியா காந்தியின் ஆதரவு மல்லிகாஜூனே கார்கேவுக்கு இருப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது. சசிதரூர் தனக்கு ஆதரவு தேடி ஒவ்வொரு மாநிலமாக பயணம் செய்து வருகிறார். அந்த வகையில் இன்று தமிழகத்தில் சத்தியமூர்த்திபவன் […]

Continue reading …

விருந்தில் உணவருந்திய இளைஞர் உயிரிழப்பு!

Comments Off on விருந்தில் உணவருந்திய இளைஞர் உயிரிழப்பு!

கர்ப்பிணி பெண்ணுக்கு நடத்திய விழாவில் கலந்து கொண்டு உணவருந்திய செல்வ முருகன் என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்தார். இச்சம்பவம் திருவாரூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவாரூர் அருகே திருவாசல் மெயின் ரோட்டில் வசிப்பவர் செல்லத்துரை. இவரது மகன் விக்னேஷ். இவரது மனைவி மாரியம்மாள்(26). இவருக்கு 5 மாதம் கர்ப்பமாக இருந்ததால், அவருக்கு 5ம் மாதம் மருந்து கொடுக்கும் விழா நேற்று முன் தினம் நடந்தது. அப்போது, நடந்த விருந்தில் 5 வகையான […]

Continue reading …

மாணவி தற்கொலை; இளைஞர் போக்சாவில் கைது!

Comments Off on மாணவி தற்கொலை; இளைஞர் போக்சாவில் கைது!

10ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்தது தொடர்பாக தீனதயாளன் என்ற இளைஞரை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம் காட்டூர் வளாகம் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி மற்றும் மனைவி மகேஷ்வரிக்குஒரு மகள் (15) உள்ளார். இவர் அங்குள்ள அரசுப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். தந்தை மூர்த்தி 2 ஆண்டுகளுக்கு முன் மறைந்த நிலையில், தாயும் மகளும் வசித்து வந்தனர். அப்பகுதியில் வசித்து வரும் தீனதயாளன் (19) மாணவியுடன் பழகி வந்ததுள்ளார் […]

Continue reading …

நாளை திறனறி தேர்வுக்கான ஹால்டிக்கெட்!

Comments Off on நாளை திறனறி தேர்வுக்கான ஹால்டிக்கெட்!

நாளை மாணவர்களுக்கு ரூ.1,500 ஊக்கத்தொகையை பெறுவதற்கான திறனறி தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியாகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் படிக்கின்ற அனைத்து மாணவர்களுக்கும் ஊக்கமளிக்கும் வகையில், திமுக அரசு பல திட்டங்கள் மற்றும் அறிவிப்புகள் அறிவித்துள்ளது. அவ்வகையில், இவ்வருடம் முதல் தமிழகத்தில் 11ம் வகுப்பு படிக்கின்ற அனைத்து மாணவர்களுக்கும் தமிழ் திறனறி தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வில் அனைத்து வகைப்பாடப் பிரிவைச் சார்ந்த மாணவர்களும் கலந்து கொள்ளலாம். மாணவர்களுக்கு தமிழ் மொழியின் மீதான ஆர்வத்தை அதிகரிக்கும் பொருட்டு இத்தேர்வு நடத்தப்படுகிறது. […]

Continue reading …

சிறுவர்கள் உயிரிழப்பு பற்றி அமைச்சர் கீதா ஜீவன் தகவல்!

Comments Off on சிறுவர்கள் உயிரிழப்பு பற்றி அமைச்சர் கீதா ஜீவன் தகவல்!

அமைச்சர் கீதா கீவன் திருப்பூர் அருகே தனியார் காப்பகத்தில் 3 சிறுவர்கள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தகவல் அளித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் திருமுருகன் பூண்டியில் ஆதரவற்ற குழந்தைகள் விடுதியாகச் செயல்பட்டு வரும் விவேகானந்தா சேவாலய விடுதியில் காலை உணவைச் சாப்பிட்ட 3 சிறுவர்கள், ஒவ்வாமை ஏற்பட்டு, உயிரிழ்ந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக நலத்துறை அமைச்சர், கீதா ஜீவன், செய்தித்துறை அமமைச்சர் மு.பெ.சாமி நாதன் மற்றும் அதிகாரிகள் இன்று விடுதியை ஆய்வு செய்தனர். அப்போது, மாணவர்கள் […]

Continue reading …

நடிகர் கார்த்திக்கின் நன்றி பதிவு!

Comments Off on நடிகர் கார்த்திக்கின் நன்றி பதிவு!

சூப்பர் ஸ்டாருக்கும், உலகநாயகனுக்கும் நடிகர் கார்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றி கூறியுள்ளார். மணிரத்னத்தின் கனவு திரைப்படமான “பொன்னியின் செல்வன்” செப்டம்பர் 30ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று, ரு.300 கோடி வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் நடித்தவர்களை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட சினிமா பிரபலங்களும் பார்த்து பாராட்டி வருகின்றனர். “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் வந்தியத்தேவனாக நடித்துள்ள, நடிகர் கார்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில், “ரஜினி சார் உங்களிடமிருந்து அழைப்பு வந்தது […]

Continue reading …